தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதி ராவ் ஹைத்ரி. செக்க சிவந்த வானம்,சைக்கோ படங்களிலும் நடித்தார்.
தற்போது ஹேய் சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்துஅதிதி ராவ் அளித்துள்ள பேட்டியில்,சினிமாவுக்கு மொழி எல்லையே
இல்லை. கடின உழைப்பும், அழுத்தமான கதையும் இருந்தால் வெற்றி
வந்து சேரும்.
தியேட்டர், ஓ.டி.டி.ஆகிய இரண்டிலும் வெளியாகும் படங்களுக்கும் லாபமும், நஷ்டமும் இருக்கும்.
ஓ.டி.டி. தளம் வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்களையும் எளிதாக போய் சேர்ந்துவிடும். தியேட்டர்களில் படம் பார்ப்பது என்பதுஒரு மேஜிக். ஊரடங்கில் தியேட்டர்களை மூடி விட்டதால் ஓ.டி.டி. தளம் சிறந்ததாக ஆகிவிட்டது.
ஊரடங்கில் சினிமா மொத்தமாக முடங்கிவிட்டது.நான் எந்த மொழி படத்தில் நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தில் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.படங்களில் ஆர்வத்தோடு நடித்தால் கஷ்டம் தெரியாது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான் நடிகையானேன். அவர் என் உலகையே மாற்றிவிட்டார். நடிகையாக இருப்பது மகிழ்ச்சி என்றார்.