சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்!!
சின்னவெங்காயம் அதிக மருத்துவக் குணங்கள் அடங்கிய அற்புதமான மருந்தாக செயல்படுகிறது இதில் சல்பர், வைட்டமின் சி, பி6, பயோடீன், போலிக் அமிலம் குரோமியம், கால்சியம், மற்றும் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தை வீட்டில் இருக்கும் மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது சின்னவெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி செய்கிறது.
இதனால் இதயதில் நோய்கள் வருவதை தடுக்க முடியும் இதன் மருத்துவ குணங்கள் மிக மிக அதிகம் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டு இருங்கள் நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
சின்னவெங்காயத்தின் மிக சிறந்த ஒன்று இது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமை அடைய செய்கிறது. தினமும் மூன்று சின்னவெங்காயத்தைப் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய்எதிர்ப்பு சக்தி பலம் அடையும் சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிக அதிகமாக உள்ளதே இதற்கு காரணம்.
பொதுவாக சளி இருமல் போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்பட காரணம் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான். சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள அனைத்து சத்துகளையும் முழுமையாக பெறமுடியும்.
உங்களுக்கு இருமல் வந்தால் சின்னவெங்காயம் ஐந்து எடுத்து கொள்ளவும். பின் ஒரு சுத்தமான வெள்ளை துணி ஒன்றை எடுத்து அந்த ஐந்து சின்ன வெங்காயத்தையும் அந்த துணிக்குள் வைத்து ஒரு உரலில் போட்டு இடித்து அந்த சின்னவெங்காயத்தின் சாற்றை ஒரு குவளைக்குள் போட்டு கொஞ்சம் மிளகும் உப்பும் சேர்த்து விட்டு குடிக்கவும். பின் அந்த இடித்த வெங்காயத்தை சாப்பிடவும். இப்படி தொடர்ந்து மூன்று நாள் செய்து வர இருமல் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
அதேபோன்று கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால் மஞ்சள் காமாலை நோய் வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்க வைப்பது இந்த சின்னவெங்காயம். முக்கியமாக சின்ன வெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு என்பதால் இது ரத்த நாளங்களில் துடிப்பு அதிகரித்து இரத்த சோகை உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் அடைப்புகளை ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றது. அடுத்து பலருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை பல்வலி. பல்வலி சம்பந்தமான பிரச்சனைகள் வந்தால் வெங்காய சாற்றையும் உப்பையும் சேர்த்து வெந்நீருடன் கலந்து வாய் கொப்பளித்து வருவது. மற்றும் வெறும் சின்ன வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில தடவி வந்தால் பல்வலி குறையும்.
உடல் உஷ்ணம் அதிகரிக்க பல காரணங்கள் உண்டு அந்த வகையில் சின்ன வெங்காயம் உடல் சூட்டைக் குறைக்க கூடியது. இதற்கு பழைய சாதத்தில் மோர் விட்டு நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம் இதனால் உடலின் வெப்பம் குறையும்.
மூலநோய் ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண் வருவதால் மூலநோய் ஏற்படுகிறது. இது வருவதற்கு பல காரணங்கள் உண்டு இப்படி மூல நோயால் அவதிப்படுவோர் சின்ன வெங்காயச் சாற்றோடு நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மூல நோய் குணமாகும். அதே போன்று நீர் மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தொடர்ந்து குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.
சின்ன வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சிகளை அதிகரித்து சிறு குடலின் பாதையை சுத்தம் செய்து செரிமானம் மல சிக்கல் சிறுநீர்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
செலினியம் குறைவாக இருப்பவர்களுக்குத் தான் கவலை, மனஇறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதற்கு சின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் தேவையான செலினியச் சத்து கிடைத்துவிடும். அடுத்து சின்ன வெங்காயம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக வயதான பெண்களுக்கு எலும்புகளை வலுப்படுத்தவும் மேலும் இரத்த விருத்திக்கும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. அதே போன்று கருவுறுதலுக்கு ஆண் மலட்டுத்தன்மை நீங்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் பிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. முக்கியமாக முகத்தின் அழகை அதிகரிப்பதில் முடிக்கு முக்கியப் பங்கு உண்டு எனவே எந்த பிரச்சினையால் முடி கொட்டி இருந்தாலும் முடி கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து தேய்த்து வந்தால் முடி மீண்டும் முளைக்கும் வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் இதற்கு காரணம்.
அதே போல் உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை கலந்து முடிகளின் வேர்களுக்கு போட்டு நன்றாக மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரத்துக்கு பின் குளிக்கவும்.
வெங்காயத்தில் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் மற்றொரு ஆக்ஸிஜனேற்றமான குர்செடின் உள்ளது.சின்ன வெங்காயத்தை , பூண்டுடன் சேர்ந்து சாப்பிட்டால் அதிக நன்மைகளைத் தரக்கூடும். இவை இரண்டும் சேர்ந்து, பயனுள்ள ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி மருந்துகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள் என அறியப்படுகின்றன.
குயெல்ப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களை அழிக்க சின்ன வெங்காயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வெங்காயத்தில் அதிக அளவு குர்செடின் மற்றும் அந்தோசயினின் உள்ளன – புற்றுநோய் செல்களைத் தூண்டும் பாதைகளை வெங்காயம் செயல்படுத்துகிறது. அவை புற்றுநோய் செல்கள் தொடர்பு கொள்வதற்கான சூழலை சாதகமற்றதாக்குகின்றன, மேலும் இது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
மேலும் சின்ன வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால் எந்த ஒரு தொற்றும் வராமல் தடுக்கும். அடுத்ததாக முதுமையில் வரும் மூட்டு அழற்சியை தடுக்கும். அடுத்து சின்னவெங்காயத்தையும் கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் வலி உடனே குறையும். அதே போன்று வெங்காய சாற்றை வியர்குரு மீது தடவி வந்தால் வியர்க்குரு மறையும் இது மட்டுமல்ல இதன் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். எனவே தினமும் மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட பழகிக் கொள்ளுங்கள் பல நோய்கள் உங்களை அறியாமலே காணாமல் போய்விடும்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.