மன ஒழுக்கம்
மனத்தை ஒழுங்கு செய்வதற்கு முன் மனம் என்றால் என்ன? என்ற ஞானம் மிக மிக அவசியமானது. இந்த அடிப்படையான ஒன்று மனக்கட்டுப்பாடு என்பது ஒரு கனவுலக சுவையாகவே இருக்கும்.
மனத்தின் சொரூபத்தையும் அதன் தன்மைகளையும் மிக நுணுக்கமாக அறிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படையான பொதுவான அனுபவங்களைக் கூர்ந்து பார்ப்போம். ஒருவன் பெற்றிருக்கும் மனோநிலையை அவன் அனுபவிக்கும் மகிழ்வின் அளவு கோலாக இருக்கிறது.
- மனம் அமைதியாய் இருந்தால் நான் அமைதியாய் இருக்கிறேன்
- மனம் சஞ்சலப்பட்டால் நான் சஞ்சலப்படுகிறேன்
- மனம் தெளிவானால் நான் தெளிவாகிறேன்
இது எல்லோருடைய அன்றாட அனுபவம் கூற்றுகள் மனத்தின் உண்மையான தன்மைகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகப் படிப்புகளிலும் உணர்த்தப்படுவது இல்லை. ஆனால் அனுபவ ரீதியாக மனதை நாம் பார்க்கும் பொழுது எந்த புத்திசாலியும் ‘மனம் என்பது எண்ணங்கள்’ என்று கூறுவான். உண்மைதான் ஆனால் இது மனத்தின் முடிவான விளக்கமாகிவிடாது எண்ணங்கள் இருந்தால் மனதின் இருப்பை உணர முடிகிறதே எப்பொழுது எண்ணங்கள் இல்லையோ அப்பொழுது மனத்தின் இருப்பு உணரப்படுவதில்லை.
ஆகவே அங்கு மனம் ஒன்று இருப்பதை நாம் உணர்வதில்லை எண்ணமும் மனமும் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இணைந்திருக்கின்றன. எண்ணங்கள் அமைதியின்றி ஆர்ப்பரித்தால் மனமும் சங்கடப்பட தொடங்குகிறது.
எண்ணங்களும் அதன் தன்மைகளும் எப்படியோ அப்படியே மனமும் மனத்தின் குணமும் ஆனால் எண்ணத்திற்கும் மனதிற்கும் ஒரு உறவு உண்டு. ஒரு எண்ணம் தனித்து ஒரு மனதை உருவாக்குவதில்லை நம்முடைய சமயம் தந்த சான்றோர்களும் எண்ணத்திற்கும் மனதிற்கும் உள்ள உறவை நீருக்கும் நீரால் அமைக்கப்பெற்ற நதிக்கும் ஒப்பிடுகின்றனர்.
நீர்மட்டம் தனித்து நின்று நதியாக மாறுவதில்லை தேங்கிநிற்கும் குளத்து நீரை நாம் நதி என்று அழைப்பதில்லை. நீர் தொடர்ந்து ஓடுகின்ற பொழுது அந்த ஓட்டத்தின் வேகமும் வேகத்தால் விளைந்த சக்தியும் சேர்ந்து நதியாக மாறுவது நம் அறிவுக்குப் புலப்படும் ஒரு விஷயமே. அதேபோல் எண்ணங்கள் நமக்குள் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக நடைபோடுகையில் அந்த எண்ணங்கள் உருவாக்கும்.
வலிமை மிக்க உட்கருவில் மனம் எனப்படும் ஆற்றில் காணும் நீரின் தன்மை எப்படியோ அப்படியே நதியின் தன்மையும் நீர் கலங்கி இருக்க நதியும் கலங்கிய நதி நீர் தெளிவானால் நதியும் தெளிவாகியது. நீரின் வேகம் அதிகரிக்க நதியின் வேகமும் அதிகரிக்கும். நீர் எப்படியோ அப்படியே நதியும் இதேபோல் எண்ணங்கள் எப்படியோ மனமும் நல்ல எண்ணங்களும்.
தீய எண்ணங்களும் தீய மனமும் இருந்து அவனுக்கு அழகிய உடலும் ஆடம்பரமான வாகனமும் பெரிய வீடும் இருந்தாலும் அவன் மனம் தீயது என்றால் அவன் சிறியவனே. ஆனால் அவன் நல்ல மனம் படைத்தவனாக இருந்தால் உலகம் முழுவதும் அவனை அன்புடன் நெருங்குவதை நாம் காணலாம்.
ஆகவே கூடிய அளவிற்கு சிறிய செயலுக்கும் திட்டமிட்டு மன வளர்ச்சியை பெறுவது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. எல்லோராலும் உருவாக்கக்கூடிய வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு திறன் தேர்ந்தெடுத்த சிந்தனைகள் மூலமும் உற்சாகமான சில திட்டங்கள் மூலம் இப்போதும் காணப்படும் மனம் என்னும் ஆற்றில் கண்ட தேவையற்ற எண்ணங்கள் என்னும் கழிவுகளை நீக்கி விடலாம்.
ஒரு எண்ணத்தை தேவையற்றது என்று நாம் ஒரு முறை உணர்ந்து அதற்கு ஒரு தேவையையும் பயத்தையும் நாமே கற்பித்து அதை அவசியமானதாக மாற்ற முடியாமல் அறிந்த வினாடியிலேயே அதை நாம் மனதில் இருந்து அகற்ற வேண்டும் தெளிவான சிந்தனை ஒழுக்கம் இருந்த வேலையை எளிதில் செய்து மனதிற்கு ஒரு புதிய சக்தியை கொடுக்கும் அறிவு நல்ல ஒரு ஆயுதம்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்