மலரும் நினைவுகளில் சில துளிகள் அந்தக்காலம் போல வருமா ?
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! ஒரு காலத்தில் இதையும் நம்பினோம்..
மலரும் நினைவுகளில் சில துளிகள் அந்தக்காலம் போல வருமா ?
என்னதான் டெக்னாலஜி நாளுக்குநாள் வளர்ந்தாலும் ஒரு காலத்தில் அனுபவித்த சந்தோஷங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது.
மறைந்து போனாலும்… இன்னும் பலரது நினைவுகளில் மறந்து போகாத பொக்கிஷ நிகழ்வுகளை இன்னும் சில பேர் மறந்து இருக்க மாட்டார்கள்! அந்தக்காலத்தில் அனுபவித்த சந்தோஷங்களை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது என்றே கூறலாம்..
ஒரு காலத்துல இதையும் நம்பினோம்
பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்.
வெத்தலை, பாக்கு போட்டால் மாடு முட்டும்.
தாலி கட்டுனா குழந்தை பிறக்கும்.
சாப்பிடலேனா பூச்சாண்டி புடிச்சுட்டு போயிடுவான்.
ஒரு டைம் முட்டுனா தலையில கொம்பு முளைக்கும்.
அரிசி சாப்பிட்டால் / தேங்காய் தண்ணீர் குடித்தால் கல்யாணம் அன்று மழை பெய்யும்.
எந்த ஆபத்தில் இருந்தாலும் சக்திமான்னு சொன்னா வந்து காப்பாற்றுவார்.
காலங்கள் மாறிக்கொண்டே போகலாம்..
ஆனால் நம் மனதில் உள்ள அழகான நினைவுகள் என்றும் மாறாது..
பார்க்க வச்சு சாப்பிட்டா வயிறு வலிக்கும்.
இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. திரும்பி பார்த்தா பேய் அடித்துவிடும்.
இடி இடிக்கும்போது அர்ஜூனா அர்ஜூனா என சொன்னால், வந்த இடி நம்மீது விழாது.
டிவி, ரேடியோக்களுக்கு உள்ளே குட்டியாக ஆளுங்க இருந்து ஆடுறாங்க, பாட்டு பாடுறாங்க.
பழங்களை விதையோடு விழுங்கினால் வயிற்றில் செடி முளைக்கும்.
டிவியில மகுடி சத்தம் வந்தால் மியூட் பண்ணனும். இல்லைன்னா வீட்டுக்குள் பாம்பு வந்துவிடும்.
ஆண்களுக்கு தலையில் ரெட்டை சுழி இருந்தால் அவர்கள் பின்னாளில் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.
படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்த காலமும் உண்டு.
முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும்.
மயில் தோகையை புத்தகத்தின் நடுவில் வைத்திருந்தால், அது குட்டி போடும்.
பல் விழுந்துவிட்டால் கூரை மேல் அணிலே அணிலே பல்லை தா என்று போட்டுவிட வேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது.
நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்.
இதுபோல் இன்னும் பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்…
இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா…!!
image source:https://www.clipart.email/clipart/easy-old-village-village-drawing-374517.html