Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
உடல்

மனித உடல் பற்றி 35 வியக்கவைக்கும் தகவல்கள்

  • May 28, 2020
  • 517 views
Total
29
Shares
29
0
0

இந்த இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றுமே நமக்கு எப்போதும் புதிதானவை.மனிதர்கள் நாம் பல விடயங்களை இலகுவாக செய்தாலும் நம்மாலும் உடனடியாகவோ துல்லியமாகவோ செய்ய முடியாத விடயங்கள் ஏராளம் இருக்கின்றன.உதாரணமாக இரண்டு பெரிய இலக்கங்களை பெருக்கவே நாம் கஷ்டப்படும் நேரத்தில் நம் உடல் எவ்வளவு சிக்கலான விடயங்களை துல்லியமாக செய்து முடிக்கிறது எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனித உடல் பற்றி  35   வியக்கவைக்கும் தகவல்கள்
ImAge source

மனித உடல் பற்றி நாம் அறியாத சில விந்தை தகவல்கள்.

உங்களுடைய பற்களை நீங்கள் மிகவும் ஆக்ரோஷமாக துலக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலமாக எனாமல் கரைந்து பல்லை குளிருக்கும் சூட்டுக்கும் மிகவும் உணர்திறன் உடையதாக மாற்றிவிடும்.

ஞானப்பல் எந்த ஒரு தேவையையும் நிறைவேற்றுவதில்லை. நூறு ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்த மனிதர்களிடமிருந்து நமக்கு எஞ்சியிருப்பவை அது மட்டுமே. ஆதி மனிதனுடைய மூளையானது பெரிதாக வளர வளர வாயில் இருக்கின்ற இடம் குறைந்து மூன்றாவது நிலையாக இருந்த கடைவாய் பற்கள் அனைத்தும் இல்லாமல் போய் நாம் ஞானப்பல் என்று சொல்கின்ற ஒரு பல் மட்டும் மிஞ்சியது.

விஞ்ஞானிகளால் நாம் என்ன காரணத்துக்காக கொட்டாவி விடுகின்றோம் என்பதனை சொல்லமுடியவில்லை. ஆனால் அது உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவும் என்பது மட்டும் உறுதி.

மயிர்க்கால்கள் நட்டுக் கொள்தல் / புல்லரித்தல் எனும் செயற்பாடானது மனித உடலில் தோன்றியதற்கான காரணம் நம்முடைய மூதாதையர்கள் வேட்டையாடும் விலங்குகளுக்கு பயங்கரமானவர்களாக தெரிய வேண்டும் என்பதற்காகவே.

மனித உடல் பற்றி  35   வியக்கவைக்கும் தகவல்கள்
Image source

ஒரு மனிதனுடைய உடலில் இருக்கும் இரத்த நாளங்களை ஆரம்பத்தையும் முடிவையும் தொடுத்தால் ஒட்டுமொத்த பூமியையும் 4 முறை முழுமையாக சுற்றி கூடிய அளவுக்கு அவை இருக்கும்.

நாடியை கொண்டுள்ள ஒரே ஒரு உயிரினம் மனிதன் மட்டுமே.

நீங்கள் சுவாசிக்கும் பொழுது பெரும்பாலான காற்று உட்செல்வதும் வெளிவருவதும் ஒரு நாசித்துவாரத்தினால்தான். சில மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எந்த நாசித்துவாரம் என்பது மாறும்.

உங்கள் உடல் நிறையின் எட்டு வீதம் இரத்தத்தால் மட்டுமே இருக்கிறது.

மனித மூக்கினால் ஒரு ட்ரில்லியன் (1,000,000,000,000)  மணங்களை உணரமுடியும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உண்டு. ஆனால் உயிர் வாழ்வதற்கு ஒன்று மட்டுமே அத்தியாவசியமானது.

நெட்டி முறித்தல் / உடைத்தல் என நாம் சொல்லுகின்ற சத்தமானது, நம்முடைய விரல்/ குறித்த பகுதி மூட்டுகளுக்கு இடையில் உள்ள வளிக்குமிழ்கள் உடைவதாலேயே கேட்கிறது.

