ஆடி மாத சிறப்புகள்!!
வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும், ஆடி மாதம் மிகச் சிறப்பானது.ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது.
ஆடி மாதம் முருகனுக்கும் மிகச் சிறப்பான நாள். சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.
அதன் காரணமாகத்தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும்.
மேலும் ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்களும் வருகின்றன. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என பல சிறப்பு வழிபாட்டு தினங்களும் வருகின்றன.
ஆடிப்பிறப்பு (ஆடி 01)
மகாபாரத போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1ஆம் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள்.
மேலும், புதியதாக திருமணம் ஆன தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக அகற்றிவிட்டு நல்ல எண்ணங்களை விதைத்து மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்கவும், செல்வம் பெருகவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும் இவ் விழா கொண்டாடப்படுகிறது.
ஆடி கிருத்திகை :
ஆடி மாதந்தோறும் வரும் கிருத்திகை முருகனுக்கு உரிய நாளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் வருகிற கார்த்திகை நட்சத்திர நாள் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்நாளை ஆடி கிருத்திகை என்றே போற்றுகிறார்கள்.
இன்றைய தினம் ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதப் பிறப்பிலேயே ஆடி கிருத்திகையும் வருகிறது. இது கூடுதல் சிறப்பை தருகிறது. ஆடி கிருத்திகையான நாளைய தினத்தில் வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வழிபட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், அம்பாள் மாதம் என்றும் சிறப்பாக கூறுவர்.
ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும் என்பதை முன்னோர்கள் கணித்து தேடி விதை என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடிப்பட்டம் எப்போது வரும்? என காத்திருப்பர்.
ஆடிமாத செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது.
ஆடி வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும்.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
மாரியம்மனின் அருள் மழையாலே மண் குளிரும் மாரியம்மனுக்கு ஆடியில் கூழ்வார்த்து அவள் மனதை குளிரச் செய்தால், மாரியாக மழை பொழிந்து மண்ணில் வளம் சேர்ப்பாள் என்பார்கள்.
இந்த ஆடி மாதத்தில் நீங்களும் விரதம் இருந்து அம்மனின் அருளை பெறுக.
ஓம் சக்தி பரா சக்தி
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..
Wall image source :https://www.flickr.com/photos/138928889@N02/37732305845/