தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது அறிவியலான சில உண்மைகள்!!
கடந்த சில வருடங்களில் பரிசோதனைகள் நிகழ்ந்து தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கின்றது என்று கண்டுபிடித்து உள்ளார்கள். எதைத் தொட்டாலும் நீர் அதை நினைவில் வைத்துக்கொள்கிறது உங்களுக்கு அறிமுகமற்றவர்களிடம் இருந்து நீரை வாங்கிப் பருகுவது கூடாது. உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களிடம் இருந்தே எப்போதும் இவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உங்கள் பாட்டி கூறியிருப்பார்கள்.
உங்கள் பாட்டி கூறியது மூடநம்பிக்கை ஆக தோன்றியது அதுவே அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் போது கோவில்களில் ஒரு சொட்டு நீர் தான் கொடுப்பார்கள் அதை பெற கோடீஸ்வரர்களும் போராடுவார்கள் நீருக்கு ஞாபக சக்தி இருக்கின்றது என்பதை நம் கலாச்சாரத்தில் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம் அதன் அடிப்படையில் நீரை தீர்த்தம் என்று அழைக்கின்றோம்.
தமிழ் நாட்டில் பாரம்பரிய பழக்கங்கள் உயிர்ப்புடன் வீட்டில் சென்றால் தண்ணீரை பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் வைத்து இருப்பதை காணமுடியும் செம்பு எனப்படும் காப்பர் சத்து தான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாதுஉப்பு செம்பு தாது நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால் இரத்தம் இயல்பாக சுத்திகரிக்கப்படும் இதனால் இரத்த புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல் நல பிரச்சனைகள் வராமல் தடைபடும்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரை குடிப்பதால் தாய்க்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம் உடல் வலிமை கிடைக்கும் முன்னைய காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும் பொழுது செம்புப் பாத்திரங்களை சீராக அனுப்புவார்கள் செம்பு பாத்திரத்தில் நீர் குடித்தால் விந்தணு உற்பத்தி அதிகமாகும் இதனால் புதுமணத் தம்பதிகள் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி விரைவில் குழந்தை பேறு நோய் நொடி இல்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்கு தான்.
செம்பு பாத்திரத்தில் தொடர்ந்து நீர் குடித்தால் அல்சர் நோயை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதி முக்கியமானதாக கருதபடுகிறது. இது அதிக உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் அறையின் வெப்ப நிலையிலேயே நான்கே மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைத்தால் தான் செம்பின் இயல்பை நீர் பெறுகிறது.
செம்பு பாத்திரத்தை விலக்கி செடிக்கு அடியிலே ஊற்று என்பது தமிழ் பழமொழி இதன் பொருள் செம்பு பாத்திரத்தை கழுவிய நீரை செடிக்கு ஊற்றும் போது நீரை உறிஞ்சி வளரும் செடிகளில் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்ததாக இருக்கும்.
அக் காய்கறிகளை நாம் சாப்பிடும் போது நம் உடலுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பது பொருளாகும் செப்புப் பாத்திரம் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லி வைத்து சென்ற இந்த பழமொழி விஞ்ஞான காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று!!
மேலும் பல சுவாரஸ்யமான தகவல் அறிந்து கொள்ள எங்களுடன் இனைந்திருங்கள்