இராமாயணம்
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இராமாயணம் என்ற ஒரு மிகப் பெரிய காவியத்தில் கூறப்பட்ட விடயங்கள் யாவும் உண்மையா இல்லை வெறும் கற்பனைக் கதையா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த நிலையில் இராமாயணம் உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்கள் இருக்கின்றன அந்த ஆதாரங்கள் என்ன என்று நாம் தற்போது இங்கு பார்ப்போம் வாருங்கள்.
முதல் ஆதாரம் என்னவென்றால் ராமன் ராவணனை அழித்த பிறகு 21 நாட்களில் அவர் அயோத்தியா திரும்பினார் என்று இராமாயணம் சொல்கிறது ஒரு மனிதன் வெறும் 21நாட்களில் இலங்கையில் இருந்து அயோத்தியாக்கு நடந்தே வர முடியுமா என சந்தேகம் நமக்கு வரலாம் அந்த சந்தேகம் தீர்பதற்கு கூகுள் மேப் உதவியை தேடி பார்க்கும் பொழுது ஆச்சரியம் என்வென்றால் இலங்கையில் இருந்து அயோத்தியா நடந்து போக 20 நாட்கள் ஆகும் என கூகுள் மேப் சொல்கிறது.
இரண்டாவது ஆதாரம் நான்கு தந்தங்களை கொண்ட யானைகள் இலங்கையில் இராவணின் கோட்டையை பாதுகாத்து நின்றதாக இராமாயனம் சொல்கிறது தற்பொழுது நான்கு தந்தங்களை கொண்ட யானைகள் இல்லாமல் இருந்தாலும் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி நான்கு தந்தங்களை கொண்ட யானைகள் இந்த பூமியில் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது Gomphothere இணையத்தில் தேடி பாருங்கள் அது பற்றிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
மூன்றாவது ஆதாரம் என்னவென்றால் போர் நடந்த சமயத்தில் லக்ஷ்மன் மூர்ச்சை ஆன போது அவரை காப்பாற்றுவதற்காக இமைய மலையில் இருந்து மூலிகைகள் நிறைந்த சிறிய பகுதியான சஞ்சீவ மலையை அனுமன் எடுத்து கொண்டு வந்து இலங்கையில் வைத்து தேவையான மூலிகைகளை எடுத்து விட்ட பிறகு மீண்டும் அந்த மலையை இருந்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டார் என்று இராமாயனத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் இமயமலையில் இருக்கும் சில மூலிகை வகைகள் இன்றும் இலங்கையில் சில பகுதிகளில் இருக்கிறது ஒரு வேலை இராமாயனத்தில் குறிப்பிட்டது போல் அனுமன் தூக்கி கொண்டு வந்த மலையில் தான் மூலிகைகள் இங்கு பரவி இருக்க கூடும் என்று சொல்லப் படுகிறது.
நான்காவது ஆதாரம் என்னவென்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்த ராம சேது பாலம் தான் இப்படி ஒரு பாலம் இருக்கிறதா இல்லையா என எத்தனையோ நாடுகள் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது இதை பற்றி சமீபத்தில் சாட்டிலைட் படங்கள் சொல்வது என்னவென்றால் இராமாயனத்தில் குறிப்பிடப்பட்ட அதே இடத்தில் ஒரு பாலம் இன்னும் தண்ணீருக்கு அடியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.இராமாயனம் உண்மை என இது மிக பெரிய ஆதாரம் என்று இது கருதபடுகிறது.
ஐந்தாவது ஆதாரம் என்னவென்றால் இராமாயண குறிப்பின் படி அனுமன் இலங்கையில் உள்ள சில பகுதிகளுக்கு தீ வைத்து விட்டு அங்கு இருந்து புறப்படுகிறார் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இன்றும் இலங்கையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்த இடத்தில் தீக்கரையான தடயங்கள் இன்னும் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் தான் இராவணன் புஷ்பக விமானத்தை நிறுத்தி இருந்தார் என்று அந்த பகுதிக்கான வரலாறு சொல்கிறது. இராவணன் சீதையை கடத்தி சென்ற பாதை எப்படி என்று சொல்ல படும் பகுதிகள் இன்று சாட்டிலைட் மூலம் பார்த்தால் அந்த பகுதிகள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் அந்த பகுதிகளில் இராமாயணம் நடந்ததுக்கு பல்வேறு ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது.
