இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 4 மூன்றாவது வாரம் குறித்த கண்ணோட்டத்ததை தற்போது பார்க்கலாம்.
அமைதியாக இருந்த பலரது சுயரூபங்கள் கடந்த வாரம் வெளிப்பட்டு இருந்தன முன்னைய சீசன்களை விடவும் முற்றிய தகராறு அவதூறான சொற் பிரயோகங்களும் ரசிகர்களை வியப்படைய செய்தது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் மூன்றாவது தலைவராக ரியோ ராஜ் டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவரது தலைமைத்துவம் என்னவோ வரவேற்கும் படியாக இருந்தது. இருப்பினும் சில சமயங்களில் வெளிப்பட்ட முன்கோபம் ரசிகர்களில் மனதில் வெறுப்பையும் உருவாக்கி இருந்தது.
கடந்த வாரம் லக்சரி பட்ஜெட்க்கான நாடா காடா என்ற டாஸ்க் நடைபெற்றது இதில் ஹவுஸ்மெட் இரண்டு குழுக்களாக பிரிந்து அரசர்கள் ஆக ஒரு அணியும் அரக்கர்களாக ஒரு அணியும் வேடமிட்டு போட்டியிட்டனர். இதன் இரண்டாவது நாளில் அரசர்கள் அசுரர்களாகவும் அசுரர்கள் அரசர்கள் ஆகவும் வேடமிட்டு போட்டி போட்டனர். இதில் இரண்டாவது நாளில் சுரேஷ் சக்கரவர்த்தி சனத்திக்கிடையில் தகராறு உருவானது . இருந்த போதிலும் கமல்ஹாசன் வந்த வார இறுதியில் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. அத்துடன் சிறந்த போட்டியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட சனம், அர்ச்சனா, பாலாஜி ஆகியோருக்கிடையில் தலைவருக்கான போட்டி வைக்கப்பட்டது எனவே கமல்ஹாசன் நடத்திய ஓட்டெடுப்பில் அடுத்த தலைவராக அர்ச்சனா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாரம் குறைந்த வாக்கெடுப்புடன் ஆஜித் எவிக்ட் ஆக தெரிவு செய்யப்பட்டு இருந்தார் அவர் கையில் இருந்த துடுப்பு சீட்டை பயன்படுத்தி தொடர்ந்தும் பயனிக்கிறார். நிராயுதபாணியாக இருக்கும் அவர் இனிமேல் எவ்வாறு நடந்து கொள்வார் என பார்ப்போமே
ஷிவானிக்கு உள்ளேயும் ஒரு அம்மா கிடைத்து உள்ளார்கள். அக்கான்னு சொல்லி இருக்கலாம்.பாவம் அவங்க!
இந்த வாரம் அர்ச்சனாவின் ஆட்டம் இன்னும் அதிகமா இருக்குமா? அர்ச்சனாவின் தலைமையில் நடைபெற போகும் இந்த வாரம் பிக்பாசை பொறுத்திருந்து பார்ப்போம் துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss
பிக்பாஸ் வாரம் 2 உள்ளே முகமூடிகள் கழன்று கொண்டிருக்கின்றன!!
கட்டுரையை வாசிக்க மேலே அழுத்தவும்