Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
யோகி பாபு

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!

  • June 21, 2020
  • 404 views
Total
24
Shares
24
0
0

யோகிபாபு..

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!
image source:https://www.deccanchronicle.com/entertainment/kollywood/061019/yogi-babu-denies-claims-made-by-film-team.html

வெற்றி அடைய பணமோ, அழகோ, பின்புலமோ தேவையில்லை அயராத உழைப்பு ஒன்றே போதுமானது என்பதற்கு நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உதாரணமாவார் யோகிபாபு. வாழ்வில் ஒரு மனிதனால் எவ்வளவு அவமானங்கள் சோதனைகள் புறக்கணிப்புகள் தாங்க முடியுமோ அதை விட பத்து மடங்கு அவமானங்களை தனது வாழ்வில் அனுபவித்தவர் இன்றுவரை அனுபவித்து கொண்டிருப்பவர். இன்று இவர் இத்தனை தூரம் வளர்ந்திருந்தும் பணம் பெயர் புகழ் அனைத்தும் இவரிடமிருந்தும் சமீபத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவரால் படப்பிடிப்பின் போது அவரது உருவத்தை வைத்து மிக மோசமான முறையில் அவமானப்படுத்தப்பட்டார்.

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!
image source:https://tamil.filmibeat.com/news/comedy-actor-yogi-babu-has-joined-saravanan-arul-s-movie-066005.html

இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த பின்னரும் கூட தீண்டத்தகாத நபராக இன்றுவரை சிலரால் பார்க்கப்படும் யோகி பாபு மூன்று வேளை உணவிற்கு வழியில்லாமல் சினிமாவில் வாய்ப்புத் தேடி வீதிவீதியாக அலைந்து கொண்டிருந்த காலத்தில் எத்தனை அவமானங்களைச் சந்தித்து இருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் உரியது அல்ல வெற்றி அதற்காக ஏங்கும் முயற்சி செய்யும் அம் முயற்சியில் தோற்றும் பின் வாங்காத அனைவருக்கும் சொந்தமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
யோகி பாபு 1985 வாழைப்பந்தல் என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர் தந்தை இராணுவத்தில் சேவை புரிந்தவர் எந்தப் பின்னணியும் இல்லாத இந்த நடுத்தர குடும்பம் தனது பாடசாலைப் பருவத்தில் இருந்தே இவருக்கு இரண்டு கனவுகள் ஒன்று உதைப்பந்தாட்டம் இரண்டாவது இராணுவதில் இணைந்து தனது தாய் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். நான் பெரியவன் ஆனதும் நிச்சயமாக இராணுவத்தில் இணைந்தே தீருவேன் என தனது நண்பர்கள் ஆசிரியர்களிடம் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பாராம் யோகி பாபு உதைபந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த யோகி பாபு மாநில அளவில் விளையாடும் அளவிற்கு அதில் திறமையானவராகவும் இருந்தார்.

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!
image source:https://www.galatta.com/tamil-movies-cinema-news/bigil-kathir-jada-football-movie-teaser/

எனவே உதைபந்தாட்ட இராணுவ அணியில் எளிதாக இணைந்து விடலாம் என்பதே இவரது பல நாள் கனவாக இருந்தது. இருந்தாலும் அதை இறுதிவரை இவரால் நிறைவேற்ற முடியாமல் போனது. பலமுறை முயற்சி செய்தும் இவரை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. முயற்சி செய்து முயற்சி செய்து வெறும் தோல்விகளே எஞ்சின. இதற்கு மேல் இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவே முடியாது என்பதை உணர்ந்ததும் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார். தனது வாழ்க்கை இருண்டு விட்டதாக எண்ணி முடங்கிப் போனார்.

