உங்கள் மொபைல் போன் புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபி துறையை மெதுவாக மறுவரையறைசெய்து கொண்டிருக்கிறது.
இன்று ஸ்மார்ட்போன் உள்ள எவரும் சிரமமின்றி ஒரு வீடியோவை பதிவு செய்து அதை யாருக்கும் ஒளிபரப்பலாம். இருப்பினும், தொழில்முறை காட்சிகளை படமாக்க அதை விட நிறைய விடயங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. சில வீடியோ தயாரிப்பு உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பற்றிய பயிற்சி மற்றும் அறிவைக் கொண்டு, விருது பெற்ற ஆவணப்படம், பள்ளித் திட்டம் அல்லது ஒரு சிறிய குறும்படத்தை உங்கள் மொபைல் மூலம் பதிவு செய்யலாம்.
உதவிக் குறிப்புக்கள் 8
கிடையாக பதிவு செய்யுங்கள் நிலைக்குத்தாக வேண்டாம்
வீடியோ காட்சிகளின் இருபுறமும் இரண்டு கருப்பு கட்டங்களைக் கொண்டிருப்பதைப் போல சிறுபிள்ளைத்தனம் எதுவுமில்லை.நிலைக்குத்து நோக்குநிலையைக் கொண்ட காட்சிகளுக்கு இது விதிவிலக்கு என்றாலும், பொதுவாக கிடையமைப்பு சார்ந்த காட்சிகளைக் கொண்ட கணினிகள் அல்லது தொலைக்காட்சிகள் போன்ற சாதனங்களுக்கு கிடை படப்பிடிப்பே சிறந்தது.
நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் தொலைபேசியை அதன் கிடைப்பக்கத்தில் திருப்பி, உங்கள் காட்சிகளை கிடை நோக்குநிலையில் பதிவு செய்வதன் மூலம் இந்த சிறுபிள்ளைத் தவறை நீங்கள் தவிர்க்கலாம். இந்த வடிவம் உங்கள் வீடியோவை மிகவும் அழகாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், அகலத்திரையில் பார்க்கும்போது, பார்ப்பதை மிகவும் இனிமையாக்கும். கூடுதலாக, சரியான நோக்குநிலை உங்கள் பொருள் பிரேமினை முழுமையாக நிரப்புகிறது என்பதை உறுதி செய்கிறது.
வெளிச்சம்
ஸ்மார்ட்போன்களில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, அவை நம்பமுடியாத பிரகாசமானவை மற்றும் புகைப்படங்களின் வெப்பநிலை வண்ணத்தை எளிதில் பாதிக்கக் கூடியவை. உங்கள் தொலைபேசியில் ஃபிளாஷ் அம்சத்தைப் பயன்படுத்த துடிப்பதற்குப் பதிலாக, ஒளியின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றைக் கவனியுங்கள்; அதாவது சூரியன் போன்ற இயற்கை ஒளி. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் பொருளை ஒளியின் மூலத்தை நோக்கி எதிர்கொள்ளுமாறு வைக்க வேண்டும். மற்றப்படி, நீங்கள் இரவில் ஒரு வீடியோவைப் பதிவு செய்ய வேண்டுமானால், உங்கள் தொலைபேசியில் ஃபிளாஷ் அம்சத்தைத் தவிர மற்ற ஒளியின் ஆதாரங்களையும் நீங்கள் பரிசீலித்துப் பார்க்கலாம்.
மேலும், பின்னொளி அமைப்புகளைத் தவிர்ப்பது அவசியம். ஏனென்றால், நபர்கள் மற்றும் அவர்களின் முகங்களை அவர்கள் பின்னால் இருக்கும்போது உங்களால் பார்க்க முடியும் என்றாலும், உங்கள் மொபைல் கேமராவால் முடியாது. மேலும் இது பிரகாசமான ஒளியுடன் இருண்ட உருவத்தை ஒளிரச் செய்யும் காட்சிகளை உருவாக்கும். மேலும், உங்கள் புகைப்படத்தில் ‘புலப்படும் அம்சங்கள்’ என்று எதுவும் இருக்காது, அதாவது நீங்கள் படம்பிடிக்க முயற்சித்ததை இழப்பீர்கள். பின்னொளியைத் தவிர்க்க, அடிப்படை ஒளி அமைப்பு மற்றும் உள்ளமைவைக் கவனியுங்கள்.