மேலும் சில ஆதாரங்கள்
அம்பி என்னும் இடம் ராமன் சீதையை தேடி செல்லும் போது சுக்ரீவனை சந்தித்தார் என இராமாயணம் சொல்கிறது சுக்ரீவன் வாழ்ந்ததாக சொல்லப்படும் சுக்ரீவ குகை இன்னும் இன்றைக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அம்பி பகுதியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த குகையில் நிறைய இடத்தில் மனிதர்களுடைய காலடி தடங்கல் இருக்கிறது. அவை அனைத்தும் ராமன் மற்றும் லக்ஷ்மன் அவர்களுடைய காலடி தடங்கள் என்று அந்த குகையின் வரலாறு சொல்கிறது.
அடுத்து லேபாக்ஷி என்ற இடத்தில் இந்த இடம் இப்பொழுது ஆந்திர மாநிலத்தில் உள்ளது இராமாயணம் குறிப்பு படி சீதையை கடத்தி கொண்டு போகும் பொழுது ஜடாயு என்ற கழுகு வடிவிலான பறவை ஒன்று இராவணின் புஷ்பக விமானத்தை வழிமறித்து அவரோடு சண்டை போட்டதாகவும் அப்பொழுது ராவணணன் அந்த பறவையின் சிறகை வெட்டி அந்த பறவையை கடுமையாக காயபடுத்தி கிளம்பிவிட்டார்.
பின்பு ராமன் சீதையை தேடி அங்கு வரும் போது அந்த பறவையை பார்த்து எழுந்திடு பறவையே என்று சொன்னதாகவும் மரணத்தின் விளிம்பில் இருந்த பறவை அங்கு நடந்த எல்லா கதையையும் சொல்லி விட்டு இறந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது தெலுங்கில் லே என்றால் எழு என்பதாகவும் பாக்ஷி என்பது பறவையையும் குறிக்கப்படுகிறது ராமன் அந்த பறவையை பார்த்து எழுந்திடு என்ற சொன்னதால் தான் அந்த ஊருக்கு லேபாக்ஷி என்ற பெயர் வந்தது என்று அந்த ஊரின் வரலாறு சொல்கிறது.
இலங்கையில் ஒரு மிக பெரிய மனிதனின் காலடி தடம் இன்றும் இருக்கிறது அந்த காலடி தடம் அனுமனுடையது என்று சொல்லப் படுகிறது அனுமன் சீதையை தேடி பறந்து போகையில் அவர் இலங்கையில் தடம் இறங்கும் போது தன்னுடைய மிக பெரிய உருவத்துடன் முதல் காலடி தடம் தான் அது என்று சொல்லப்படுகிறது. அதோடு அந்த பகுதியில் வாழும் மனிதர்களும் காட்டுவாசி மக்களும் இது ஒரு செவி வழி செய்தி என்று சொல்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் அனுமன் இலங்கை வந்த பொழுது காட்டு வாசி மக்கள் உதவியதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 41 வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு ரூபத்தில் இன்றும் அந்த இடதிற்கு வந்து அவர்களை ஆசிர்வதிக்கிறார் என்று அவர்கள் இன்னும் நம்புகிறார்கள்.
இராவணன் தான் இலங்கையில் ஒரு மிக சிறந்த மன்னன் எனவும் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான் என்பதும் ஒரே நேரத்தில் பத்து விதமான வேலைகளை செய்யும் அளவுக்கு அவர் அறிவு திறன் கொண்டவர் அப்படி என்றும் அதனால் தான் அவர் பத்து தலை உடையவர் என்று சொல்லப்பட்டதாகவும் இராவணனின் ஆட்சி காலம் ஒரு பொற்காலம் என்றும் பல கால நூல்கள் பல சொல்கின்றன. இராமன் எங்கயோ இருக்கிறார் இராவணன் எங்கயோ இருக்கிறார் கடல் தாண்டி இருந்த ஓர் அரசனான இராவணனை பற்றிய குறிப்புக்கள் இராமயணத்தில் இருக்கு என்றால் இராமாயணம் உண்மை தான் என்று பலர் சொல்கிறார்கள்.
இலங்கையில் இராவணனால் உருவாக்கப்பட்ட சூடான நீர் ஊற்று இன்றும் இருக்கிறது அந்த சூடான நீர் ஊற்று பற்றிய குறிப்புக்கள் இராமயணத்தில் இருக்கின்றது என்று பலர் சொல்கிறார்கள். இதை தவிர மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு மேலும் பல ஆதாரங்கள் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே ; ருத்ராட்சத்தை யார் யார் எப்படி எல்லாம் அணியலாம்
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..