நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் நமக்கு பாதுகாப்பானவையாகத் தோன்றினாலும் கூட நமக்கே தெரியாமல் நம்மைப் பற்றிய தகவல்களை திருடக் கூடிய சில மென்பொருள் துண்டங்கள் அவற்றுக்குள் ஒளிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு, கூகிள் நிறுவனத்துக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ள ஒரு தீம்பொருள் தான் ஜோக்கர்.
கூகிள் இப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக ஜோக்கர் தீம்பொருளின் (தீங்கு விளைவிக்கும் மென்பொருட்கள்) பல்வேறு மறு செய்கைகளுடன் ஒளிந்து பிடித்து விளையாடுகிறது. நீங்கள் ‘ஜோக்கர்’ தீம்பொருள் பற்றிய அறிமுகமில்லாதவராக இருந்தால், இது கூகிள் பிளே ஸ்டோர் வழியாக Android சாதனங்களுக்கு தரவிறக்கப்படும் அப்ளிகேஷன்களில் புழக்கத்தில் இருக்கும் திருட்டுத்தனமான தீம்பொருள் ஆகும்.
பொதுவாக, ஒரு சிறிய மென்பொருள் – அதாவது ஜோக்கரின் ஒரு கூறு – விளம்பர கட்டமைப்பிற்குள் செலுத்தப்படுகிறது அல்லது அப்ளிகேஷன் கொண்டுள்ள மற்றொரு பகுதியில் மறைக்கப்படுகிறது. பயனரால் அந்த அப்ளிகேஷன் இயக்கப்படும் போது, பயனரின் தகவல்,தொலைத்தொடர்பு வலையமைப்பு மற்றும் சாதனம் என்பன குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு ஒத்துப் போகுமாக இருந்தால், ஜோக்கரின் மற்றொரு கூறு உந்தப்பட்டு, மேலும் மோசமான தாங்குசுமையை (மென்பொருளை) பதிவிறக்குகிறது.
அந்த தாங்குசுமை செயல்படுத்தப்படும்போது, ஜோக்கர் உங்கள் சாதனத்தின் பின்னணியில் ஒளிந்துகொண்டு உங்களை அமைதியாக உளவு பார்க்கிறது.
உங்களின் தொடர்பு பட்டியல்கள், எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் சாதனத்தில் சேமிக்கப்பட்ட பிற அடையாளங்கள் பற்றிய தரவை திருடுகிறது. கூடுதலாக ஜோக்கர் மென்பொருள், பிரீமியம் விளம்பரம் மற்றும் சந்தா அடிப்படையிலான சேவைகளில் அப்ளிகேஷன் தொடர்புகளை அதிகமாக மேற்கொள்கிறது, மேலும் கட்டண சேவைகளுக்கு மக்களை ரகசியமாக பதிவுசெய்ய எஸ்எம்எஸ் மற்றும் பிற தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலை இது பயன்படுத்துகிறது.
இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் கூகிளும் ஜோக்கரின் ஏராளமான வகைகளைக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு நிகழும்போது, கூகிள் வழக்கமாக பாதிக்கப்பட்ட அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கும், மேலும் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் இது தொடர்பான தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடுவார்கள். சில நாட்களுக்கு முன்பு, கிளவுட் பாதுகாப்பு நிறுவனமான Zscaler’s ThreatLabz குழுவின் ஆராய்ச்சியாளர்கள் ஜோக்கரை தம்முள்ளே காவிச் செல்லும் 17 புதிய அப்ளிகேஷன்களை அடையாளம் கண்டுள்ளனர்.இவை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டன.
அழிக்க வேண்டிய 16 தொலைபேசி அப்ளிகேஷன்கள்
- All Good PDF Scanner
- Mint Leaf Message-Your Private Message
- Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
- Tangram App Lock
- Direct Messenger
- Private SMS
- One Sentence Translator – Multifunctional Translator
- Style Photo Collage
- Meticulous Scanner
- Desire Translate
- Talent Photo Editor – Blur focus
- Care Message
- Part Message
- Paper Doc Scanner
- Blue Scanner
- Hummingbird PDF Converter – Photo to PDF
உங்கள் தொலைபேசியில் இந்த அப்ளிகேஷன்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றி விடுங்கள், உங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்ய தீம்பொருள் எதிர்ப்பு பயன்பாட்டை இயக்க வேண்டும், உங்கள் சாதனம் புதுப்பிக்கப்பட்டு (அப்டேட் செய்யப்பட்டு ) முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். சந்தேகத்துக்குரிய அப்ளிகேஷன்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்கப்படும் அனுமதிகள் தொடர்பாக சரிபார்க்கவும்.அதாவது உங்கள் எஸ்எம்எஸ் செய்திகள், தொடர்பு பட்டியல் போன்றவற்றை அணுக அனுமதி உள்ள அப்ளிகேஷன்கள் உள்ளதா எனப் பார்த்து அழிக்கவும்.
இதற்கு முன்னர் நாம் எழுதிய ஒரு கட்டுரையில் பேஸ்புக்கில் கணக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன எனவும் அதிலிருந்து உங்களை பாதுகாக்க செய்யக் கூடியவற்றையும் சொல்லியிருந்தோம். அக்கட்டுரையிலிருந்து சில உதவித் துணுக்குகள் உங்களுக்காக
நீங்கள் உங்கள் கணக்கு திருட்டுப் போவதை நினைத்து வருந்த வேண்டுமா ? அவ்வளவாக இல்லை, எனினும் உங்கள் இணைய உலவல் பழக்கவழக்கங்கள் தொடர்பாக நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதாவது, வலைத்தூண்டிலிடல் (குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சலில் தங்களை பிரபலமான நிறுவனமாகக் காட்டிக்கொண்டு தகவல்களை சேகரித்தல் )செயற்பாட்டுக்கு நீங்கள் ஆளாக வாய்ப்புண்டு. உதாரணமாக உங்களுடைய வங்கிக்கணக்குக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதற்காக “அவசரமான நடவடிக்கைகளை ” மேற்கொள்ளுமாறு கேட்டு மின்னஞ்சல்கள் ஒன்றிலிருந்து, பல தடவைகள் வரை வரலாம்.இவற்றை தவிர்த்தாலே நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
Cyble பரிந்துரைப்பதன்படி, உங்களுடைய தனியுரிமை செட்டிங்களில் சற்று இறுக்கத்தன்மை காட்டுவது நல்லது. முக்கியமாக உங்கள் கடவுச்சொல்லானது ஒரே சொல் வேறு வேறு தளங்களில் பயன்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இது இலகுவாக உங்கள் கணக்குகளை பின்தொடர்ந்து தாக்க வழிவகை செய்யும். அதைத் தவிர Facebookல் உள்ள இரண்டு கட்ட உறுதிப்படுத்தலை பயன்படுத்துவது பயனளிக்கும். வெற்றிகரமாக தாக்கப்பட்ட கணக்குகளோடு ஒப்பிடும்போது இது 99% பாதுகாப்பளிக்கும்.
உங்களுடைய தனிப்பட்ட மின்னஞ்சலை Facebok மற்றும் Twitter ஆகியவற்றுக்கு நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக வைத்திருப்பது நிச்சயமாக பயனளிக்கும்.
இக்கட்டுரையை முழுமையாக வாசிக்க கீழே அழுத்தவும்
Facebook கணக்குகள் 267,000,000 இருள் வலையில் விற்பனை
வேறுபட்ட புதிய தொழில்நுட்பத் தகவல்களை வாசிக்க தொழில்நுட்பப பக்கத்துக்கு செல்லவும்
முகப்பு பட உதவி : Rocketcdn.me