நிலைத்தன்மை முக்கியமானது
உங்கள் மொபைல் போன் சிறியது மற்றும் மிகவும் நிறையற்றது என்றாலும், வீடியோ எடுக்கும்போது உங்கள் இரு கைகளையும் உங்கள் முழங்கைகளை நெஞ்சில் அழுத்துவதன் மூலம் உடலில் நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். மாற்றாக, உங்கள் வீடியோக்களை விகாரப்படுத்தக் கூடிய சிறிய தன்னிச்சையான இயக்கங்களை நிறுத்த ட்ரைபொட்டைப் பயன்படுத்தலாம். பொதுவாக, ட்ரைபாட் பயன்படுத்தும் போது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடாப்டர் கிளிப் தேவைப்படும்.
மைக்ரோசொப்ட் நீரடி தரவு மையம் 2 வருடம் கழித்து கரையேறுகிறது
ஸூம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள ஸூம் அம்சத்தை பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை சற்று நெருக்கமாக எடுக்க மனம் தூண்டலாம். ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனில் எளிதாகக் கிடைக்கும் டிஜிட்டல்ஸூமைப் பயன்படுத்துவது போன்ற துரதிர்ஷ்டவசமானது எதுவுமில்லை. ஏனென்றால், அடிப்படையில் சில மென்பொருள் தந்திரங்களை இணைத்து, உங்கள் காட்சிப் பொருள் கணிசமான அளவு பிக்சலேஷன் (தெளிவுக்கான அளவீடு) இல்லாமல் செய்யப்பட்டே நெருக்கமாகத் தெரிகிறது.
நீங்கள் விரும்பும் தெளிவான, மிருதுவான தரத்தை இழக்காமல் உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்ய விரும்பினால், உங்கள் இலக்குக்கு நெருக்கமாக நடந்து உங்கள் காட்சிகளைப் பதிவுசெய்க. மாற்றாக, உங்கள் இலக்குகள் அல்லது இலக்குகளின் நெருக்கமான காட்சிகளை எடுக்க அனுமதிக்கும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களில் முதலீடு செய்யுங்கள்.
f போக்கஸ் மற்றும் எக்ஸ்போஷர்
பொருளை மொபைல் போன்கள் தானாகவே கண்டறிந்து, அதற்கேற்ப fபோக்கஸ் மற்றும் எக்ஸ்போஷரை சரிசெய்யும், இது விரைவான புகைப்படங்களை எடுக்கும்போது சிறந்தது. இருப்பினும், ஒரு வீடியோவைப் பதிவுசெய்யும்போது, இந்த அம்சத்தைப் மாறமால் பாதுகாப்பதற்கு உங்களுக்கு அதிகமான கையேட்டு கட்டுப்பாடு (இந்தத் துறை தொடர்பான அறிவு ) தேவைப்படுகிறது. இதன் மூலம் அதிகப்படியான எக்ஸ்போஷர் அல்லது அவுட் ஒப் fபோக்கஸ் செல்வதைத் தடுக்கலாம்.
இதைக் கட்டுப்படுத்த, உங்கள் வீடியோவின் fபோக்கஸ் மற்றும் எக்ஸ்போஷரை மாறமால் பாதுகாக்க உங்கள் மொபைல் ஃபோனின் இயல்புநிலை (ஜெனரல் மோட் ) கேமரா பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் பொருள் மீது க்ளிக் செய்யவும். மேலும், படப்பிடிப்பின் போது உங்கள் fபோக்கஸ் மற்றும் எக்ஸ்போஷரை நீங்கள் சரிசெய்யலாம். ஆயினும்கூட, fபோக்கஸை நீங்களாக அமைப்பது ஒரு சிறந்த நுட்பமாகும். இது பொருள் அல்லது காட்சியை நெருங்க உங்களை அனுமதிக்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்த உங்கள் கேமராவை அனுமதிக்கிறது.