மனித உடல் பற்றி  35   வியக்கவைக்கும் தகவல்கள்
image source

மனித உடலின் மிகப்பெரிய பாகம் தோல் தான். உடல் நிறையில் 15 வீதத்தை அது பிடித்துக் கொள்கிறது.

பெருவிரல்களுக்கு என தனியாக துடிப்பு வீதம் உள்ளது.

மனிதனுடைய நாக்கானது 8 வேறுபட்ட பின்னிப்பிணைந்த தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பானது யானையின் தும்பிக்கையிலும் ஒக்டோபஸ் கைகளிலும் உள்ளதாகும்.

மரபணு ரீதியாக ஆராயும் போது, எல்லா மனிதர்களும் 99 வீதம் ஒற்றுமையை கொண்டுள்ளனர்

கண்களில் அமைந்துள்ள புறத் தசைகளே மனித உடலில் மிகவும் வேகமான தசைகள். இவை உங்களுடைய இரண்டு கண்களையும் ஒரே திசையில் 50 மில்லி செக்கன் அசைவில் படம் பிடிக்க உதவுகின்றன.

Selective amygdalohippocampectomy என அழைக்கப்படுகின்ற ஒரு வகை அறுவை சிகிச்சையின் போது மூளையின் பாதி amygdala நீக்கப்படுவதோடு அந்த நோயாளரின் பய உணர்வும் நீங்கும்.

மெலடோனின் சுரப்பை சுரக்கும்  பினியல் சுரப்பியானது பைன் விதை வடிவத்தால் அந்தப் பெயரைப் பெற்றது.

முடி வளர்க்கின்ற வேகம் வருடத்துக்கு 6 அங்குலங்கள் என்பதாகும். நம் உடலில் மிக வேகமாக வளர்கின்ற உறுப்பு என்பு மச்சை ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது சராசரியாக மூன்று பில்லியன் தடவைகளுக்கு மேலாக துடிக்கிறது. ஒரு நாளில் அண்ணளவாக ஒரு லட்சம் தடவைகள் துடிப்பதனால் 2000 கலன் இரத்தத்தை உடல் முழுவதும் பாய்ச்சுகிறது.

மனித உடல் பற்றி  35   வியக்கவைக்கும் தகவல்கள்
image source

வெட்கப்படுதல் அட்ரினலின் அதிகமாக பாய்வதால் உருவாகும் ஒரு உணர்வாகும். அத்தோடு அந்த உணர்வு மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது ஆகும்.

வாய் ஒரு நாளில் ஒரு லிட்டர் உமிழ்நீரை சுரக்கும்.

உங்களுடைய மூளையானது நீங்கள் முழித்து இருப்பதைவிட தூங்கும் பொழுது அதிக செயற்பாடுகளை செய்து கொண்டு இருக்கும்.

தசை என்கின்ற வார்த்தையானது இலத்தீன் வார்த்தையில் சிறிய எலி என்கின்ற பொருள் படக் கூடியதாக இருக்கிறது. முற்கால ரோமானியர்கள் தளர்த்தப்பட்ட இருதலை தசைகளை குறிப்பிட அதனை பயன்படுத்தியுள்ளனர்.

மனித உடலில் இருந்தும் ஒளியானது வெளிப்படும். ஆனால் அது மனித கண்களால் உணர முடியாத அளவு மிக பலவீனமானதாகும்.

ஒவ்வொரு சராசரி மனிதனுடைய தொப்புள் குழியிலும் 67 வகையான வித்தியாசமான பாக்டீரியாக்கள் தங்கியிருக்கும்.

வருடா வருடம் நீங்கள் 4 கிலோகிராம் தசைகளை இழக்கிறீர்கள்.

ஒரு மாதம் ஆகும் வரை குழந்தைகள் கண்ணீரை தோற்றுவிக்காது.

