Work From Home இல் வைஃபை வேகம் மிகவும் குறைவாக இருப்பது என்பது ஒரு சாபம் ஆகும்.
சமூக வலைத்தளங்களைப் பார்க்கும் போது அலட்டிக் கொள்ளாவிடினும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளைச் செய்யும் போதும் ஒன்லைனில் படிக்கும்
போதும் எதிர்நோக்குகின்ற பெரும் சவால்களில் ஒன்றாக ஸ்லோவான வைஃபை அதாவது மிகவும் வேகம் குறைந்த வைஃபை காணப்படுகின்றது.
சில சமயோசிதமான வேலைகளைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு தேடலாம் அதாவது சின்ன சின்ன டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை பின்பற்றுவதின் மூலம் உங்கள் வீட்டில் உள்ள ஸ்லோ வைஃபை சிக்னல் ஐ சரி செய்யலாம். அதென்ன சின்ன சின்ன வேலைகள் என்று யோசிக்கின்றீர்களா..?இதோ
வைஃபை ரவுட்டர் சுவிட்ச்சை OFF பண்ணி ON பண்ணவும்
மெதுவாக இருக்கும் வைஃபை வேகத்தை அதிகரிக்க உதவும் ஒரு எளிதான வழி இதுதான்.நீங்கள் வெறுமனே வைஃபை ரவுட்டரை ஓப் செய்து ஒன் செய்யலாம், இதையே மொடம் பாவிப்பவர்களும் செய்யலாம்.ஹோம் நெட்வேர்க் மற்றும் ஐ.எஸ். பிக்கு இடையேயான இணைய சமிக்ஞைகளை மொடம் தான் மொழிபெயர்க்கிறது, எனவே இணைய வேகம் மெதுவாக இருந்தால், மொடத்தை ரீசெட் செய்வது மிகச் சிறந்த செயல்களில் ஒன்றாகும்.
ரவுட்டர்க்கு கொஞ்சம் “இடமாற்றம்” கொடுங்கள்
உடனடியாக வைஃபை வேகத்தை அதிகரிக்க இது மற்றொரு வழி. சில நேரங்களில் வைஃபை சிக்னல்கள் சுவர்கள், மேற்கூரைகள், தளபாடங்கள் மற்றும் வீட்டிலுள்ள பிற பெரிய பொருள்களால் குறுக்கிடப்படுகின்றன அல்லது தடுக்கப்படுகின்றன.
இதனாலும் வைஃபை வேகம் குறையலாம்.
எனவே, நீங்கள் அமர்ந்திருக்கும் மற்றும் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் ரவுட்டரை வைப்பது நல்லது அல்லது எங்காவது பிற பொருட்களால் தொந்தரவு ஆகாதபடி வீட்டின் மையத்தில் வைப்பதும் நல்லது தான்.
வேற வழியே இல்லை.. ரவுட்டர்ஐ மாற்றி விடுங்கள் உங்கள் ரவுட்டர் மற்றும் மொடம் பழையதாகவோ அல்லது காலாவதியானதாகவோ இருந்தால் வைஃபை வேகம் குறையக் கூடும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இரண்டு உபகரணங்களில் ஒன்று செயல்படுவதில் சிரமத்தை எதிர்கொண்டாலும் கூட, வைஃபை வேகம் கடுமையாக குறையும். இந்த சூழலில், உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப உடனடியாக ஒரு நல்ல ரவுட்டர் மற்றும் மொடம் வாங்க வேண்டியது அவசியமாகிறது.
அப்டேட் செய்யவும்
உங்கள் வைஃபை வேகம் குறைந்து கொண்டே இருந்தால், உங்கள் ரவுட்டருக்கு கிடைக்கக்கூடிய மென்பொருள் அப்டேட்ஸ் ஏதேனும் உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும் ஆம் எனில், உங்கள் ரவுட்டரை அப்டேட் செய்து,உங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் வேகம் மற்றும் அது தொடர்பான எல்லா சிக்கல்களில் இருந்தும் விடை பெறலாம்.
ரவுட்டரின் ஆண்டெனாக்களை சரிசெய்யவும்
உங்கள் ரவுட்டருக்கு சரிசெய்யக்கூடிய ஆண்டெனாக்கள் இருந்தால், உடனடியாக வைஃபை வேகத்தை அதிகரிக்க அவற்றை அவ்வப்போது சரிசெய்வதை உறுதிசெய்யவும்.
குறிப்பாக, ரவுட்டர் ஆண்டெனாக்கள் பெரும்பாலும் பல திசைகளுக்கும் நகரும். அதாவது அவைகள் ஆண்டெனாவுக்கு செங்குத்தாக இருக்கும் அனைத்து திசைகளிலும் சமிக்ஞைகளை அனுப்பும்,எனவே, உங்கள் வைஃபை சிக்னல்களை பல தளங்களுக்கு விரிவாக்க வேண்டியிருந்தால், நீங்கள் அவ்வப்போது ஆண்டெனாவை சரி செய்வது நல்ல பலனை அளிக்கும்.
Windows மற்றும் MacOS க்கான WhatsApp App பயன்பாடு விரைவில் கொண்டுவரப்படவுள்ளது