இருந்தாலும் ஏழை அல்லவா எத்தனை நாட்கள் தான் முடங்கியே இருப்பது வயிற்க்கு உணவு வேண்டும் அவ் உணவுக்கு பணம் வேண்டும் அப் பணத்தை சம்பாதிக்க வெளியேறினார் யோகி பாபு. வாழ்வில் நீங்கள் ஒரு மிகப்பெரும் திட்டத்தை வைத்திருந்தாலும் அதை விட சிறந்ததொரு திட்டத்தை கடவுள் உங்களுக்காக வைத்திருப்பார். நீங்கள் சந்திக்கும் தோல்விகளும் பின்னடைவகளும் அத் திட்டத்தை நோக்கி உங்களை நகர வைப்பவையே தவிர அத் திட்டத்தில் இருந்து உங்களை தூரமாக்குபவை அல்ல இது போலவே கடவுள் யோகி பாபுவிற்கும் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு சினிமாவில் எந்த வித ஆர்வமும் இருக்கவில்லை சினிமா என்பது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொழில் அதில் காண்பவர்கள் எல்லாம் இவரை கிண்டல் அடிக்கும் தனது உருவத்திற்கு நிச்சயம் இடம் இல்லை என்பது இவரின் நம்பிக்கையாக இருந்தது.

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!
image source:https://www.youtube.com/watch?v=MWmruk0CsIw

ஆனால் அந்த நம்பிக்கையை மாற்றி எழுதும் நாளும் வந்தது ஒரு நாள் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்த தனது நண்பன் ஒருவனை காண படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வருகின்றார் யோகி பாபு. அங்கு இவரது உருவத் தை கண்ட லொள்ளுசபாவின் இயக்குனர் இவரையும் ஒரு சிறு வேடத்தில் நடிக்க அழைக்கின்றார். அந்த வேடம் மிக மிக சிறியதாக அதில் இவருக்கு எந்த வித வசனமும் கொடுக்கப்படவில்லை என்றாலும் அத் தருணமே தன் உள்ளும் தனது உருவத்தின் உள்ளும் மறைந்து இருக்கும் நடிகனை அடையாளம் காண்கின்றார் யோகி பாபு. தனது உருவம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால் இதை வைத்து சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக ஒரு ஓரத்தில் நின்றாலே நன்றாக சம்பாதிக்கலாம் என எண்ணினார் லொள்ளு சபாவில் சிறிது காலம் நடித்துவிட்டு அதில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார் இருந்தாலும் அங்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை எனவே இங்கு கஷ்டப்படுவதற்கு பதிலாக சினிமாவில் வாய்ப்புத் தேடலாம் என புறப்பட்டார் ஆனால் சினிமா இவர் எதிர்பார்த்த அளவிற்கு இலகுவானதாக இருக்கவில்லை.

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..

அங்கு இவர் கேட்டதெல்லாம் ஏதோ ஒரு ஓரமாக நிற்கும் கதாபாத்திரத்தை தான் ஆனால் அதைக்கூட அவ்வளவு எளிதாக இவரால் அடைந்து கொள்ள முடியவில்லை கோடம்பாக்கத்தில் யோகிபாபுவின் கால் தடம் படாத இடமே இல்லை எனக் கூறுவார்கள். அந்த அளவிற்கு அங்கு உள்ள சந்து பொந்துக்கள் சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரிடமும் வாய்ப்பு கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் அனைவரும் இவரை ஒரு அருவருக்கத்தக்க பொருளாகவே பார்த்தார்கள். இவரது உருவத்தை காட்டி அவமானப்படுத்தினார்கள். உனக்கு சினிமா கேட்குதா எனக்கூறி துரத்திவிட்டார்கள். இவர் வாய்ப்பு கேட்டு அலைந்த பல இடங்களில் இவரை அருகில் கூட விடவில்லை வெளியில் தெருவில் நிற்க வைத்தார்கள் வாட்ச் மேனை வைத்து துரத்திவிட்டார்கள். இவர் அருகில் நெருங்குவதே ஒரு தீட்டாக கருதினார்கள்.

