4.5 இல் இருந்து 1.2 இற்கு தரப்படுத்தல் நட்சத்திரங்கள் இறங்க பெற்ற டிக் டாக் ஆனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது. யார் அதை செய்தார்கள் என்பதுதான் அந்த அதிர்ஷ்டமே.. கூகிள் தான் காப்பாற்றியது.
1. என்ன ஆனது டிக் டாக் இற்கு ?
ப்ளே ஸ்டோரில் எந்த ஒரு செயலிக்கு எதிராகவும் எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக எழுப்பப்பட்டோ அல்லது ஒரு நட்சத்திர தரப்படுத்தலை பெற்றாலும் அந்த செயலியானது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படும் . அண்மையில் ஒரே இரவுக்குள் டிக்டாக்கின் உடைய தரப்படுத்தல் இவ்வாறான வீழ்ச்சியை சந்தித்தது. அதற்கான காரணம் என்ன ?
இந்தியாவைச் சேர்ந்த ஒரு டிக் டாக் பயன்படுத்துபவர் பெண் மீது அமிலத் தாக்குதல் நடத்துவது தொடர்பான ஒரு வீடியோவினை பதிவிட்டதனால், அந்த செயலி மீது பலரும் புகார் அளித்து ஒரு நட்சத்திர தரப்படுத்தலை கொடுத்துள்ளனர்.
Faisal Siddiqui இன்னும் இவர் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளதோடு அந்த காணொளி பற்றிய பிரதிகளையும் அழித்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகும் கூகுள் ஆனது தலையிட்டு இந்த காணொளியை எதிர்த்தவர்களை போலி கணக்குகள் மூலம் தங்களுடைய எதிர்ப்புப் போராட்டத்தை பெரிதுபடுத்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்னும் டிக் டாக் இனுடைய தரப்படுத்தல் ஆனது இன்னும் இரண்டு நட்சத்திரங்களை விட குறைவாகவே இருக்கிறது.
இந்த காணொளி ஆனது, இவ்வாறு செல்கிறது.
Siddiqui அவரை விட்டு பிரிய நினைக்கும் ஒரு பெண்ணை மிரட்டுவதாகவும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு திரவத்தை ஊற்றுவதும் காண்பிக்கப்படுகிறது. அந்த திரவம் உண்மையில் தண்ணீர் தான். ஆனால் அடுத்த காட்சியிலேயே அந்தப் பெண்ணுடைய முகத்திலே காயங்களும் எரிந்த தடங்களும் அதாவது எவ்வாறு ஒரு அமில வீச்சினால் காயப்படுவார்களோ அவ்வாறான காயங்களை அடைந்து இருப்பது போன்று முக பூச்சு செய்து கொண்டு அந்தப் பெண் வருகிறார்.
“எங்களுடைய கொள்கைகளின்படி மற்றவர்களுடைய பாதுகாப்பை களங்கப்படுத்துவது அல்லது உடல்ரீதியான துன்புறுத்தலை ஊக்குவிப்பது அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை பெரிதுபடுத்திக் காட்டுவதை அனுமதிக்க முடியாது.” என டிக் டாக்கின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான நடத்தைகள் எங்களுடைய வரைமுறைகளை மீறுவதாக அமைந்திருப்பதனால் நாங்கள் அந்த காணொளியை செயலிழக்கச் செய்து அவருடைய கணக்கை நிறுத்திவைத்து அவர்மீது எவ்வாறான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறினார்.
ஒரு சமூகவலைத்தள ஆதிக்கவாதியாக நான் என்னுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்வதோடு என்னுடைய காணொளியால் பாதிக்கப்பட்ட யாருக்கும் என்னுடைய மன்னிப்புகளை அர்ப்பணிக்கிறேன் என Siddiqui பின்னர் தெரிவித்தார்.
