வசம்பும் இதன் மருத்துவ குணங்களும்!!
ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை மருந்து வசம்பு ஆகும். இது எல்லா விஷத்தையும் எடுத்துவிடும். ஒவ்வொரு வீட்டிலும் இது கட்டாயமாக இருக்க வேண்டிய பொருள் ஒன்று தான் இந்த வசம்பு. நம்முடைய பாட்டிமார்கள் அந்த காலத்தில் இருந்து இதை வீட்டில் வைத்து இருப்பார்கள்.
முக்கியமாக கைக்குழந்தைக்கு தேவையான இந்த வசம்பு குழந்தைக்கு சாப்பிடும் உணவாலோ அல்லது வேறு ஏதும் அலர்ஜி ஏற்பட்டால் குழந்தைக்கு கொடுக்கப்படும். சில தாய்மார்கள் தாய் பாலிலும் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
வசம்பை சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பயன்படுத்தலாம்
அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு அஜீரணம் அல்லது வயிற்று வலி வந்தால் இதை கொடுக்கலாம்
வசம்பு தூள் ஒரு டீஸ்பூன் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை காலை வேலை உணவுக்கு முன் சாப்பிட்டால் பசியைத் தூண்டி உங்களை நன்றாக சாப்பிட வைக்கும் ஆங்கிலத்தில் இதை (Acorus Calamus) Sweet Flag என்று அழைப்பார்கள்.
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரிகாய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சிறு பிள்ளைகளுக்கு வயிறு வலி அல்லது வாந்தி ஏற்பட்டால் வசம்பை அரைத்து அதில் கொஞ்சம் உப்பு நீர் சேர்த்து வயிற்றில் தடவ சுகமாகும். பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த கை வைத்தியம் செய்யலாம். முதல் மூன்று மாதம் தாய் பாலில் கலந்து வயிற்றில் தடவலாம்.மேலும் வசம்பையும் தேனையும் கொடுக்கலாம்.
இது போன்ற சுவாரசியமான சுகாதார தகவல்களை அறிய
image source:https://www.tamilsurabi.in/threads/spices-used-for-babies.11644/