இந்த வெற்றியை பெற்றுக் கொள்வது எவ்வாறு ? சற்று சிந்தித்து பாருங்கள்
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
தோல்வியால் மகிழ்ச்சி போய்விட்டதா?நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் தேடிக் கொண்டிருப்பது நிச்சயமாக வெற்றி ஆகத்தான் இருக்கும். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கூட ஒரு வியாபாரமாக இருக்கட்டும்,மாணவர்களுடைய கல்வி,இல்லை நீங்கள் தேர்ந்தெடுத்த ஏதேனும் ஒரு கலைத் துறையினர் எந்த ஒரு விடயத்திலும் வெற்றியைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
அதில் முக்கியமாக நம்முடைய நாளாந்த வாழ்க்கையில் கூட நாம் வெற்றிக்கு
அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம்.
ஏனென்றால் வெற்றி நமக்கு சந்தோஷத்தை கொண்டு வருகிறது. ஆகவே இந்த
சந்தோஷத்தை பெறுவதற்காக வெற்றியை நாம் நாடுவது இயல்பாக இருக்கலாம்.
ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கிறது உங்களுடைய வளர்ச்சிதான்.
உதாரணத்துக்கு ஒரு பரிட்சை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த மாணவன்
பரீட்சையில் வெற்றி பெறுவது என்பது அவனுக்கு இதற்கு முன்னர் தெரிந்திருக்காது தகவல்களை ஆகட்டும் பாடங்களை ஆகட்டும் அதில் உள்ள உண்மையான தரவுகளை ஆகட்டும் அவன் அறிந்து கொள்வதுதான். ஒரு பரீட்சை வெற்றிகரமாக முடித்த மாணவன் அறிவு ரீதியிலே தன்னை அதிக அளவு வளர்த்துக்கொண்டு உள்ளான் என்பது வெளிப்படை இல்லாவிட்டாலும் உண்மையான விடயமாகும்.
ஆக உங்களுடைய சந்தோஷமானது இந்த வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டிருந்தால் நீங்கள் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும் உங்களுடைய மனமானது குழப்பம் அடையாதே எப்பொழுதும் சந்தோஷம் இருக்கும். வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்களை நீங்கள் வளர்த்துக் கொண்டது போதாது என்பதை நீ ஏற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்ய உங்களுடைய மனம் தயாராக இருக்கும்.
மனதை தளர விடாதீர்கள் நீங்கள் அடைந்து இருக்கின்ற அந்த தோல்வியானது உங்களுக்கு உங்களுடைய வளர்ச்சியை அளவினை எடுத்துக்காட்டும் ஒரு
அளவுகோல் மட்டுமே. அந்த முடிவுகளை வைத்துக்கொண்டு உங்களைத் தொடர்ந்து நீங்களே வளர்ச்சிக்கு உட் படுத்துங்கள். வெற்றி தானாகவே தேடி வரும்.
image source:https://blog.onebmac.com/your-goals-are-set-things-that-stop-you-from-reaching-your-goals/