PUBG ஒரு புதிய “ஃப்ரேமரேட் முன்னுரிமை” பயன்முறையை அறிமுகப்படுத்துகிறது. இது சில கன்சோல்களில் 1920 x 1080 தெளிவுத்திறனுடன் இந்த போர் உலக விளையாட்டை 60fps அளவுக்கு தெளிவாக விளையாட அனுமதிக்கும்.
அக்டோபர் மாதம் வெளியான 9.1 புதுப்பித்தலுடன் PUBG இல் ஃபிரேம்ரேட் முன்னுரிமை சேர்க்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 29 அன்று கன்சோல்களில் வெளிவருகிறது. இது பிளேஸ்டேஷன் 4 ப்ரோ மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும், அடிப்படை கன்சோல்கள்களுக்கு அல்ல.
PUBG டெவலப்பர்கள் கருத்து
பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் இவ்விளையாட்டு இயக்கப்படும் போது ஃபிரேமரேட் முன்னுரிமை கிடைக்கும் என்று டெவலப்பர்கள் தெரிவித்தனர். “கடுமையான சோதனைக்குப் பிறகு, விளையாட்டு செயல்திறன் மிகவும் மிருதுவாக உள்ளது மற்றும் நிலையானது என்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அடுத்த சந்ததி சக்தியுடன் வேகமான லோடிங் மற்றும் குறைவான ஃபிரேம் ட்ராப் என்பவற்றை நாம் அடைந்துள்ளோம் ” என்று டெவலப்பர்கள் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தனர்.
நவம்பர் மாதத்தில் கன்சோல்கள் மீள்வழி இணக்கத்தன்மை வழியாக தொடங்கும்போது பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் ஆகியவற்றில் PUBG இயக்கப்படுவதோடு நீங்கள் விளையாடும் அதே PUBG கணக்கை வைத்திருக்க முடியும். இது கிராஸ்-பிளாட்ஃபார்ம் பிளேயுடன் கிராஸ்-ஜென் மல்டிபிளேயிங்கை ஆதரிக்கிறது. அதாவது எக்ஸ்பாக்ஸ் ஒன், பிளேஸ்டேஷன் 4, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எஸ் ஆகியவற்றில் உள்ள வீரர்கள், மற்றும் பிஎஸ் 5வீரர்கள் அணிசேர்ந்து ஒருவருக்கொருவர் எதிராக விளையாடலாம்.
எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன்எக்ஸ் கேம் உருவாக்கத்தைப் பயன்படுத்துகிறது. இது ஃபிரேம்ரேட் முன்னுரிமை விருப்பத்தின் வழியாக 60fps இல் இயங்கும். இருப்பினும், குறைந்த சக்திவாய்ந்த எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் கேம் உருவாக்கத்தைப் பயன்படுத்துகிறது, இது 30fps வேகத்தில் இயங்குகிறது. “எதிர்காலத்தில் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் கன்சோல்களில் ஃபிரேம்ரேட்டினை உயர்த்துவதற்கான விருப்பத்தை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று டெவலப்பர்கள் தெரிவித்தனர்.
நீங்கள் எதிர்பார்ப்பது போல, பிஎஸ் 5 ஆனது பிஎஸ் 4 ப்ரோ கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. ஃப்ரேமரேட் முன்னுரிமை விருப்பத்தைப் பயன்படுத்துவது உங்களுக்கு 60fps வரை கிடைக்கும்.
அடிப்படை கன்சோல்களில் செயல்திறன் துறையில் போராடும் PUBG க்கு இந்த ஃப்ரேம்ரேட் முற்பாய்ச்சல் வரவேற்கத்தக்கது. ஆனால் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் இல் விளையாடும் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள், ஏனெனில் ஃபிரேம்ரேட் எக்ஸ்பாக்ஸ் எக்ஸைப் போலவே பிரேம்ரேட் 60 ஐ அடையாது. ஆனால் அதையும் சீக்கிரம் டெவலப்பர் சரி செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.
இது போன்ற வேறு கேமிங் தகவல்களை தெரிந்து கொள்ள எமது கேமிங் பக்கத்துக்கு செல்லவும்
முகப்பு உதவி : CDN