Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை பித்ரு வழிபாடு!!

  • July 20, 2020
  • 509 views
Total
29
Shares
29
0
0

ஆடி அமாவாசை..

ஆடி அமாவாசை பித்ரு வழிபாடு!!
image source

இன்று முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் ஆடி அமாவாசை மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும்.

சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால் பாவங்கள் விலகி, புண்ணியம் உண்டாகும்.

ஆடி அமாவாசை பித்ரு வழிபாடு!!
image source

ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

ஆடி அமாவாசை பித்ரு வழிபாடு!!
image source

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்திற்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இக்காலத்திலும் உள்ளது.

விரதம் இருப்பது எப்படி?

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன் பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும்.

முன்னோர்களுக்குப் படைத்த உணவுகளை காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்.

ஆடி அமாவாசை பித்ரு வழிபாடு!!
image source

முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிடைக்கும். ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

ஆடி அமாவாசை பித்ரு வழிபாடு!!
image source

சூரிய பகவான் வீரம், ஆற்றல் போன்றவற்றை தருபவர். சந்திர பகவான் மகிழ்ச்சி, அறிவு, இன்பம், உற்சாகம் இவற்றையெல்லாம் தருபவர். தாய், தகப்பன் இல்லாதவர்கள் அமாவாசை நாளில் சூரியன், சந்திரனை வணங்குதல் சிறப்பு.

ஆடி அமாவாசை மிக சிறப்பு வாய்ந்தது. ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஆறு மாதங்களுக்கு தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.

பித்ரு வழிபாடு :

மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளை படைக்க வேண்டும். பின்னர் தீபாராதனை காட்டி, காகத்திற்கு உணவளிக்க வேண்டும். பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

முன்னோரை உரிய காலத்தில் வணங்கினால் அனைத்துவிதமான நன்மைகளையும் பயக்கும். வருடத்தில் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்கிறது நமது வேதம். அனைத்தையும் செய்யாவிட்டாலும் ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளில் மட்டும் அவசியம் செய்ய வேண்டும்.

தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் :

நம் முன்னோர்கள் இறந்த திதி, பட்சம் மற்றும் இறந்த மாதத்தில் தான் சிரார்த்தம் செய்ய வேண்டும். முன்னோர்கள் இறந்த நாள் அல்லாமல் அவர்கள் இறந்த நட்சத்திரத்தில் செய்யக் கூடாது. ஏனெனில் அன்று திதி மாறுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, இறந்த திதியில் தர்ப்பணம் செய்வதே உத்தமம்.

இவ்வாறு நாம் செய்யும் தர்ப்பணங்களால் முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசி வழங்குவார்கள். இதனால் நாமும், நம் சந்ததிகளும் இனிதே வாழ முடியும்.

இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..

Post Views: 509
Total
29
Shares
Share 29
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு பகுதி 1

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு பகுதி 1

  • July 19, 2020
View Post
Next Article
COVID-19 நேர்மறையான குருதியை 20 நிமிடங்களில் அறியலாம்!!

COVID-19 நேர்மறையான குருதியை 20 நிமிடங்களில் அறியலாம்!!

  • July 20, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.