ஆண்ட்ராய்டு!!
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
விச் எனும் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்களை ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர் என
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் இனிமேல் எந்த விதமான பாதுகாப்பு அப்டேட்களையும் பெறாது என்பதால் அவைகள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளன.
இது தீம்பொருள் தாக்குதல் அதாவது மல்வேர் மற்றும்
தகவல் திருட்டு போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கும்.
உலகெங்கிலும் உள்ள 40 சதவீதம் ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு அப்டேட்களை பெறவில்லை என்பதையும் இந்த ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
மோட்டரோலா ,சாம்சங், சோனி மற்றும் இது போன்ற பிராண்டுகளில் இந்த
ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பது ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து உள்ளனர்.
மேலும் அவற்றை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதையும்
கண்டறிந்துள்ளனர்.
குறிப்பிட்ட ஸ்மார்ட் போன்களில் இருந்து ஹேக்கர்களால்
குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட தகவல்களை எளிதில் திருடலாம். இந்த
ஸ்மார்ட்போன்கள் மீதான முழு கட்டுப்பாட்டையும் பெறலாம். பாதுகாப்பு
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சமீபத்தில் பாதுகாப்பு ஆதரவு தன்னை இழந்த
போன்களுக்கு உடனடியாக எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் நாட்கள் செல்ல
செல்ல பாதுகாப்பு அப்டேட்கள் எதுவுமில்லாமல் அவைகள் ஹேக்
செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக வளரும்.
அதாவது உங்களிடம் ஒரு பழைய போன் இருந்தால் உங்களுக்கு அதிக ஆபத்து என்று அர்த்தம்.அதாவது 2012 அல்லது அதற்கு முன்பு அறிமுகமான ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தும் எவரும் ஆபத்தில் உள்ளனர் என்று இந்த ஆய்வின் வழியாக தெரிய வந்துள்ளது. தகவல் உதவி : Techகுரல்
இது போன்ற சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களது தொழில்நுட்ப பக்கத்துக்கு செல்லுங்கள்
image source: https://gadgets.ndtv.com/apps/news/android-apps-tracking-without-permissions-privacycon-google-play-android-q-2066852