ஆப்பிள் இன்று மிகவும் வலுவான மூன்றாம் காலாண்டு வருவாயைப் பதிவுசெய்தது. COVID-19 தொற்றுநோய் தனது வணிகத்தை தாக்காமல் எவ்வாறு தடுத்தது என்பதைப் பற்றிய புதியதொரு பார்வையை ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. ஆய்வாளர்கள், 52.3 பில்லியன் டாலர் வருவாய் மற்றும் ஒரு பங்குக்கு 2.07 டாலர் வருமானத்தை ஆப்பிள் நிறுவனம் எட்டும் என எதிர்பார்த்திருக்க ஆப்பிள் அந்த எல்லாக் கணிப்புகளையும் 59.7 பில்லியன் டாலர் வருவாயுடன் நசுக்கியது – கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டினை விட 11 சதவிகிதம் அதிகம் – மற்றும் ஒரு பங்கிற்கான இலாபம் 2.58 டாலராக, கடந்த ஆண்டினை விட 18 சதவிகிதம் அதிகம் . நிறுவனம் வழக்கமான வருவாயுடன் பங்குதாரர்களுக்கு நான்கு-க்கு ஒரு பங்கு பிளவினை அறிவித்தது, “ஆகஸ்ட் 24, 2020 அன்று வணிகத்தின் முடிவில் ஒவ்வொரு அப்பிள் பங்குதாரரும் பதிவுசெய்த தேதியில் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் மூன்று கூடுதல் பங்குகளைப் பெறுவார்கள்” என்று நிறுவனம் கூறியது.
வழக்கமாகிவிட்டதால், ஆப்பிளின் சேவைகள் மற்றும் அணியக்கூடிய கருவிகளின் பிரிவுகள் வலுவாக செயல்படுகின்றன. அதேபோல , ஐபோன், மேக் மற்றும் ஐபாட் அனைத்தும் மூன்றாம் காலாண்டின் போது தமது பங்கினை சிறப்பாகச் செய்து இருந்தன. புதுப்பிக்கப்பட்ட 13 அங்குல மேக்புக் ப்ரோ வசந்த காலத்தில் வெளியிடப்பட்ட நிலையில், முழு மேக்புக் வெளியீட்டு வரிசையும் இப்போது மிகவும் நம்பகமான விசைப்பலகைகளுக்கு மாறுகிறது மற்றும் சர்ச்சைக்குரிய “பட்டாம்பூச்சி பொறிமுறை” வடிவமைப்பை விடுகின்றது. முடக்கல் காலத்தால் உருவான தொலைதூர வேலை முறைகளுக்காக உருவாகியுள்ள தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இது அமைந்ததால் விற்பனை சிறப்பாக மாறியது.
ஆப்பிள் உற்பத்திகள்
5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஒரு புதிய வரிசையான “ஐபோன் 12” சாதனங்களை நிறுவனம் ஆரம்பகால இலையுதிர்காலத்தில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய அளவிலான திரைகள் கொண்டுள்ள திரை வடிவமைப்பைக் கொண்ட சிறிய அளவிலான திரையை விரும்புவோரை ஈர்க்கக்கூடியதாகக் கருதப்பட்டது. ஆப்பிள் சில ஐபோன்களுக்கு 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஆண்டாக இது இருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது. ஆனாலும் அது இந்த ஆண்டின் வழக்கமான செப்டெம்பர் வெளியீட்டில் அமையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படக்கூடிய ஆப்பிள் சாதனங்களாக பிரீமியம் ஆப்பிள்-பிராண்டட் ஹெட்ஃபோன்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐமேக், ஆப்பிளின் சொந்த சிலிக்கான் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஐமேக்குகள், டைல் போன்ற கண்காணிப்பு சாதனம் மற்றும் பல கிசுகிசுக்கப்பட்டன. iOS 14, iPadOS 14, macOS Big Sur, watchOS, மற்றும் tvOS ஆகியவற்றுக்கு வரும் பல புதிய மென்பொருள் அம்சங்களை அப்பிள் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் அவற்றில் இப்போது பெரும்பாலான புதுப்பிப்புகளுக்கு பொது பீட்டாக்கள் கூட வெளியிடப்பட்டு விட்டன.
