பொலிவூட், கோலிவுட், சண்டல்வூட், மல்லுவூட் என பல மொழிகளைக் கொண்ட இந்திய திரைத்துறை, சர்வதேச திரைத்துறைகளுக்கு ஈடாக திரைப்படங்களால் சம்பாதித்து வருகிறது..
அந்த வகையில் இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு அதிகம் சம்பாதித்த டாப் 10 இந்தியத் திரைப்படங்கள் எவையென பார்ப்போம்.
இந்தியத் திரைப்படங்கள் டாப் 10 (வசூல் அடிப்படையில்)
- தங்கல் (2016)
அமீர்கான், பாத்திமா ஷானா ஷைக் மற்றும் இன்னும் பலரது நடிப்பில் வெளிவந்த மல்யுத்தம் பற்றிய திரைப்படம். உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட திரைப்படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 1957 கோடிகள்
- பாகுபலி : முடிவு (2017)
முதலாவதாக வெளிவந்து புகழ்பெற்ற பாகுபலி படத்தின் தொடர்ச்சிக் கதை. இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரம்மாண்டங்களில் ஒன்று. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற காரணத்துக்காகவே படத்தைப் பார்த்தவர்கள் ஏராளம்.
- உலகளாவிய மொத்த வசூல் 1807 கோடிகள்
- பஜிரங்கி பைஜான் (2015)
குழந்தையொன்றை அதன் சொந்த நாடான பாகிஸ்தானில் சேர்க்கப் போராடும் ஹனுமான் பக்தராக சல்மான் கானின் நடிப்பில் வெளி வந்து புகழ் பெற்ற திரைப்படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 969 கோடிகள்
- சீக்ரட் சுப்பர் ஸ்டார் (2017)
தனது இசைக்கனவை தொடர விரும்பும் பெண்ணுக்கு அவரது அப்பாவால் தடை விதிக்கப்படுகிறது. அதனைக் கடக்க அவர் தன்னை யாரென்று அறிமுகம் செய்யாமல் இணையத்தில் தனது பாடல்களை பதிவிடுகிறார். அமீர்கான் மற்றும் ஸாரியா வாசிம் ஆகியோரின் நடிப்பில் அமைந்த வெற்றித் திரைப்படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 834 கோடிகள்
- PK (2014)
பூமியில் இறங்கி தனது தொலைதொடர்பு சாதனத்தை தொலைத்த அப்பாவி ஏலியனான அமீர்கான் கவலையுடன் இருக்கும் செய்தியாளரான அனுஷ்கா ஷர்மாவை சந்தித்து தனது கருவியைத் தேடும் பயணத்தில் பூமி பற்றிய வித்தியாசமான கேள்விகளை கேட்கும் சந்தர்ப்பங்கள் பற்றிய திரைப்படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 742 கோடிகள்
- 2.0 (2018)
வெற்றிக் கூட்டணியான ஷங்கர்-ரஜினி-ரஹ்மான் இணைய அவர்களோடு அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக வெளி வந்த வெற்றித்திரைப்படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 679.5 கோடிகள்
- சுல்தான் (2016)
சல்மான் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்த பொக்சிங் திரைப்படம். தனது மரியாதையை மீளப்பெறவும் பணத்தை வெல்லவும் போராடும் இளைஞனாக வருகின்றார் சல்மான்கான்.
- உலகளாவிய மொத்த வசூல் 614.9 கோடிகள்
- பாகுபலி : தொடக்கம் (2015)
இந்தியத் திரையுலகில் தயாரிப்பின் பிரம்மாண்டங்களுக்கு மைல்கல்லாக அமைந்த திரைப்படம். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என பெரிய பட்டாளமே வெளுத்துக்கட்டிய மன்னர்காலப் படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 602 கோடிகள்
- சஞ்சு (2018)
சஞ்சய் தத், ரன்வீர் கபூர் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம். தனது பெற்றோரால் உருவாக்கப்பட்ட திரையுலக கௌரவத்தை காப்பாற்றவும் தனது சுய வாழ்வில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும் போராடும் இந்தி நடிகரின் கதை.
- உலகளாவிய மொத்த வசூல் 586 கோடிகள்
- பத்மாவத் (2018)
தீபிகா படுகோனே ராணி பத்மாவதியாக நடிக்க ரன்வீர் சிங் மற்றும் ஷாஹிட் கபூர் ஆகியோரது நடிப்பில் வெளி வந்த மாபெரும் வெற்றித் திரைப்படம். ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் நடிப்புகளுக்காக பல விருதுகளையும் வென்றெடுத்தது.
- உலகளாவிய மொத்த வசூல் 568.8 கோடிகள்
இந்தியத் திரைப்படங்கள் போனஸ் தகவல்கள்….
- இந்தியாவில் அதிகம் சம்பாதித்த 10 திரைப்படங்களில் முதல் இடங்களுக்குள் 2.0 தமிழ்ப் படமாக மட்டுமே வந்துள்ளது.
- முதல் 50க்குள் பிகில் (32), கபாலி (38), எந்திரன் (40), மெர்சல் (45), சர்கார் (46) ஆகியன இடம்பெற்றுள்ளன.
அனைவராலும் புகழப்பட்ட கே.ஜி.எப் 54வது இடம் பெற்றுள்ளது
இந்தியத் திரைப்படங்கள் பற்றி வாசித்தீர்கள் அல்லவா ? அதிகம் சம்பாதித்த தமிழ் படங்களின் பட்டியலை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
Wall Image Source: http://straightfromamovie.com/movie-reviews/indian-cinema-reviews/