இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
இந்தக்கட்டுரை உண்மையில் எளிமை என்றால் என்ன என்பது பற்றியும் எளிமையின் முக்கியத்துவத்தையும் சொல்கிறது.
எளிமையான வாழ்க்கையின் சிறப்பைக் கூறும் 10 குறிப்புகள்
எளிமை என்பது தோற்றத்தில் மட்டுமல்ல எளிமை என்பது மனதிலும் சுபாவத்திலும் புத்தியினுடைய அகங்காரமற்ற தன்மையிலும் கலந்து இருப்பதாகும்.எளிமை என்பது தோற்றத்தை அல்ல உயர்ந்த பண்பை வெளிப்படுத்துவதாகும். எளிமை என்பது அசுத்தம் அல்ல அது சுத்தத்துடன் கூடிய தனித்தன்மையாகும்.
எளிமை நல்ல மனிதர்களை அருகில் வரச் செய்வதாகும். எளிமை அடக்கத்துடன் கூடியது.அடக்கம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும் அதில் எளிமை ஜோதியாக சுடர்விடும். எளிமை என்பது ஏழ்மை தன்மை அல்ல. எளிமை என்பது சாதாரண தன்மையிலும் தேஜோமயமாக விளங்குவது.எளிமை தன்மைக்குள் சிக்கனமும் இருக்கும் சேமிப்பும் இருக்கும். எளிமை என்பது ஆடம்பரமற்ற உயர்ந்த அந்தஸ்து. எளிமை ஏளனம் அல்ல அது உயர்ந்த கோபுரம்.அது பட்டை தீட்டப்பட்ட பிரகாசிக்கும் வைரம்.
எல்லோராலும் எளிமையாக இருந்துவிட முடியாது. அனுபவஸ்தர்கள் மட்டுமே எளிமையாக இருப்பார்கள்.வாழ்க்கையின் ஆரம்ப பாடமும் எளிமை இறுதி பாடமும் எளிமை என்பதை அனுபவஸ்தர்கள் மட்டுமே புரிந்து இருப்பார்கள். அதனால் அமைதியாக எளிமையாக இருப்பவரிடம் ஏகப்பட்ட ரகசியங்கள் அடங்கியிருக்கும். அவர்கள் இவ்வுலகில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களாக இருப்பார்கள்.
எளிமையில் சாதாரணம் இருக்கும்.சாதாரணத்தில் அசாதாரணம் இருக்கும். எளிமையின் வேர்கள் எஃகு போன்றது. எளிமையில் அன்பு வெளிப்படும். எளிமையாக இருப்பது வேறு எளிமையாககாட்டிக் கொள்வது வேறு.எளிமையாக காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் எளிமையானவர்கள் அல்ல. உண்மையான எளிமையானவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களது பேச்சில் பணிவு இருக்கும் செயலில் நிதானம் இருக்கும்.எதிலும் அவரிடம் சுயநலம் இருக்காது.
எளிமை நிறைந்தவர்கள் மகான்கள் ஆவார்கள். உண்மையான எளிமை உடையவர்கள் பிறரின் மனதின் அன்பிற்கு பாத்திரமானவர்கள். எளிமை அனைவருக்கும் இருப்பதை பகிர்ந்தளிக்கும்.எளிமையான
ஒருவர் எல்லோரும் தன்னுடையவர்கள் என நினைப்பார்கள்.எளிமையானவர்கள் எல்லோரிடமும் இருந்தாலும் தனித்தன்மை நிறைந்து விளங்குவார்கள். எளிமையில் தெய்வீகம் வெளிப்படும்.
- எளிமை என்பது உரக்கப் பேசாதது.
- பிறர் மனம் புண்பட பேசாதது எளிமை.
- எளிமை இருக்குமிடத்தில் கடின வார்த்தைகள் வெளிப்படாது.
- எளிமை சாந்தத்தை பிறருக்கு போதிக்கும்.
- எளிமை என்ற குணம் யாவரையும் கை வணங்கச் செய்யும்.
- எளிமையானவர்கள் எப்பொழுதும் இனிமையானவர்கள்.
- கோபம் இல்லாத இடமே எளிமை நிறைந்த இடம்.
