நவராத்திரி விரதம்
தூய்மையே அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடியது. மனித வாழ்க்கையின் குழந்தைப் பருவமே கள்ளம் கபடமற்ற தூய்மையான தருணமாகும். ஒரு குழந்தையானது அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து விடுகிறது. குழந்தைப் பருவத்தை இறைவனுக்கு சமமான நிலையாக கூறப்படுகிறது. ஏனெனில் குழந்தைப் பருவம் இறைவனைப் போல நற்குணங்களால் நிறைந்ததாகும். நாம் திரும்பவும் குழந்தை பருவத்திற்கு செல்ல முடியாது ஆனால் அந்தப் பருவத்தை மீண்டும் நமக்குள் கொண்டு வர முடியும் அதற்கு ஆதாரமானது தூய்மையாகும்.
நவராத்திரி நாள் 1
- தேவி- மகேஸ்வரி
- திதி- பிரதமை
- பூ- மல்லிகை
- நைவேத்தியம்- வெண்பொங்கல்
- நிறம்- மஞ்சள்
- கோலம்- அரிசி மாவினால் பொட்டுக் கோலம்
- ராகம்- தோடி ராகம்
- ஸ்லோகம்- ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மகேஸ்வரி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 2
- தேவி- கௌமாரி
- திதி- துவிதியை
- பூ- செவ்வரளி
- நைவேத்தியம்- புளியோதரை
- நிறம்- பச்சை
- கோலம்- கோதுமை மாவினால் கட்டங்கள் கொண்ட கோலம்
- ராகம்- கல்யாணி ராகம்
- ஸ்லோகம்- ஓம் சிகிவாஹனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 3
- தேவி- வாராஹி
- திதி- திரிதியை
- பூ- சம்பங்கி
- நைவேத்தியம்- சர்க்கரைப் பொங்கல்
- நிறம்- சாம்பல்
- கோலம்- பூ கோலம்
- ராகம்- காம்போதி ராகம்
- ஸ்லோகம்- ஓம் மகிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 4
- தேவி- லட்சுமி
- திதி- சதுர்த்தி
- பூ- ஜாதி மல்லி
- நைவேத்தியம்- கதம்ப சாதம்
- நிறம்- ஆரஞ்சு
- கோலம்- மஞ்சள் அட்சதையினால் படிக்கட்டு அமைப்பில் கோலம்
- ராகம்- பைரவி ராகம்
- ஸ்லோகம்- ஓம் பத்ம வாஸின்யை வித்மஹே பத்ம லோசனி தீமஹி தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 5
- தேவி- வைஷ்ணவி
- திதி- பஞ்சமி
- பூ- பாரிஜாதம்
- நைவேத்தியம்- தயிர் சாதம்
- நிறம்- வெள்ளை
- கோலம்- கடலை மாவினால் பறவை கோலம்
- ராகம்- பஞ்சமாவாரண கீர்த்தனைகள் பாட வேண்டும் பந்துவராளி ராகமும் பாடலாம்
- ஸ்லோகம்- ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 6
- தேவி- இந்திராணி
- திதி- சஷ்டி
- பூ- செம்பருத்தி
- நைவேத்தியம்- தேங்காய் சாதம்
- நிறம்- சிகப்பு
- கோலம்- பருப்புகளை கொண்டு தேவியின் நாமத்தை வரைதல்
- ராகம்- நீலாம்பரி ராகம்
- ஸ்லோகம்- ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரா ஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 7
- தேவி- சரஸ்வதி
- திதி- சப்தமி
- பூ- தாழம்பூ
- நைவேத்தியம்- எலுமிச்சை பழம் சாதம்
- நிறம்- நீலம்
- கோலம்- நறுமண மலர்களால் பூ கோலம்
- ராகம்- பிலஹரி ராகம்
- ஸ்லோகம்- ஓம் வாகாதேவ்யை வித்மஹே வ்ருஞ்சி பத்தின்யை தீமஹி தந்நோ சரஸ்வதி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 8
- தேவி- துர்கா
- திதி- அஷ்டமி
- பூ- ரோஜா
- நைவேத்தியம்- பாயாசம்
- நிறம்- இளஞ்சிவப்பு
- கோலம்- தாமரை பூவைப் போல கோலம்
- ராகம்- புன்னகை வராளி ராகம்
- ஸ்லோகம்- ஓம் மகிஷா மர்தின்யை வித்மஹே துர்கா தேவியை தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்
நவராத்திரி நாள் 9
- தேவி- சாமுண்டா
- திதி- நவமி
- பூ- தாமரை
- நைவேத்தியம்- வெல்லம் கலந்த அக்கார அடிசில்
- நிறம்- ஊதா
- கோலம்- அம்பாளின் ஆயுதத்தை நறுமண வண்ணப் பொடிகளால் வரைதல்
- ராகம்- வசந்த ராகம்
- ஸ்லோகம் ஓம் க்ருஷ்ண வர்னாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்ட ப்ரசோதயாத்
விஜயதசமி
- தேவி- விஜயா
- திதி- தசமி
- பூ- மல்லி, ரோஜா நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்
- கோலம்- வண்ணங்களாலும் மலர்களினாலும் மாபெரும் கோலம்
- ராகம்- வாகதீஸ்வரி
- ஸ்லோகம்- ஓம் விஜயா தேவியை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தந்நோ தேவி ப்ரசோதயாத்
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..