COVID-19 தொற்றுநோயினால் உருவான தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையால் இந்த காலாண்டில் வருவாய் வழிகாட்டலை வழங்க ஆப்பிள் மறுத்துவிட்டது, மேலும் அதனை நான்காவது காலாண்டிலும் வழங்காது எனவும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் தனது மீள்விற்பனை நிலையங்களை திறந்த பின்னர்,COVID-19 தோற்று நோய் பல மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருவதால், ஆப்பிள் அமெரிக்காவில் உள்ள பல மீள்விற்பனை நிலையங்களை மூட வேண்டியிருந்ததது. திறந்திருக்கும் கடைகள் வரையறுக்கப்பட்ட திறனில் இயங்குகின்றன. மேலும் மக்கள் நுழைவதற்கு முன்பு வெப்பநிலை சோதனைகள் செய்யப்படுகின்றன. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இரண்டு தரப்பினரும் முகமூடி அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருடாந்தம் ஒரு ஐஃபோனை செப்டெம்பர் மாதத்தில் வெளியிட்டு தன் விநியோக செயற்பாடுகளை அந்த மாத முடிவுக்குள் முடித்து விடும். இந்த முறை ஒக்டொபர் வரை சாதனங்கள் தயாராக இருக்குமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் எவ்வாறாயினும் ஒரு ஹெட்போன் வெளியீடு செப்டெம்பர் மாதத்துக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைமை அதிகாரி கருத்து
டிம் குக், சக பெருந் தொழில்நுட்ப உரிமையாளர்களான ஜெப் பெஸோஸ் , சுந்தர் பிச்சை மற்றும் மார்க் ஸுக்கர்பெர்க் ஆகியோருடன், சட்டவாக்க கழகத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நம்பிக்கையின்மை மீறல்கள் மற்றும் பாரிய நிறுவனங்கள் அதிகளவு சக்தியைக் கைப்படுத்தி உள்ளனவா என்பது தொடர்பாக பற்றிய ஆய்வுக்கு சாட்சியமளிக்கச் சென்றதற்கு அடுத்த நாளே அப்பிளினுடைய வருவாய் அறிக்கையானது வெளியானது.
இந்த தொற்றுநோய்ப் பரவலானது நிறுவனத்தின் வேலைத்தளங்களை மீளத்திறப்பதற்கான கால அட்டவணையில் மேலதிக தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனம் தமது கால அட்டவணையை அடுத்த ஆண்டின் தொடக்கத்துக்கு பிற்போட்டுள்ளதாக டிம் குக் பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.
அதற்கு அடுத்ததாக இன்று அவர் பேசும்போது, வெற்றித் தொனியில், “நிச்சயமற்ற காலங்களில், இந்த செயல்திறன் எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் எங்கள் தயாரிப்புகள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் ஆப்பிளின் இடைவிடாத கண்டுபிடிப்புக்கு ஒரு சான்றாகும்” என வருவாய் அறிக்கை ஊடக வெளியீட்டில் தெரிவித்தார். ஆப்பிள் தனது புதிய ஐபோனை இவ்வாண்டு சிறிது காலத்துக்கு பின்னே வெளியிடும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. “கடந்த ஆண்டு நாம் செப்டெம்பர் இறுதியில் எமது புதிய ஐ போனை வெளியிட்டோம், இந்த ஆண்டு இன்னும் சில வாரங்களுக்குள் எமக்கு உற்பத்தி பொருட்கள் விநியோகமாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்”என அப்பிளின் தலைமை நிதிப்பிரிவு அதிகாரி லூகா மேஸ்ட்ரி முதலீட்டாளர்களுடனான நேற்றைய சந்திப்பில் தெரிவித்தார்.
இவ்வாண்டு விநியோக தாமதத்துக்கான காரணங்கள் குறித்து மேஸ்ட்ரி எந்த தகவல்களையும் வெளியிடவில்லை ஆயினும் ஐபோனின் தாமதம் குறித்த வதந்திகள் சில காலமாகவே பரவியபடி உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் தனது வரவிருக்கும் ஐபோன் கைபேசிகளை பெருமளவில் உற்பத்தி செய்வதை தாமதப்படுத்தியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. குவால்காம் கூட இந்த வார தொடக்கத்தில் ஒரு ஐபோன் தாமதத்தை சுட்டிக்காட்டியது.ஆப்பிளின் நான்காவது காலாண்டு திட்டங்களுள் ஒன்றான “உலகளாவிய 5 ஜி முதன்மை தொலைபேசி அறிமுகத்தின் தாமதத்திலிருந்து ஓரளவு தாக்கத்தை” எடுத்துக்காட்டியது. ஆப்பிள் வருடாந்தம் ஒரு ஐஃபோனை செப்டெம்பர் மாதத்தில் வெளியிட்டு அதன் விநியோக செயற்பாடுகளை அந்த மாத முடிவுக்குள் முடித்து விடும். இந்த முறை அக்டோபர் வரை சாதனங்கள் தயாராக இருக்குமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அனால் எவ்வாறாயினும் ஒரு ஹெட்போன் வெளியீடு செப்டெம்பர் மாதத்துக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற வேறு தொழில்நுட்பத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு தொழில்நுட்பம் பகுதியையும் ஆப்பிள் நிறுவனம் பற்றிய சிறப்புத் தகவல்களுக்கு ஆப்பிள் பகுதியையும் பார்வையிடுங்கள்