Intel உடனான உறவை முடிக்கிறது அப்பிள்
அப்பிள் நிறுவனம் தன்னுடைய படைப்புக்களிலிருந்து intel ஐ நீக்குகிறது.
தொழில்நுட்ப இராட்சதர்களான அப்பிள் நிறுவனம் தன்னுடைய படைப்புக்களிலிருந்து intel ஐதவிர்த்துவிட்டு i-Phone ஐ முன்மாதிரியாக கொண்ட சிப்களை Mac இல் பயன்படுத்தப்போகும் இந்த முடிவானது, புதிய ஒரு சகாப்தத்துக்கான ஒரு விடியல் என்றே கூறலாம். ஆனாலும் தொழில்நுட்ப பச்சாதாபமாக இதை எண்ணி அவர்கள் குற்றவுணர்வு கொள்ளக் கூடுமா ? அதை எண்ணி அவர்கள் வருந்தக்கூடுமா ?
Bloombergனுடைய அண்மைய அறிக்கையின்படி, எல்லோரதும் நம்பிக்கைக்குரிய MAC ஆனது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அடிப்படிக் கூறு நிலையில் புதிய தயாரிப்பு முறையை பெறவுள்ளது.இதன் மூலம் அப்பிளானது இன்டெல் உடனான தனது நீண்ட மற்றும் ஒருவகையில் சிக்கலானஉறவிலிருந்து தம்மை வெளியேற்றுக்கொண்டு தமது சுய வடிவைப்பிலான ARM அடிப்படையானகணினி CPU க்களை வடிவமைக்க முடிவெடுத்துள்ளது. இவை ஏற்கனவே iPadகள் மற்றும்iPhoneகளில் பயன்படுத்தப்படும் A-தொடர் சிப் தொகுதியினை அடிப்படையாக கொண்டவை.
எவ்வாறு இருக்கப் போகிறது இந்த புது படைப்பு ?
அப்பிளானது அதனுடைய அடுத்த iPhoneஇல் பயன்படுத்தவுள்ளதாக முணுமுணுக்கப்பட்ட Systems on a chip (SOC) என அறியப்படும் மூன்று புதிய Mac ப்ரோசெஸ்ஸர்களை வெளியிடுவதற்காக திட்டமிட்டுள்ளது. அப்பிளினுடைய உட்புற செயற்பாடான பல புதிய ப்ரோசெஸ்ஸர்களை Mac க்காக உருவாக்கும் Project Kalamata பின்வாங்க மறுத்தது, அவர்கள் தங்களுடைய தற்கால நியோகஸ்தர்களான Intel இடம் இருந்து விலகுவதை குறித்து நிற்கிறது. நடப்பதைப் பார்த்தால் அப்பிளானது, இண்டெலை 5 nm உற்பத்தி தொழில்நுட்பம் மூலம் வீழ்த்தப்போவதாகத் தோன்றுகிறது. அப்பிளின் iPhone மற்றும் iPad களுக்கான ப்ரோசெஸ்ஸர் உற்பத்தியாளர்களான Taiwan Semiconductor Manufacturing Co Ltd, இதற்கான புதிய சிப் உற்பத்திகளை பொறுப்பேற்கும்.
முதலாவது அப்பிள் உருவாக்க சிப்பானது, 12 மையகங்களை (Cores) கொண்டிருக்குமென எதிர்பார்க்கபடுகிறது. அவற்றில் எட்டு அதியுச்ச-திறனுடைய சவால்களை நிறைவேற்றவும்,ஏனைய நான்கும் தாழ்-திறன் சவால்களை நிறைவேற்றவும் பிரிக்கப்பட்டுள்ளன. கடைசியாக வெளிவந்த Mac ஆனது நான்கு மையகங்களை (Cores) மட்டுமே கொண்டிருந்த இன்டெல் உடையசிப்களை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த வருடம், இறுதிக்கால் பகுதியில் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து சிப்களை வாங்கி அவற்றை கொண்டு 7.2 பில்லியன்டாலர்களை சம்பாதித்த அப்பிளின் இந்த பாய்ச்சலானது, இன்டெலுக்கு பேரிடியாக மாறும் என்பதில் ஐயமில்லை.
முழுமையாக சுய உற்பத்தியாக தயாரகும் ஒரு சிப் ஆனது புத்தம் புதிய ஒரு மடிக் கணனியாக வெளிவரும்.இதற்கான காரணமென்னவெனில், முதன்முறையாக வெளிவரும் முழுமையான சுயவடிமைப்புக்கொண்ட சிப் ஆனது, MacBooK Pro, iMac மற்றும் Mac Pro மேசைக் கணினிகளில் இன்டெல் வெளிப்படுத்தும் உச்ச பயனாளர் நிலையோடு போட்டி போட முடியாது என்பதுதான்.ஆனாலும் இந்த சர்வதேச முடக்கம் அப்பிளின் செயற்பாடில் கல்லைத் தூக்கிப்போட்டுள்ளது.ஆகவே இந்த சிப்பினுடைய வளர்ச்சியில் நாம் சிறிய சீர்குலைவை காணக்கூடியதாக உள்ளது.
தொழில்நுட்ப இராட்சதனின் இந்த சுதந்திரமான உற்பத்தியாளர் ஆவதற்கான (மற்றும் Huwaeiக்கும் Googleக்குமான திடீர் வீழ்ச்சிக்கான வாய்ப்புக்களை தவிர்க்கவும்) இந்த முடிவுவெற்றியளிக்குமா என காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.நிச்சயமாக நாம் மட்டும் நகங்களை கடித்துக்கொண்டு இருக்கப்போவது இல்லை(ஹலோ, இன்டெல்)!
அப்பிள்பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த பக்கத்துக்கு செல்லவும்.
image source:https://outthisyear.com/apple-to-ditch-intel-and-use-iphone-chips-in-macs/