மனித உடல் பற்றி  35   வியக்கவைக்கும் தகவல்கள்
image source

மனித நரம்புகளின் ஊடாக தகவல்கள் மணித்தியாலத்துக்கு 400 கிலோ மீட்டர்கள் என்கின்ற வேகத்தில் கடத்தப்படுகின்றன.

மனிதப் பற்கள் சுறாவின் உடைய பற்களைப் போலவே பலமானவை.

காலையில் உங்கள் உயரத்தை அளந்து பாருங்கள். இரவில் மீண்டும் அளந்து பாருங்கள். நீங்கள் இரவில் சிறிது கட்டையாகி இருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்களுடைய குருத்தெலும்புகள் புவியீர்ப்பினால் சுருங்குவது தான்.

ஆரோக்கியமான நுரையீரல்கள் இளஞ்சிவப்பு நுரையீரல்கள். இவை இழுபடுதன்மையோடும் இருக்கும். ஆனால் நீங்கள் புகைக்கப் புகைக்க இவை கறுப்பாகவும் திடமாகவும் மாறி விடும். 

மனித உடல் பற்றி  35   வியக்கவைக்கும் தகவல்கள்
image source

தோலானது ஆயிரம் வித்தியாசமான பக்டீரியா வகைகளை தன்மீது கொண்டது. இதனால்தான் 28 நாட்களுக்கு ஒருமுறை, மனித தோலானது புதிதாக மாறிக்கொண்டே இருக்கிறது.

மனித எலும்புகளிலேயே மிகவும் சிறிய எலும்பு காதுக்குள்ளே இருக்கிறது. மிக நீண்ட எலும்பு தொடை எலும்பு. மொத்த எலும்பு தொகுதியில் நான்கில் ஒரு பகுதி பாதத்தில் இருக்கிறது.

உங்கள் உடலில் இரண்டு முதல் ஐந்து மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. நீங்கள் உழைத்து அதனால் வியர்க்கும் பொழுது அதில் கொழுப்பு அமிலங்களும் சேர்ந்து வெளியேறும். ஆனால் சாதாரணமாக வியர்ப்பதில் அவ்வாறு இருக்காது.

ஆகவே இந்த மனித உடலானது நாம் பார்க்கும் மலைகளையும் கடல்களையும், விட நாம் அதிசயிக்கும் எத்தனையோ திரைப்படங்களையும் மொபைல் விளையாட்டுக்களையும் விட மிகவும் சிறப்பானதாகும். ஆகவே இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் இந்த உடலை சரியான முறையில் பராமரித்து இந்த இயற்கைக்கு நன்றியுள்ளவர்களாக நாம் இருக்கலாம்.

இது போன்ற சுவாரசியமான தகவல்களை அறிவதற்கு எமது சுகாதாரப் பக்கத்தை பார்வையிடுங்கள்

Wall Image source

Post Views: 517
Total
29
Shares
Share 29
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி - 11

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி – 11

  • May 28, 2020
View Post
Next Article
இயற்கை

இயற்கையாகவே அமைந்த உலகிலேயே அழகான 10 இடங்கள்

  • May 28, 2020
View Post
You May Also Like
காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும்  பிரச்சனைகள்
View Post

காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணாவிட்டால் வரும் பிரச்சனைகள்

குழந்தை
View Post

குழந்தைகளை தாக்கும் தொற்றுநோய்கள்..!

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்
View Post

உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதைக் காட்டும் 7 அறிகுறிகள்

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்
View Post

உடற்பயிற்சி செய்யாமல் எடை இழப்புக்கு பங்களிக்கும் 12 தந்திரங்கள்

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
View Post

முதுகு வலி ஏற்பட 7 காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்
View Post

உடல் சுத்தம் செய்யும்போது நாம் பிழைவிடும் 6 பாகங்கள்

ஊட்டச்சத்து
View Post

ஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்..!

டெங்கு
View Post

டெங்கு காய்ச்சலா எப்படி அறிவது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.