ஒலிப்பதிவு
சக்திவாய்ந்த மற்றும் தொழில்முறை வீடியோவுக்கு நல்ல தரமான ஆடியோ அவசியம் என்பது இரகசியமல்ல. நல்ல செய்தி என்னவென்றால், மொபைல் ஃபோன்களில் உள்ள மைக்ரோஃபோன்களாலே இந்த வேலையைச் செய்ய முடியும். உங்கள் காட்சிகளின் ஆடியோவை மேம்படுத்த புளூடூத் மைக்ரோஃபோன்கள் போன்ற ஆடியோ பாகங்களில் முதலீடு செய்யலாம். அல்லது பிளூடூத் ஹன்ட்ஸ்ப்ரீக்கள் கூட உதவும். மாற்றாக, ஆடியோவைப் பதிவு செய்ய உங்கள் கணினியுடன் இணைக்கக்கூடிய வெளிப்புற தொழில்முறை ஒலிவாங்கிகளைப் பயன்படுத்தலாம்.
ஸ்லோ மோஷன் மற்றும் டைம் லாப்ஸை முயற்சிக்கவும், ஆனால் அதை மிகைப்படுத்தாதீர்கள்
பெரும்பாலான மொபைல் போன்கள் இயல்புநிலை கேமரா பயன்பாட்டில் உள்நிறுவப்பட்ட ஸ்லோ மோஷன் மற்றும் டைம் லாப்ஸ் அம்சங்களுடன் வருகின்றன.
ஸ்லோ-மோஷன், பயன்முறை வீடியோக்களை துரிதப்படுத்தப்பட்ட பிரேம் வீதத்தில் பிடிக்க உங்களை அனுமதிக்கிறது, இது சாதாரண வேகத்தில் மீண்டும் இயக்கப்படும் போது, காட்சிகளில் உள்ள செயல் நிகழ்நேரத்தை விட மெதுவாக தோன்றும். மறுபுறம், டைம்-லாப்ஸ் குறைந்த பிரேம் வீதத்தில் காட்சிகளைப் பதிவுசெய்ய உங்களை அனுமதிக்கிறது, இது சாதாரண வேகத்தில் மீண்டும் இயக்கப்படும் போது, செயல் நிகழ்நேரத்தை விட வேகமாக நகரும். இவை சிறந்த காட்சிகளைப் பிடிக்க மிகச் சிறந்தது என்றாலும், அவற்றை அதிகமாகப் பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். உதாரணமாக, ஸ்லோ மோஷன் அம்சம் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அசாதாரண இயக்கங்களைப் படம்பிடிக்க அருமையானது. மறுபுறம், நகரும் மேகங்கள், மக்கள் நடைபயிற்சி அல்லது சூரிய அஸ்தமனம் போன்ற சிறிது நேரம் எடுக்கக் கூடிய காட்சிகளுக்கு டைம்-லாப்ஸ் சிறந்தது.
திருத்தங்கள்
சிறியளவு எடிட்டிங் உங்கள் காட்சிகளை முடிந்தவரை தொழில்முறையாக காண்பிப்பதில் பெரிய வேலையைச் செய்கிறது. உங்கள் தொலைபேசியிலேயே இதைச் செய்ய முடியும் என்பதே சிறந்த அம்சமாகும், எனவே வேலையைச் செய்ய உங்களுக்கு ஆடம்பரமான அல்லது விலையுயர்ந்த கேஜெட்டுகள் தேவையில்லை.
பொதுவாக, உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி தேவையான வெட்டுதல்கள், மாற்றங்கள்,எபெக்ட்டுகள் அல்லது உள்ளீடுகளைச் செய்யலாம்.
நீங்கள் ஒரு குறும்படம் அல்லது ஆவணத்தை படமாக்குகிறீர்களானாலும், சிறந்த முடிவுகளைப் பெறுவதை உறுதிசெய்ய உங்கள் மொபைல் போன் செயல்முறையை தொடக்கத்திலிருந்து இறுதி வரை சீராக்க உதவும்.
இன்று, ஒரு தொழில்முறை வீடியோவைப் பதிவு செய்வது இலகுவானது மற்றும் சிரமமின்றி உள்ளது. உங்கள் கைகளின் நீளத்திற்குள் உங்களுக்கு தேவையான அனைத்து கருவிகளும் உங்களிடம் உள்ளன. எனவே, உங்கள் அடுத்த பயணத்தில் காணொளி, திரைப்படம் அல்லது ஆவணப்படத்தை பதிவு செய்ய நீங்கள் முடிவெடுத்திருந்தால், அதிக சக்திவாய்ந்த மற்றும் தொழில்முறை காட்சிகளுக்காக மேலே குறிப்பிட்டுள்ள சில தந்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
மேலதிக தொழில்நுட்பத் தகவல்களை வாசிக்க :
முகப்பு படம் : lindsworthdeer