டிக் டாக் இவ்வாறான ஒரு பின்னடைவில் சிக்கிக்கொண்டதும் கூகுள் அண்மையாக பதிவிடப்பட்ட சுமார் 5 மில்லியன் ஒரு நட்சத்திர தரப்படுத்தல்களை அழித்துள்ளது. ஆயினும் ஏனைய அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
கூகுளின் பேச்சாளர் ஒருவர் இதனை திருத்தல் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
நாங்கள் போலியான துஷ்பிரயோக நடவடிக்கைகள் பற்றி அறிய பெரும் போது அவற்றுக்குத் தேவையான சரியான திருத்த நடவடிக்கைகளை பகிர் கருத்துக்கள் மற்றும் தரப்படுத்தலில் மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரியாக இந்த சம்பவமானது, டிக் டாக்கின் மாதாந்த வருமானம், மொபைல் கேம் அல்லாத யூடியூப் ,நெட்பிலிக்ஸ் போன்ற வேறு எந்த ஒரு செயலியை விடவும் அதிகரித்து வந்துகொண்டிருந்த நேரத்திலே நடந்துவிட்டது என சென்சார் டவர் நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வருமான அதிகரிப்புக்கு காரணம் டிக் டாக் கின் சீன பதிப்பான Douyin வருகையும் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனாளர்கள் இலத்திரனியல் பணத்தை வாங்கி அவற்றை செலவழித்து தமது விருப்பத்துக்குரிய உருவாக்கிகளுடைய கணக்குகளை ஆதரவு அளிக்கலாம்.
டிக் டாக் இன் மாதாந்த வருமானமானது 78 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகரித்துள்ளதோடு அதில் 86. 6 வீதமானது சீனாவினால் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2. டிஸ்னி நிறுவனத்ததின் ஒளிபரப்பு தலைவர் டிக் டாக் இன் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆகிறார்.
டிஸ்னி நிறுவனத்தின் ஒளிபரப்பு தலைவராக இருந்த கெவின் மேயர் டிக்டாக்கின் தலைவராக தன்னை தரம் இறக்கி உள்ளார்.
அவர் டிக் டாக் மற்றும் அதன் சீனத் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.
டிக் டாக் ஆனது சாதாரண சிறு காணொளிகள் பதிவிடும் தளமாக இருந்ததிலிருந்து அமெரிக்க வெளியீட்டுக்குப் பிறகு மாபெரும் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
“மை டான்ஸ் நிறுவனமானது உலகத்தின் எல்லா மூலைகளுக்கும் பரவுவதன் காரணமாக அதன் அடுத்த கட்டத்தை தலைமை தாங்குவது நான் மிகவும் சுவாரசியமாக இருக்கிறேன்.”
– கெவின் மேயர்
இவரே டிக் டாக்கின் முதலாவது தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருப்பார்.
அமெரிக்காவின் கவனம்
டிக் டாக் ஆனது இன்று உலகம் முழுதிலும் iOS மற்றும் ஆண்ட்ராய்டில் 2 பில்லியன் தடவைகளுக்கு மேலாக தரவிறக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் பயனாளர்கள் பின்னணி இசையோடு இணைந்த 15 வினாடிகள் நீளமான காணொளிகளை தயாரிக்கக் கூடியதாக உள்ளது.
அதுவும் இந்த குறிப்பிட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கிக்கிடந்த எல்லோருக்கும் இது ஒரு மிகப்பெரிய உற்சாகமூட்டி ஆக மாறியுள்ளது.
ஆனால் ஒரு சீனாவைச் சேர்ந்த தாய் நிறுவனமான டான்ஸ் டிக் டோக் உரிமையாளராக இருப்பதனை அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை. தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக இவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
டிஸ்னி வெற்றிகள்
டிஸ்னியில் இருக்கும் பொழுது, மேயர் டிஸ்னி பிளஸ் தொலைக்காட்சியின் உடைய மிக சிறந்த காலத்தினை பெற்றுக்கொடுத்தார். 54 மில்லியன் சந்தாதாரர்களை 2020 மே மாதம் வரை அவர் பெற்றிருக்கிறார்.
Hulu, Hotstar மற்றும் ESPN + ஆகிய நிறுவனங்களில் தன்னுடைய ஒளிபரப்பு முதலீடுகளை மேற்கொண்டுள்ளார்.
LucasFilm , Pixar மற்றும் Marvel ஆகியவற்றின் மிக முக்கிய புள்ளியாக இவர் திகழ்ந்து இருக்கிறார்.
டிஸ்னி என்னுடைய தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்த Bob Iger இற்குப் பிறகு இவரே அந்த இடத்தை நிரப்ப தகுதியானவராக கருதப்பட்டாலும் அந்த இடம் Bob Chapek இடம் சென்றது.
இது போன்ற தொழில்நுட்ப தகவல்களுக்கு இங்கு அழுத்தவும்