காது குத்துதல்..
காது குத்து இந்து மதத்தை பொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கும் காது குத்தப்படுகிறது இந்த சடங்கிட்ற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது இதைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை இங்கு பார்ப்போம்.
நம் உடம்பானது வெறும் எலும்பும் தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள நாம் சில விஷயங்களை செய்தாக வேண்டியுள்ளது.
அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு. குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கிறது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக காது விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்படுகிறது.
காது குத்திய பிறகு தோடு அணிவதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என கூறப்படுகிறது. அதோடு காது குத்துவதன் மூலம் செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது என்றும் கூறப்படுகிறது பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஆகையால் காது குத்துவதற்கு முன்பு காது சுத்தமாக இருக்கிறதா காது குத்தும் ஊசி சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். அப்படி இல்லை என்றால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
காதில் அணிவிப்பதற்காக வாங்கும் தோடு தொங்குவது போல் இல்லாமல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. குழந்தைகள் புதிதாக தோடை அணிவதால் அவர்களுக்கு அதை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அவர்கள் கையில் சிக்காத வகையில் தோடு இருப்பது நல்லது. காது குத்திய பிறகு குறைந்தது ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் தூய தேங்காய் எண்ணெய் விட்டு வரலாம். தினமும் ஓரிரு முறை கம்மலை திருக வேண்டும் அப்படி தொடர்ந்து ஆறு மாதம் வரை திருகினால் தான் கம்மல் காதோடு ஒட்டாமல் காதில் உள்ள ஓட்டை தெளிவாக இருக்கும்.
குழந்தைகளுக்கு காது குத்தும் போது சில முக்கிய விசயங்களை நாம் பேண வேண்டும்..
குழந்தைகளுக்கு காது குத்தலாம் என்று முடிவெடுக்கும் முன் குழந்தைக்கு போட வேண்டிய அனைத்து தடுப்பூசிகளும் முடிந்து விட்டதா என்று பார்க்க வேண்டும். இப்படி அனைத்து தடுப்பூசியும் முடிந்த பின் காது குத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகள் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கலாம்.குழந்தைக்கு காது குத்தும் போது அவர்களுக்கு சிறந்த வலி நிவாரணியை கொடுத்தால் அவர்களுக்கு அதிகப்படியான வலி ஏற்படுவதை தடுக்கலாம்.
குழந்தைகளுக்கு காது குத்திய பிறகு ஒரு வருடத்திற்கு அதை கழட்டாமல் இருப்பது நல்லது.காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.
உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.
காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது..
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
Wall image source:https://www.babygogo.in/article/planning-for-babys-ear-piercing