8,000 பவுண்டுகள் (~3628 kg) கொண்ட சரக்கு விண்வெளி ஓடம் திங்கள்கிழமை காலை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மிகவும் சுவையான உணவுகள் மற்றும் பல பொருட்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 23 மில்லியன் டாலர் பெறுமதியான கழிப்பறையையும் கொண்டு சென்று சேர்ந்தது. கல்பனா சாவ்லா அவர்களின் நினைவாக எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடம் NG – 14 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஓடத்தில் ஜெனோவா சலாமி, புகைக்கப்பட்ட கௌடா, ப்ரி, செர்ரி தக்காளி மற்றும் சாக்லேட்டால் சூழப்பட்ட கிரான்பெர்ரி ஆகியவை அடங்கும் – மேலும் எஸ்டீ லாடரின் மேம்பட்ட இரவு சருமப் பாதுகாப்பு சீரமின் 10 பாட்டில்கள் ஒரு அழகுசாதனப் பிரச்சாரத்திற்காக விண்வெளி வீரர்களால் படமாக்கப்பட்டன.இவை அனைத்திலும் எஸ்.எஸ். கல்பனா சாவ்லா வின் ஓடத்தால் சுமந்து செல்லப்பட்ட மிகவும் பேசப்படும் பொருள் 23 மில்லியன் டாலர் டைட்டானியம் கழிப்பறை.
இது காலின்ஸ் ஏரோஸ்பேஸால் உருவாக்கப்பட்டது. சர்வதேச கழிவு மேலாண்மை அமைப்பு (யு.டபிள்யூ.எம்.எஸ் – இக்கழிப்பறையின் பெயர்) என்பது கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளில் செய்யப்பட்ட நாசாவின் முதல் பெரிய கழிப்பறை மறுவடிவமைப்பு ஆகும். இது சிறந்த பணிச்சூழலியல், துர்நாற்றக் கட்டுப்பாடு மற்றும் பெண் விண்வெளி வீரர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல மேம்பாடுகளை ஐ.எஸ்.எஸ்ஸின் தற்போதுள்ள ரஷ்ய தயாரிப்பு கழிப்பறைகளில் செய்துள்ளது.
ஐ.எஸ்.எஸ்ஸின் பூஜ்ஜிய-ஈர்ப்பு சூழலில், கழிப்பறைகள் சிறுநீர் மற்றும் மலத்தை சரியான வாங்கிக்கு இழுக்க காற்று ஓட்டத்தைப் பயன்படுத்துகின்றன. யு.டபிள்யூ.எம்.எஸ் இல், மூடி தூக்கியவுடன் அந்த காற்று ஓட்டம் தொடங்குகிறது, இது துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது. விண்வெளி வீரர்களின் கருத்துப்படி, இது முக்கியமானது. அவற்றைக் கலைக்க பூமி போன்ற வளிமண்டலம் அங்கு இல்லாததால், விரும்பத்தகாத வாசனைகள்உருவானால் அப்படியே நீடிக்கும். “வாசனைப் பத்திகள் அல்லது மெழுகுவர்த்திகள் போன்ற எதுவும் அங்கு அனுமதிக்கப்படவில்லை” என்று நாசா விண்வெளி வீரர் ஜேசன் ஹட் ஆகஸ்ட் மாதம் ட்வீட் செய்தார்.
“நீங்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு விண்கலத்தின் வாசனையை செயற்கையாக உருவாக்க விரும்பினால், ஒரு ஜோடி அழுக்கு டயப்பர்கள், சில மைக்ரோவேவ் உணவு சுற்றிப்பொதிகள், பயன்படுத்தப்பட்ட விமான வாந்திப்பை மற்றும் ஒரு சில வியர்வை துடைக்கப்பட்ட துண்டுகள் ஆகியவற்றை எடுத்து, பழைய கால உலோகக் குப்பைத் தொட்டியில் போட்டு கோடை வெயிலில் 10 நாட்களுக்கு சுட விடுங்கள். பின்னர் அதைத் திறந்து ஆழமாக சுவாசித்துப் பாருங்கள்” என அவர் கூறினார்.
இதிலிருந்து விண்வெளி கழிப்பறை எவ்வளவு தூரம் நாற்றத்தை அந்த இடத்தில் பரப்புகிறது என உணரலாம்.
முந்தைய வடிவமைப்புக்களில், கழிப்பறை துர்நாற்றம் வீசும் பாக்டீரியா வடிகட்டியைப் பயன்படுத்தி தவறான மணத்தை வடிகட்டியுள்ளதே பிரச்னைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
புதிய விண்வெளிக் கழிப்பறை
யு.டபிள்யூ.எம்.எஸ் மேலும் பணிச்சூழலியல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு குறைவான சுத்தம் மற்றும் பராமரிப்பே தேவைப்படுகிறது. முந்தைய விண்வெளி கழிப்பறைகளில் பயன்படுத்தப்பட்ட தொடைப் பட்டியைப் போலல்லாமல், இது கை ஓய்வுகள் மற்றும் கால் பட்டிகளை கொண்டுள்ளது. மேலும் இருக்கையில் உள்ள சிறிய முகடுகளும் விண்வெளி வீரர்கள் தங்களை சிறப்பாக நிலைநிறுத்த உதவுகின்றன.
