கனவுகளும் பலன்களும்!!
- வீட்டின் நடுவில் கருமை நிற சிவலிங்கம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சிவலிங்கத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் அடுத்த நிலையை அடைவதற்கான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.ஆடம்பர எண்ணங்கள் குறைந்து ஆன்மீகம் தொடர்புடைய புதிய எண்ணங்கள் உருவாகும். - என் கணவனை விட்டு, காதலனை திருமணம் முடித்து, நான் அவர் வீட்டில் இருப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து சிந்தித்து செயல்படவும்.
- உறவினர்கள் வீட்டு வாசலில் நின்று சாக்கு மூட்டையை வீட்டிற்குள் போட்டு விட்டு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதனை உணர்த்துகிறது. - சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
சிறைக்கு செல்வது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவான பதிலும் கூடிய விரைவில் கிடைக்கும். - ஒரு கன்னி பெண் இரத்தத்தில், கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு பொட்டு வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ஒரு கன்னி பெண் இரத்தத்தில், கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு பொட்டு வைப்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். - நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.மேலும், புதிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். - என் தோழி கர்ப்பமாக உள்ளார். அவள் கரு கலைந்ததாக கூறி அழுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
கரு கலைந்ததாக கனவு கண்டால் கிடைக்கின்ற வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தாமல் அவப்பெயர்கள் உண்டாவதற்கான சூழல் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது. - ஒரு நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?
ஒரு நாகம் முட்டைகள் மீது படுத்திருப்பது போல் கனவு வந்தால் செய்கின்ற செயல்களில் பல அலைச்சல்கள் மற்றும் எதிர்ப்புகளை கடந்து சென்றால் மட்டுமே எதிர்பார்த்த இலாபகரமான சூழல் உண்டாகும்.மேலும், உடன் இருப்பவர்களிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.
image source: