பெண்குயின்
கொரோனவை தொடர்ந்து வந்த லாக்டௌன் பிரச்சனைகளால் தியேட்டர்களில் வெளியிடாமல் அமேசன் ப்ரைம் இல் பொன்மகள் வந்தாள் படத்திற்குப் பிறகு, வெளியாகிய படம் தான் பெண்குயின். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ,மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா, மாஸ்டர் அத்வைத்,ஆகியோர் நடித்து உள்ளார்கள்..
கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணிப் பெண். கணவன் மாதம்பட்டி ரங்கராஜ் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே கல்யாணமாகி அஜய் என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை காணாமல் போனதால் மகனை தேடி தேடி பார்த்து கிடைக்காமல் பின் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரவும் கணவனுடன் மணமுறிவு ஏற்பட்டு, இன்னொருவரை திருமணம் செய்துகொண்டாள் கீர்த்தி சுரேஷ். அதன் பின் மீண்டும் மகன் நினைவாகவே இருந்தாள். ஆறு வருடங்களுக்குப் பிறகு, குழந்தை அஜய் கீர்த்தி சுரேஷ் கண்முன் வந்து நிற்கிறான். ஆனால், அவன் பேசும் மற்றும் கேட்கும் நிலைமையில் அஜய் இல்லை.
அஜய்யை கடத்தியவன் திரும்பத் திரும்ப, கீர்த்தி சுரேஷையும் மகனையும் பார்க்க அவர்கள் போகும் இடத்துக்கு எல்லாம் வருகின்றான் அந்தக் கடத்தல்காரன் யார், எதற்காக குழந்தையைக் கடத்துகிறான் என்பதுதான் இந்த படத்தின் சஸ்பென்ஸ் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலை, இந்தக் கதைக்கான மனநிலையை ஏற்படுத்துகிறது. ஆனால், அந்தக் காட்சி முடியும் போது கொலைகாரன் குடையுடன் அருகில் உள்ள ஏரியின் தண்ணீரில் இறங்கி மூழ்கி மறையும் காட்சி ஒரு வித பயத்தை கொடுக்கின்றது.
கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகள் மிகவும் அழகாக அமைந்துள்ளது. கனவு காண்பது அந்த இடத்திற்குப் போனால் ஆபத்து நிச்சயம் இருக்கும் எனத் தெரிந்தும் மன தைரியத்துடன் அந்த இடங்களுக்கு கர்ப்பிணிப் பெண்ணான கீர்த்தி சுரேஷ் தனியாகவே செல்வது போன்றவையெல்லாம் பயத்தை ஏற்படுத்துகின்றன.
படத்தின் கடைசி நேரத்தில் கடத்தல்காரன் என ஒரு டாக்டரை கைது செய்கிறார்கள். அந்த டாக்டர் காவல் நிலையத்தில் வைத்து, கீர்த்தி சுரேஷிடம் விடுகதை போடுகிறார். அதுவும் அந்தக் கடத்தல்கார டாக்டர் வீட்டிலேயே கடத்தியவர்களை கொண்டு வந்து மரண முகாம் நடத்துகிறார்.
உண்மையான கடத்தல்காரர் யார் என்று தெரியாமல் கீர்த்தி சுரேஷ் யோசித்து யோசித்து கடைசியில் கீர்த்தி சுரேஷின் முன் ஒருவர் வந்து நிற்க. அவர் ஏன் அந்த குழந்தையை கடத்தினார் அதுக்கு ஒரு கதையும் சொல்கிறார்கள்.
படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்ற எல்லோருமே ரொம்பவும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒரு நல்ல த்ரில்லருக்கான பின்னணியை சிறப்பாக உருவாக்குகின்றன. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க கூடிய விறுவிறுப்பான த்ரில் திரைப்படம் தான் ‘பெண்குயின்’
மேலும் பல சினிமா தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்
Wall image source:https://www.indiaglitz.com/penguin-review-tamil-movie-22979