மிகப்பெரிய பேஸ் புக் logout தாக்கமானது பயனர்களை சமூக ஊடகத்திலிருந்து வெளித்தள்ளியது.
பேஸ்புக்கில் Logout சிக்கல்
சமூக ஊடக தளமான பேஸ்புக்கிற்கு மர்மமான குறுக்கீடு ஏற்பட்டது குறித்து இணையம் குழப்பமடைந்தது, ஏனெனில் பயனர்கள் தங்கள் முகப்பு பாவனை முடக்கப்பட்டதாக தெரிவித்ததால் அவர்கள் பேஸ் புக்கில் தங்கள் கணக்குகளுக்குள் மீண்டும் உள்நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதாவது, வழக்கமாக எல்லோரும் பயன்படுத்தும் பேஸ்புக் ஆப்பிள் ஒருமுறை உள்நுழைந்தால் மீண்டும் அதனை செய்யத் தேவையில்லை. நேரடியாக பயன்படுத்தலாம். ஆனால், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தாக்கம், வழக்கமாக நாம் பேஸ் புக்கில் செய்திகளை வாசிக்கும் NewsFeed பகுதியை அசைய விடாமல் செய்து (Freeze) பேஸ் புக்கை விட்டு வெளியேறி குறித்த பயனரை மீண்டும் தங்கள் கணக்குளை உள்நுழையக் கூறியது.
வலைத்தளம் மற்றும் பயன்பாட்டு கண்காணிப்பு சேவையான downdetector.com படி, இது வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.
சனிக்கிழமை காலையளவில், பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தோன்றியது.
என்ன நடந்தது ?
“சிலர் தற்போது தங்கள் பேஸ் புக் கணக்குகளை அணுக மீண்டும் உள்நுழைய வேண்டும் என்ற அறிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இது ஒரு உள்ளமைவு மாற்றத்தின் காரணமாக இருந்தது என்று நாங்கள் நம்புகிறோம், கூடிய விரைவில் விஷயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறோம்.”
வெகுஜன மக்களின் இவ் வெளியேற்றமானது பயனர்களிடமிருந்து மீம்ஸையும், ஒரு சில சதி கோட்பாடுகளையும் விரைவாக கிளப்பியது.
அவற்றில் ஒன்று :
“பேஸ்புக் logout ” என்பது மக்களின் கவனத்தை வேறு ஏதோவொன்றிலிருந்து விலக்க மற்றொரு வழியாக இருந்தால் என்ன செய்வது?
நீங்கள் எல்லோரும் அதனை பற்றி பேசி வளர்க்கிறீர்கள்.
– Dylan McCarty என்பவரது பேஸ்புக் பதிவு
அதிகளவில் மீம்ஸ் பகிரப்பட்டதோடு வழக்கமாக கேலிக்குள்ளாகும் பேஸ் புக் மீண்டும் தாக்கப்பட்டது.
இது போன்ற வேறு தொழில்நுட்பத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு தொழில்நுட்பம் பகுதியை பார்வையிடுங்கள்
எம்மை எமது பேஸ் புக் பக்கத்தில் பின்தொடரவும்