புபோனிக் பிளேக்..
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்! சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்த தொற்று நோயின் பெயரை கேட்டாலே மரண பயம் வந்து விடும். ஒரே நேரத்தில் கோடி கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தொற்று நோயாக பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் இந்த புதிய தொற்று நோய் வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் சீனாவில் பன்றிகளுக்கு ஒரு புது வித வைரஸ் காணப்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள். தற்போது அந்த வைரஸ்க்கு ஆபத்து இல்லை என்றும் ஆனாலும் அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியம் என விஞ்ஞானிகள் கூறினார்கள்.
சீனாவில் ஆடு மேய்க்கும் ஒருவர் காய்ச்சலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு புபோனிக் பிளேக் தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக செய்திகள் வெளியாகின. பலருக்கும் மனதில் பயம் அதிகரித்தது காரணம் புபோனிக் பிளேக் தொற்று நோய்க்கான வரலாறு ஒன்று உள்ளது.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இந்த புபோனிக் பிளேக் தொற்று நோய் புரட்டி போட்டது. 1347 ஆம் ஆண்டு முதல் 1351 ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை உலகில் எந்தப் போரிலும் ஏற்படாத உயிரிழப்புகள் ஏற்படுத்தியது என பிரிட்டானிகா இணையதளம் குறிப்பிடுகிறது.
மத்திய ஆசியா மற்றும் சீனாவில் உருவாகியதாக நம்பப்படும் இந்த புபோனிக் பிளேக் தொற்று வர்த்தக கப்பல்கள் மூலமாக இத்தாலிக்கும் அங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாக குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதள செய்தி கூறுகிறது. இங்கிலாந்தையும் விட்டு வைக்காத இந்த புபோனிக் பிளேக் தொற்று நோய் அந்த நாட்டு மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரை கொன்று குவித்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு மட்டுமில்லாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவிலும் சீனாவிலும் மீண்டும் பரவிய இந்த நோய்க்கு ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பரவியவர்களில் என்பது சத வீதம் மரணம் அடையும் அளவுக்கு அதன் தீவிரம் இருந்தது.
புபோனிக் பிளேக் என்றால் என்ன?
பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய் புபோனிக் பிளேக் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக அதனை கொள்ளை நோய் என அழைக்கும் வழக்கமும் உள்ளது.யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் பிளேக் தொற்று உருவாகிறது.
அணில் போன்று காட்சியளிக்கும் கோர்டன் என்ற வகை விலங்குகளிடம் அதன் உடலில் உள்ள உன்னிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படும். மனிதர்களுக்கு பரவக்கூடிய பொதுவான சில நோய்களில் புபோனிக் பிளேக்கும் ஒன்று.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 3248 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள் விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கறுப்பாக மாறிவிடும் என்பதால் இதனை The Black Death அதாவது கறுப்பு மரணம் என வரலாற்று ஆசிரியர்கள் அழைத்தனர்.
சமீப காலங்களில் இந்த தொற்றின் பாதிப்பு மிகக் குறைவாக இருந்தாலும் வரலாற்றில் இந்த நோய் ஏற்படுத்தி உள்ள சுவடுகளால் அது குறித்த அச்சம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.புபோனிக் பிளேக் தொற்றின் பாதிப்பு கழுத்து, இடுப்பில் கோழி முட்டை அளவு போல் கட்டிகள் வரும் என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.
இது போன்ற வேறு கட்டுரைகளை பார்ப்பதற்கு எமது சமூகவியல் பக்கத்துக்கு செல்லுங்கள்.