woolen துணியை சுத்தம் செய்யும் முறைகள்
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
குளிர்காலம் முடிவடைந்ததும் நாம் அதிகமாக ஸ்வட்டர், கம்பளிப் போர்வைகளை பயன்படுத்த மாட்டோம். ஆனால் அவற்றை எடுத்து வைக்கும் முன்னதாக அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
கம்பளித்துணியின் மீது அதிக தூசி படிய வாய்ப்புள்ளது,ஆகவே தினமும் ஒருமுறையாவது தூசு தட்டி, துணி துவைக்க உதவும் பிரஷ் கொண்டு நீவி விட்டு வைக்கலாம். Woolen ஆடைகள் எப்போதும் ஈரப்பசையில்லாமல் நன்கு உலர்ந்திருக்க வேண்டியது அவசியம்.
நன்கு காய்ந்திருக்கா விட்டால் மக்கிப் போவதோடு, எலி, கரப்பான் என்பவற்றுக்கு விருந்தாக மாறிவிடும்.கம்பளி ஆடைகள் Drywash செய்யக்
கொடுப்பதைக்காட்டிலும் வீட்டிலேயே துவைப்பது சிக்கனம்.மட்டுமல்ல துணிகளின் ஆயுளையும் நீட்டிக்கிறது.
இப்படிப் பாதுகாக்கப்படும் துணிகளும் Woolen ஆடைகளும் நீடித்துப் பயன்தரும்.
கம்பிளிப் போர்வைகளில் கரை ஏற்பட்டிருந்தால் அந்த இடத்தில் சிறிது பெட்ரோல் போட்டு மிருதுவாகக் கசக்கவும். பிறகு பஞ்சால் ஒற்றி எடுத்துவிட்டு காயவிடவும்.
கறைப் பகுதியைத் தவிர ஏனைய எல்லாப் பகுதிகளையும் வேறொரு துணியால் போர்த்தி விடுவது நல்லது. வெளிறிப் போகாமல் பாதுகாக்கும்.
உலர்த்தும் போது நீர் சொட்டச் சொட்ட எங்கும் தொங்கவிடாமல் சமமாக தரையில் பாய் அல்லது ஷீட் போட்டு அதில் காயவிடவும்.
நேரடியாக சூரிய ஒளி பட விடாமல் பார்த்துக்கொள்ளவும். மெல்லிய துணி ஒன்றை மேலால் போட்டு விட்டு இஸ்திரி (அயன்) செய்யவும். கை பொறுக்கும் சூடு இருந்தால் நல்லது.
கரைகளின் ஓரங்களில் ஆரம்பித்து உட்புறமாக கசக்க வேண்டும். சுத்தமான நீரில் நான்கு முறை அலசி இறுக்கமாக பிழியாது hangerகலீல் மாட்டி உலரவிடவும்.
உள்ப்புறம் வெளிப்புறம் வருவதுபோல திருப்பிப் போட்டுக் காய விடவும். நாப்தலின் உருண்டைகளை பொடி செய்து துணிகளின் மடிப்புக்களில் தூவி மடிக்கவும்
பிறகு பொலித்தீன் உறைகளிலோ, வேறு துணிகளிலோ இட்டு ஈரம்படாத இடத்தில் வைக்கவும்.