வரம் தரும் வரலட்சுமி விரத பூஜை முறை..
இன்று வரலட்சுமி பூஜை… விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு…!!
ஒவ்வொரு பண்டிகை அல்லது இறை வழிபாடு அல்லது விரத முறை ஒருசில குறிப்பிட்ட காரணங்களுக்காக கடைப்பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.
காலையிலேயே குளித்துவிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். வரலட்சுமி சிலை முன்பு, ஐந்து முக விளக்கேற்றி, அம்மனுக்கு உங்களால் முடித்ததை நிவேதனமாக வைத்து மலர் தூவி மந்திரங்கள் ஜபித்து அம்மனை வழிபட வேண்டும்.
செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (31.07.2020) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது.
வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.
பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :
மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.
பூஜை செய்யும் முறை :
ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம். அதன் பிறகு வாசலில் உள் நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்.
மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.
மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்களகரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.
இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.
பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நிவேதனம் :
பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
பலன்கள் :
வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
தீர்க்க சுமங்கலி வரம் அருளும்… வரலட்சுமி விரதம்… கடைபிடிப்பது எப்படி?
வீடு அல்லது கோவில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும்.
வரலட்சுமி சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலையின் முன்பு வாழை இலை போட்டு, அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.
நைவேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும். சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்து விட வேண்டும்.
இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் ஐஸ்வர்யங்கள் பெருகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்ள வேண்டும்.
வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவம் :
இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலிப் பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ, தொழில் சிறக்க வேண்டும் என்பதுதான்.
அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து கடைபிடிக்கக்கூடிய விரதமாகும்.
- தைரிய லட்சுமி (தைரியத்தின் தெய்வம்)
- செளபாக்ய லட்சுமி (நல்ல அதிர்ஷ்டத்தின் தெய்வம்)
- விஜய லட்சுமி (வெற்றியின் தெய்வம்)
- தன்யா லட்சுமி (தானியங்களை அருள்பவர்)
- சந்தான லட்சுமி (குழந்தைப் பேறு அருள்பவர்)
- வித்யா லட்சுமி (ஞானத்தின் தெய்வம்)
இந்த வரலக்ஷ்மி பூஜையை அனுஷ்டித்தால், முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கல்யாண வரம் கைகூடிவரும். குழந்தைச் செல்வம் கிடைக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வரியம் பெருகும். ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம்
விரதம் இருப்பவர்கள், காலையில் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் நிறைவு செய்வது நல்லது. முடியாதவர்கள், கஞ்சி, பால் முதலானவற்றை எடுத்துக் கொள்ளலாம். பூஜை முடிவின் போது, வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு முதலான மங்கலப் பொருட்களும்,நைவேத்திய பிரசாதம் கொடுக்கலாம். முடிந்தால், ஜாக்கெட் புடவை ஆகியவற்றை வழங்கலாம்.
வரலட்சுமி விரதமிருந்து லட்சுமியின் அருளைப் பெற்று…வளமான வாழ்வை பெறுவோம்…!
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..