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!
image source:https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/sep/02/yogi-babu-karunakaran-team-up-for-a-dark-comedy-trip-2027597.html

இந்த சினிமா துறையை விட்டே சென்று விடலாம் என எண்ணினார். அனைவரும் உருவத்தை பார்த்து இவரை ஓரம்கட்டி கொண்டிருந்தபோது அந்த உருவத்தினுள் மறைந்திருக்கும் உழைப்பை கண்டார் இயக்குனர் அமீர். அதனால் 2009 இல் வெளிவந்த தனது யோகி திரைப்படத்தில் இவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். அதன் விளைவாக அதன் பின் வெளிவந்த சில படங்களில் சிறுசிறு வேடங்களில் கிடைக்க ஆரம்பித்தன. இருந்தாலும் அவை இவருக்கு கூறிக் கொள்ளும்படி எந்த அடையாளத்தையும் கொடுக்கவில்லை இப்படி ஐந்து வருடங்கள் கடந்தன.

2014இல் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படத்தில் சில காட்சிகளில் தோன்றி இருந்தாலும் அதில் இவரது காமெடியும் நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது யாரப்பா இவன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் பரவ ஆரம்பித்தது.

அதே வருடத்தில் வெளியான யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் பன்னி மூஞ்சி வாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. படத்தில் ஒரு சில நிமிடங்களே தோன்றினாலும் அக்கதாபாத்திரம் அனைவரது மனதிலும் மிக ஆழமாகப் பதிந்தது. அப்போது பலர் இவரது பெயரைக் கூட அறிந்திருக்கவில்லை ஆனால் பன்னி மூஞ்சி வாய் என்றால் அறியாதவர்கள் யாருமில்லை அந்த அளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் பரவி இருந்தது அந்த பெயர்.

சிறியது பெரியது என்று இல்லாமல் தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டார் யோகி பாபு.சந்தானம் காமெடியனாக நடிப்பதை விட்டதும் காமெடியனுக்கான ஒரு மிகப் பெரும் வெற்றிடம் தமிழ் சினிமாவில் உருவானது. அதே லாபகமாக பிடித்துக்கொண்டார் யோகி பாபு. அஜித்,விஜய் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடனும் நடித்தார் வளர்ந்து வரும் நடிகர்களுடனும் நடித்தார் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படம் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படமும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரத்தை கொடுத்தது அதன் பின் இவரது வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருந்தது இன்று யோகி பாபு இல்லாத ஒரு தமிழ் படத்தை காண்பது மிக அரிது.

விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி!!
image source:https://www.cinemaexpress.com/reviews/tamil/2018/aug/17/kolamavu-kokila-review-an-inconsistent-problematic-dark-comedy-7471.html

யோகி பாபு எவ்வளவு உயரம் கண்டாலும் அவரிடம் உள்ள பணிவு சிறிதும் குறையவில்லை. அப் பணிவு இன்று வரை நம்பர் வன் இடத்தில் வைத்துள்ளது இனியும் வைத்திருக்கும் இதில் இருந்து எங்களுக்கு என்ன விளங்குகிறது.
பணம், அழகு, செல்வாக்கு இதில் ஒன்றும் முக்கியம் இல்லை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் யோகிபாபுவை முன் கொண்டுவந்துள்ளது.

இது போன்ற மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.

Wall image source:https://www.newindianexpress.com/entertainment/review/2019/jun/29/dharmaprabhu-movie-review-low-on-jokes-high-on-lessons-1996890.html

Post Views: 404
Total
24
Shares
Share 24
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
தந்தையர் தினம்

இன்று தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது!!

  • June 21, 2020
View Post
Next Article
சிறுநீரகங்கள் கடுமையாக சேதமாகும் 7 உணவுகள்

சிறுநீரகங்கள் கடுமையாக சேதமாகும் 7 உணவுகள்

  • June 22, 2020
View Post
You May Also Like
சித் ஸ்ரீராம்
View Post

ஹீரோவாகிறார் சித் ஸ்ரீராம்..!

அதிதி
View Post

அதிதி ராவின் சினிமா அனுபவம்..!

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!
View Post

தலைவிக்கு 5ஆவது தேசிய விருது..!

சினேகா
View Post

மீண்டும் நடிக்கும் சினேகா..!

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்
View Post

தல அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் 30 நகரங்கள் கடந்து பயணம்

தெறி பேபி
View Post

வளர்ந்து விட்ட தெறி பேபி..!

சூரி
View Post

சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி..!

யோகி
View Post

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் நடிகை ஓவியா..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.