கடந்த காலங்களில், மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு குறித்த கடுமையான விதிகள் இருந்தன. ஆனால் நவீன சமுதாயத்தில்,உள்ள நவநாகரிக பெண்களிடம் இந்த கோலங்கள் மங்கலாகிவிட்டன. மேலும் நடத்தை விதிகள் மாறியுள்ளன. ஆனால் இது சற்று மேலைத்தேய பாணியோடு தொடர்புடையது என்பதனால் அதனை நாம் முற்றாக அறிந்திருப்பதில்லை.
பொது இடங்களில் நவநாகரிக பெண்கள் கடைப்பிடிக்கும் 9 பழக்கங்கள்
உங்கள் நாற்காலியில் சாய்ந்து இருக்க வேண்டாம்
ஒரு பெண் ஒரு மேஜையில் அமர்ந்தால், அவள் நாற்காலியின் நடுவில் உட்கார வேண்டும். நாற்காலிக்கும் உங்கள் முதுகிற்கும் இடையில் சிறிது இடத்தை விட்டு இருப்பது மிகவும் முக்கியம். இந்த உடல் நிலை டச்சஸின் போஸ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் நேராக ஆனால் சுதந்திரமாக உட்கார வேண்டும், உங்கள் உடலுக்கும் மேசையின் விளிம்பிற்கும் இடையிலான இடைவெளி உங்கள் மணிக்கட்டுக்கும் விரல் நுனிக்கும் இடையிலான தூரத்திற்கு சமமாக இருக்க வேண்டும். தவிர, ஒரு பெண்ணை அவளது தோரணையால் மதிக்கிறார்கள் என்பதனால் – இது உங்களை தைரியமான ஒருவராக அடையாளப்படுத்தும்.
வேலைகளை பொறுப்பேற்க பயப்பட வேண்டாம்
ஒரு மதிக்கப்படும் பெண் ஒரு போதும் உடல் உழைப்பைத் தவிர்ப்பதில்லை. உதாரணமாக, போர்க்காலத்தில், பெரிய டச்சஸ் மற்றும் பேரரசிகள் மருத்துவமனைகளில் கருணையின் சகோதரிகளாக பணியாற்றினர். அன்றைய காலம் போல இன்று உங்களால் பணியாற்ற முடியாவிட்டாலும் வெளிக்கள செயற்பாடுகள் மற்றும் தோட்ட நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
ஒப்பனை விதிகளைப் பின்பற்றுங்கள்
இருண்ட கண்மை மற்றும் சிவப்பு உதட்டுச்சாயம் என்ற இரண்டும் ஒன்றாக அழகிய ஒப்பனையுள்ள முகத்தில் நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள். இந்த அழகு சாதனங்களை தேவைக்கேற்ப தனித்தனியாக அணிய முடியும். நடிகைகள் மற்றும் ஏனைய பெரிய நபர்களில் அழகாக இருக்க என கவர்ச்சிப் படலமாக இருப்பவர்களை விட மற்றவர்களால் அழகுக்காக அதிகம் மதிக்கப்படும் நபர்களின் ஒப்பனை வடிவங்களைப் பாருங்கள்.
உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் மதிப்பளிக்கவும்
மற்றவர்களை உபசரிப்பதற்காக மட்டுமே உங்களுடைய காலத்தை வீணடிக்காதீர்கள். உங்களை கவனித்துக் கொள்வதற்கான நேரம் மற்றும் உங்கள் இன்னோரன்ன ஆசைகளை நிறைவேற்றுவதற்கான நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை முழுமையாயாக வாழ்வதற்கும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும் பழகுங்கள். வீணாக நேரத்தி செலவழிக்க கூடாது.
உங்கள் தொலைபேசியை மேசையில் வைக்காதீர்கள்
ஒரு நவீன பெண் ஒரு கஃபே அல்லது உணவகம் போன்ற பொது இடத்தில் இருக்கும் போது தனது தொலைபேசியை மேசையில் வைக்க மாட்டார். இந்த சாதனத்தில் அவள் அதிக கவனம் செலுத்த மாட்டாள். தவிர, அவரது ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், மேலும் அதை அந்நியர்களிடமிருந்து மறைப்பது நல்லது.
உரையாடல் விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
நவீன காலங்கள்பல மாற்றங்களைச் செய்துள்ளன. அதனால்தான் குறுஞ் செய்திக்கான சிறப்பு விதிகள் தோன்றின. பெண்கள் 2 காரணங்களுக்காக தங்கள் செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கக் கூடாது (உங்கள் அன்புக்குரியவர்களைத் தவிர). முதலாவதாக, அவள் பேசும் நபருக்கு, அவளுக்கு வேறு தனிப்பட்ட விஷயங்கள் இருக்கக்கூடும் என்பதைத் தெரியப்படுத்த இது உதவும். இரண்டாவதாக, அவசரமான ஒன்றைப் பற்றி ஒரு நபருக்குத் தெரிவிக்க விரும்பினால் அவர்களை அழைப்பது சரியானது என்று அவளுக்குத் தெரியும். உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நபருக்கு மரியாதை நிமித்தமாக அவள் 20 நிமிடங்களுக்கு மேல் பதிலனுப்பாமல் இருக்கவும் கூடாது.
உங்கள் இடுப்பில் கைகளை வைக்க வேண்டாம்
உங்கள் இடுப்பில் கைகளை வைத்திருப்பது அவ்வளவு ஒன்றும் அழகான நிலை அல்ல. நிச்சயமாக, நாம் அனைவரும் ஒரு புகைப்படத்துக்கு நிற்கும்போது நம் கைகளை எங்காவது வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொதுவான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில், உங்கள் கைகளை உங்கள் உடலுக்கு முன்னால் வைத்திருப்பது நல்லது, எனவே உங்கள் உடல் நிலை அழகிய நிலையை வெளிக்காட்டும்.
பாராட்டு வார்த்தைகளை மிதமாகப் பயன்படுத்துங்கள்
ஒரு நல்ல வளர்ப்பைக் கொண்ட ஒரு பெண் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் பாராட்டுக்கான சொற்றொடர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றினாலும், இது உண்மையல்ல. “நன்றி” மற்றும் “தயவுசெய்து” போன்ற சொற்களை தேவைக்கு மீறி அதிகமாகப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில், அவற்றின் பொருள் வெறுமனே மதிப்பிழந்து, முகஸ்துதி என்று கருதப்படும்.
ஒரு நபர் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு அழைக்கவில்லை என்றால் கவனிக்காதீர்கள்
ஒரு நவநாகரிக பெண் “ஹேய்!” என்று யாரேனும் கூப்பிட்டதை கேட்டால் ஒருபோதும் திரும்ப மாட்டாள். தெருவில். இந்த முறைக்கு மதிப்பளிப்பது உங்கள் சுயத்தை நீங்களே வீட்டுக் கொடுப்பது போன்றது .”மன்னிக்கவும்” அல்லது “என்னை அனுமதியுங்கள்” போன்ற நடுநிலை வார்த்தைகளைக் குறிக்கும் எக்ஸ்கியூஸ்மீ / சொரி போன்ற ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் அழைத்தது பிழை என்று உணரச் செய்து இந்த வகையான உரையாடலைத் தொடங்க வேண்டும்.
இந்த 16 எலுமிச்சைத் தந்திரங்கள் வீட்டை புத்துணர்வாக்க உதவும்!!
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற கட்டுரைகள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா ? மேலும் சிலவற்றை வாசிக்க பெண்ணியம் பகுதிக்குச் செல்லுங்கள்.