“யு.டபிள்யூ.எம்.எஸ் இருக்கை அசௌகரியமாக சிறியதாகவும், கூர்மையாகவும் தோன்றலாம், ஆனால் நுண் ஈர்ப்பில் இதுவே சிறந்தது” என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. “எது எங்கே செல்ல வேண்டுமோ அது அங்கே செல்கிறது என்பதை உறுதிப்படுத்த இது உடலுடன் சிறந்த தொடுகைகளை வழங்குகிறது.” குறைந்தது 10 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கழிப்பறையில் அரிப்பை எதிர்க்கும் பாகங்கள் உள்ளன, அவை திட்டமிடப்படாத பராமரிப்பு செலவு உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்க வேண்டும்.
“குழாய் வேலைகளுக்கு குறைந்த நேரம் செலவழிப்பது என்பது விஞ்ஞானம் மற்றும் பிற உயர் முன்னுரிமை ஆய்வு மையப்படுத்தப்பட்ட பணிகளுக்கு குழுவினர் அதிக நேரத்தை செலவளித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது” என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெரும்பாலான விண்வெளி கழிப்பறைகள் ஆண் விண்வெளி வீரர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டன. ஆனால், பெண் விண்வெளி வீரர்களின் கருத்துக்களை இணைத்து,சர்வதேச கழிவு மேலாண்மை அமைப்பு பெண் உடற்கூறியல் நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருக்கை முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது, எனவே தேவையான புனல் மிகவும் நேர் மையக் கோணத்தில் நிலைநிறுத்தப்படலாம். இதனால் பெண்கள் ஒரே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் மலம் கழிக்கவும் முடியும். இப்போது வரை, இரண்டில் ஒன்று மட்டுமே என இருந்த விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் என மெக்கின்லி கூறுகிறார்.
அதன் முன்னோடிகளைப் போலவே, யு.டபிள்யூ.எம்.எஸ் அந்தரங்க பாதுகாப்புக்காக ஒரு அறை வடிவத்துக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 100 பவுண்டுகள் மற்றும் 28 அங்குல உயரத்தில், புதிய வடிவமைப்பு தற்போதைய ரஷ்ய வடிவமைக்கப்பட்ட ஐஎஸ்எஸ் கழிப்பறையை விட 65% சிறியது மற்றும் 40% நிறை குறைந்தது.”குழு அளவு பெரிதாகி வருவதால், யாரும் குளியலறையில் வரிசையில் நிற்க விரும்பவில்லை” என்று மெக்கினெலி கூறுகிறார், “எனவே இரண்டு கழிப்பறைகள் என்பது குழுவினரால் பாராட்டப்படும்” என தெரிவித்தார்.
விண்வெளி வீரர்கள் வசிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு வேலை செய்யும் சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற தளங்களில், விண்வெளி வீரர்கள் குடிக்கத் தேவையான நீரை அவர்களது சிறுநீரை வடிகட்டுவதன் மூலம் வழங்கும் செயலையும் இது செய்யும்.
“விண்வெளி நிலையத்தில் உள்ள நீர் சார்ந்த திரவங்களில் சிறுநீர் மற்றும் வியர்வை உட்பட 90% மறுசுழற்சி செய்கிறோம்” என்று நாசா விண்வெளி வீரர் ஜெசிகா மீர் கூறுகிறார். “விண்வெளி நிலையத்தில் நாங்கள் செய்ய முயற்சிப்பது பூமியிலிருந்து இயற்கையான நீர் சுழற்சியின் கூறுகளை பிரதிபலிக்கிறது. ஐ.எஸ்.எஸ்ஸில் எங்கள் சிறுநீர் பற்றி பேசும்போது, அது நாளைய காபியாக கூட மாறலாம் என்கிறார்”.
நீர் மீட்புக்காக மலக் கழிவுகள் தற்போது பதப்படுத்தப்படவில்லை என்று நாசா கூறுகிறது, ஆனால் நிறுவனம் இந்த திறனைப் படித்து வருகிறது. விண்வெளி வீரர்கள் அதன் செயல்திறனில் மகிழ்ச்சியடைவதாகக் கருதினால், முதல் பெண்ணை சந்திரனுக்கு 2024 ஆம் ஆண்டில் அழைத்துச் செல்லும் ஓரியன் விண்கலத்தில் UWMS ஐ பொருத்த முடியும்.
திட்டத்தின் ஒரு பெரிய பகுதி உயிரியல் செயல்முறைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு வசதியாக இருந்தது என்று மெக்கின்லி கூறுகிறார். “இத்தொகுதி இயங்குவதற்கும், குழுவினருக்கு முடிந்தவரை பயனளிப்பதற்கும் ,தொகுதியின் பயனர்களிடமிருந்து உண்மையான கருத்துகளைப் பெறுவது முக்கியம்,” என்று அவர் AMA இல் கூறுகிறார்.
எஸ்.எஸ். கல்பனா சாவ்லா சரக்கு விண்ஓடம் முதலில் திட்டமிடப்பட்டது கடந்த வார தொடக்கத்தில் ஏவப்பட திட்டமிடப்பட்டது, ஆனால் மோசமான வானிலை மற்றும் மென்பொருள் சிக்கல்களால் வெள்ளிக்கிழமை வரை தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேறெங்கும் கிடைக்காத தொழில்நுட்ப விண்வெளி மற்றும் விஞ்ஞான தகவல்களை அறிய எமது விண்வெளி பக்கத்துக்கு செல்லவும்.
தொடர்ச்சியான அப்டேட்களை பெற எமது பேஸ்புக் பக்கத்தில் எம்மைத் தொடரவும். சுவாரசியமான கலந்துரையாடல்களுக்கு எமது பேஸ்புக் குழுவில் இணையவும்.
முகப்பு உதவி : scitechdaily