- பொறாமை இல்லாத இடமே எளிமை நிறைந்த இடம்.
- ஆணவம் இல்லாத இடத்தில் எளிமை வீற்றிருக்கும்.
எளிமை தந்தை ஈசன் வீற்றிருக்கும் இடமாகும். தந்தை ஈசன் எளிமையானவர் என்பதற்காக அவருக்கு எளிமையான ஆடைகளே அணிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக அவரது அடியார்களும் மிக எளிமையான ஆடைகளையே அணிகின்றனர். திருநீறு அணிவது கூட எளிமையின் அடையாளம் ஆகும். மூன்று பட்டைகளின் அடையாளம் கூட எளிமையாக இரு, அன்பாக இரு, அமைதியாக இரு என்பதாகும். ஏனெனில் இவ்வுலகில் எல்லாமே ஒரு நாள் சாம்பலாக கூடியது என்பதாக பொருள்படும்.எளிமையில் தான் ஆன்ம நிலை வெளிப்படும்.எளிமையான ஒருவர் முகத்தில் ஆன்ம ஜோதி பிரகாசிக்கும். எல்லாம் இருந்தும் எதுவுமில்லை என்பவரே எளிமையானவர் தெளிவானவர்.
எளிமைக்கு உதாரணமாக உலகில் நிறைய மகான்கள் வாழ்ந்து சென்றுள்ளனர்.
- வாழ்வில் உயர நினைப்பவர் எளிமையுடன் சத்தியம் என்ற உயர்ந்த பண்பையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
- எளிமை நிறைந்தவரிடம் அனைவரும் அருகில் சென்று பழகுவர்.
- எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும்.
- எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும்.
- எளிமை நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும்.
- வறுமையால் எளிமை அல்ல, தம்மிடம் எவை இருந்தாலும் அவை அனைத்தும் தந்தை ஈசனுடையது என்பதே எளிமை.
- வாழ்வை உணர்ந்தவர் எளிமையாக இருப்பார். அதை உணராதவரோ ஆடம்பரம் செய்வார்.
- சிக்கனம் சேமிப்பு தயாளம் நன்னடத்தை இவை எல்லாம் எளிமையில் அடங்கியிருக்கும்.
எளிமை நிறைந்தவர் தானாகவே உயர்ந்த நிலை அடைவார். எளிமை வேஷம் அல்ல விவேகம். யாருக்கும் தீமை செய்யாமல்,தீமை நினையாமல்,தானும் எவ்விதத் துன்பமும் இன்றி பிறருக்கும் எவ்வித துன்பத்தையும் கொடுக்காமல் அமைதியாக வாழ்வதே எளிமை. யாரையும் ஏளனம் செய்யாததே எளிமை. ஏளனமாக இருப்பவர்களையும் ஏற்றம் செய்வதுதான் உண்மையான எளிமை.
- எளிமையானவருடைய பார்வையில் வெறுப்பு இருக்காது.அந்தப் பார்வையில் கருணை நிறைந்திருக்கும்.
- எளிமையானவர் எல்லோரையும் தனதானவராக நினைப்பார்.
- எளிமை என்பது மனித வாழ்வின் கிரீடத்தில் உயர் ரத்தினம் ஆகும்.அந்த எளிமை நிறைந்த ரத்தினமானது உலகம் முழுவதும் ஒளி வீசி பிரகாசிக்கும்.
- எளிமை என்பது கோவிலில் குடியிருக்கும் தெய்வத்தின் தோற்றத்தை கொண்டவராக ஒருவரை மாற்றிவிடும்.
உலகில் ஏமாற்றுவதற்காக நிறைய மனிதர்கள் எளிமை வேஷம் போடுகின்றார்கள். ஆனால் உண்மையான மனிதனோ அதை வேஷம் என்பதை கண்டுபிடித்து விடுவான். எனவே, சத்தியமாக இருங்கள் எளிமையாக இருங்கள், அன்பாக இருங்கள்,அஹிம்சை நிறைந்தவராக இருங்கள் அப்பொழுது உயர்ந்த மனிதராக உலகில் நீங்களும் ஒளி வீசும் நட்சத்திரம் ஆவீர்கள்.
நன்றி முகநூல் பதிவு