அக்டோபர் 6 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் நெருங்கிய அணுகல் மற்றும் அக்டோபர் 13 அன்று பூமிக்கெதிரான எதிர்கொள்ளல்கள் நிகழவுள்ளது; காலண்டரில் குறித்துக் கொள்ளுங்கள் .
விஜயதசமியை மறந்து விடுங்கள். இந்த அக்டோபர் நமது சிவப்புக் கிரகத்தின் மகிமையைப் பற்றியது. ஏனெனில் இந்த ஒளிரும் சிவப்பு கிரகம் இரவு வானத்தில் உங்களுக்காக ஒரு அழகிய நிகழ்வை அரங்கேற்றவுள்ளது. நீங்கள் இந்த மாதம் முழுவதும் நம் சூரியக் குடும்பத்தின் சிவந்த கிரகத்தை ஒரு பிரகாசமான புள்ளியாக கண்டு களிக்கலாம். ஆனால், உங்கள் காலெண்டரில் குறிக்க இரண்டு சிறப்பு தேதிகள் உள்ளன: அக். 6 அன்று கிரகம் பூமியை மிக நெருங்கிய விதத்தில் கடந்து செல்லும்போதும், அக்.13ல் பூமிக்கு எதிராக இருக்கும்போதும் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது இரவு வானம் .
செவ்வாய் கிரகத்தை எவ்வாறு காணுவது ?
இக் கிரகத்திற்கு “சிவப்பு” கிரகம் என்று அழைக்கப்படும் புகழ் உண்டு. ஆனால் இரவு வானத்தில் அதன் நிறம் நிறமாலையின் சற்று இருண்ட பக்கம் நோக்கி கொஞ்சம் அதிகமாக உள்ளது. இது துருவுக்கு மத்தியில் பளபளக்கும் ஒரு சிறிய இடைவெளியைப் போல, வெற்றுக் கண்ணுக்கு பிரகாசமான செம்மஞ்சள்-சிவப்பு புள்ளியாகத் தோன்றுகிறது.
இந்த சிவப்பு கிரகத்தின் தனித்துவமான நிறம் இருட்டில் நீங்கள் அதனைக் கண்டறிய உதவும் ஒரு துப்பு. இரவு வானத்தில் உதயமாகும் பொழுது இதனைப் பார்க்க வேண்டுமானால் கிழக்கு வானத்தைப் பாருங்கள். உங்கள் உள்ளூர் வானிலை உங்களுக்கு ஒத்துழைத்தால் இந்த மாதம் மிகப் பிரகாசமாக இருக்கும் செவ்வாயைக் கண்டறியலாம்.
நமது கிரகம் பற்றி அறியாத 10 விசித்திர தகவல்கள்
நெருங்கிய அணுகல்: அக் .6
அக் .6 செவ்வாய்க்கிழமை, பூமிக்கு நெருக்கமான அணுகலை இச் சிவப்புக் கிரகம் மேற்கொள்கிறது. தொலைநோக்கியொன்றைப் பயன்படுத்தவும், கொஞ்சம் தெளிவான புகைப்படங்களைப் பெறவும் இது ஒரு சிறந்த நேரமாகும். நீங்கள் அவ்வாறு பார்த்துக்கொண்டு இருக்கும் போது நாசாவின் பிரீசவரன்ஸ் (விடாமுயற்சி) ரோவருக்கு (வெளிக்கிரக ஆய்வு வாகனம்) ஹாய் சொல்ல மறக்க வேண்டாம். பிப்ரவரி 2021 இல் இந்த வாகனம் கிரகத்தை அடையுமாறு பயணித்துக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 6 கிரகத்தின் நெருக்கம் பற்றிய ஒரு கலைஞரின் பார்வையை நாசா பகிர்ந்து கொண்டுள்ளது. இது ஜூலை 2018 இல் கடைசியாக நெருங்கியதோடு ஒப்பிட்டு வரையப்பட்டுள்ளது. வெளிப்படையான அளவுகள் மிகவும் ஒத்ததாக இருக்கின்றன. இந்த ஆண்டு, பூமியிலிருந்து கிரகத்தின் குறைந்தபட்ச தூரம் 38.6 மில்லியன் மைல்கள் (62 மில்லியன் கிலோமீட்டர்) ஆக இருக்கும். இது 2018 இல் வந்ததை விட 3 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.
எதிர் கொள்தல் : அக் .13
செவ்வாய் கிரகமும் சூரியனும் பூமியுடன் நடுவில் வரிசையாக நிற்கும்போது, இச் சிவப்பு கிரகம் பூமிக்கு எதிரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் வானம் முழுவதுமான இயக்கத்தை கண்காணிக்க இது சரியான நேரம். சூரியன் மறைந்தவுடன் அது கிழக்கில் எழும். வானத்தின் குறுக்கே ஊடறுத்து நகர்ந்து பின்னர் சூரியன் மேலே வரும்போது அது மேற்கில் மறையும்/நிற்கும்.
நாசா இந்த எதிர்கொள்ளலை “திறம்பட ஒரு ‘முழு’ செவ்வாய்” என்று விவரிக்கிறது. செவ்வாய், அக் .13 எதிர்கொள்ளலை அனுபவிக்கும் நேரம். அது மீண்டும் நிகழ நீங்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.
“கிரக சுற்றுப்பாதைகளின் ஏன் ஓட்டப்பந்தய தடங்கள் மாதிரியாக உருவகப் படுத்தப்படுகின்றன என்பதை விளக்குகிற அமைப்பே இது. பூமியும் செவ்வாய் கிரகமும் ஒரு பாதையில் ஓடுபவர்களைப் போன்றவை. பூமி உள்ளே இருக்கிறது, செங்கிரகம் வெளிப்புறத்தில் உள்ளது” என்று நாசா தனது அக்டோபர்க்கான வாட்ஸ் அப் வலைப்பதிவில் சொன்னது. “ஒவ்வொரு 26 மாதங்களுக்கும், வேகமான பூமி செவ்வாய் கிரகத்தை மெதுவாக்குகிறது மற்றும் அதை ஒரு சுற்று முன்னால் கடக்கிறது. பூமி முன்னிலை வகிப்பதைப் போலவே ஒரு தருணத்தில் எதிர்கொள்ளலும் ஏற்படுகிறது” என அப்பதிவு சொன்னது.
மேலும் பல சுவாரசியமான விண்வெளித் தகவல்களை அறிந்து கொள்ள எமது விண்வெளிப் பக்கத்துக்கு செல்லுங்கள்