வைரஸை எதிர்கொள்வதில் சவர்க்காரம் ஒரு முக்கிய ஆயுதம்!!
வைரைஸை எதிர்கொள்வதில் சவர்க்காரம் ஒரு முக்கிய ஆயுதம் என்கிறார்
அவுஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் வேதியியல் கல்லூரி பேராசிரியர்.
சவர்க்காரத்தின் அவசியத்தை பற்றி அவர் போட்டிருக்கும் ட்விட்டர் பதிவுகள்
வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் இங்கே….
பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு முறை தங்கள் முகத்தை தொடுவார்கள். வைரஸ் நம் கையில் பட்டு விட்டது என்றால் நீங்கள் கை கழுவினால் ஒழிய வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீரைக் கொண்டு மட்டும் கை கழுவினால் போதாது.
ஏனெனில் வைரைஸை வெறும் தண்ணீரால் கழுவினால் போகாது.சவர்க்கார நீர் என்பது முற்றிலும் வேறானது.சவர்க்காரத்தில் உள்ள மூலக்கூறுகள் வைரஸின் லிப்பிடுகள் உடன் போட்டி போடுகின்றன.ஏனென்றால் நுரை கொழுப்பை வெட்டுகிறது. வைரஸை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பசையை கரைத்து விடுகின்றன.வைரைஸ்க்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பையும் சவர்க்காரத்தின் மூலக்கூறுகள் தவிர்த்து விடுகின்றன.
சவர்க்கார நீர் ஆகியவற்றின் கூட்டு செயற்பாட்டால் வெகுவிரைவில் வைரஸ்கள்
தனித்தனியாக கழன்று உதிர்கின்றன.நமது தோல் சுருக்கங்களை நிறைந்ததாக இருப்பதால் நம் கைகளை சவர்காரத்தால் நன்றாக தேய்த்து நீரிலும் முழுமையாக முக்கி எடுக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ்கள் ஒளிந்திருக்க கூடிய எல்லா இடுக்குகளுக்கும் சவர்க்கார நீர் பரவி வைரஸ்களை துடைத்தழிக்கும்.
உணவு, பூட்டுகள், கைப்பிடிகள், சுவிட்சுகள், ரிமோட் கண்ட்ரோல், அலைபேசி, கைக்கடிகாரங்கள், கணினிகள், மேசைகள், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவவும்.
தொற்று நீக்கிகள், துடைப்பு காகிதங்கள், ஜெல்கள் க்ரீம்கள் போன்றவையும்
ஆல்கஹால் கொண்டிருந்தாலும் சவார்க்காரத்தின் அளவு பயன் உள்ளவை
அல்ல.ஆகவே சானிடைசர் களைத் தேடி திரியாமல் கிடைக்கும் சவர்க்காரத்தை கொண்டு கைகளை நன்றாக கழுவுங்கள்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.