உலக அதிசயம் என்றால் என்ன ?
உலக அதிசயம் என தற்போது உலகத்தில் கருதப்படுகின்ற விடயங்கள் அனைத்துமே கட்டட ரீதியான சிறப்பியல்புகளைக் கொண்ட வித்தியாசமான படைப்புகள்தான். இவற்றில் கீசா, சீனப் பெருஞ்சுவர், பெட்ரா, கொலோசியம், சிச்சென் இட்சா, மச்சு பிச்சு, தாஜ் மஹால், மீட்பர் கிறிஸ்து சிலை என்பன இடம்பெற்றுள்ளன. இந்த ஒவ்வொன்றும் தனக்கான சிறப்புகளைக் கொண்டுள்ளதாக கூறப்பட்டு மக்கள் விருப்பத்தால் தெரிவு செய்யப்பட்டன.
ஒன்று உருவான பின் அதே போல் வேறு ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். அல்லது குறிப்பிட்ட காலத்தில் அது அமைக்கப்படுவதற்கான வளங்களோ வாய்ப்புகளோ கூட இல்லாத வேளையில் அவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான அமைப்புகள் உள்ள ஆனால் இந்த “உலகத்தரம் வாய்ந்த” தேர்வாளர் குழு அறிந்திருக்க வாய்ப்பில்லாத தமிழர் கட்டடக்கலைகள் தொடர்பாக இந்தக் கட்டுரையில் காணலாம்.
இசைத்தூண்கள்
தமிழர் பண்பாட்டு அம்சங்களான இசையும் பக்தியும் அவர்களது கட்டடக்கலைகளூடாக வெளிப்பட்ட அதிசயம்தான் இசைத்தூண்கள். இந்த இசைத்தூண்கள் மீது தட்டும்பொழுது அல்லது அதில் இருக்கும் சிறிய இடைவெளிகளூடாக ஊதும் பொழுது இசையை எழுப்பவல்லது. இவை அழகிய சிற்ப வேலைப்பாடுகளோடு கூடிய சிறந்த படைப்புகள். பிரார்த்தனைகளின்போது இவை இசைவாத்தியங்கலாகக் கூட பயன்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், திருநெல்வேலி நெல்லையப்பர்கோவில், ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிபிரான் கோயிலிலும்,செண்பகராம நல்லூரில் உள்ள பெருமாள் கோயிலிலும், தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த தாடிக்கொம்பு சுந்தரராசப் பெருமாள் கோயிலிலும் இன்னும் பல ஆலயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. இவை சங்கு, எக்காளம் போன்ற ஒலிகளையும் எழுப்ப வல்லன எனச் சொல்லப்படுகிறது.
உயிரியல் விஞ்ஞான வரைபடங்கள்
ஆரியதுரை வருமுத்தீஸ்வரர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது குழந்தை இந்த மாதத்தில் இந்த வடிவத்தில் இவ்வளவு விதமான நிலைகளில் இருக்கும் என்பதை பல நூறு வருடங்களுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள். இக்கோவில் 6௦௦௦ வருடங்கள் பழையதாக கூறப்பட்டாலும், நிச்சயமாக 1௦௦௦ ஆண்டுகள் முன்னையது என்பதனை சொல்லமுடிகிறது. நுணுக்குக்காட்டி இல்லாத காலத்திலேயே விந்து, சூல் என்பவற்றை வடிவப்படுத்தி இருக்கிறார்கள்.அந்நியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
வடிவமைப்பின் அரசர்கள்
இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு திகதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையூம் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இது தொடர்பாக விரிவாக வாசிக்க இந்த பக்கத்துக்கு செல்லவும்
யாழி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல் அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள்.இதில் மகர யாழி, சிம்ம யாழி என்றெல்லாம் பல வகைகள் உள்ளன. அந்த யாழியின் தலை எந்த மிருகத்தின் தலையை சித்தரிக்குமாறு உள்ளதோ அந்த மிருகத்தின் பெயர் வைக்கப்பட்டது. சில பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் உள்ள உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் அவ் உருண்டையை முயன்றாலும் உருவ முடியாது. ஏனெனில், அவ்வுருண்டையானது யாழியினை செதுக்கும்போதே அதன் வாய்க்குள் வைத்து செதுக்கப்பட்டது. சாதாரணமான களிமண் சிலைகளிலேயே நமக்கு உருண்டைகள் செய்வது என்பது மிகவும் கடினமான விடயம். அந்தக் காலத்தில் நவீன தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்தில் அவர்கள் கருங்கல்லில் இவ்வாறான சிற்பத்தை வடித்தது மலைக்க வைக்கிறது. சாதரணமாகவே வெட்டக் கடினாமான கருங்கற்களை செதுக்குவது மிகவும் மினக்கடும் வேலை. அவ்வாறன செயலில் ஒரு யாழியை வடிவமைத்து, அந்த வடிவமைப்பின் வாய்ப்பகுதியை குடையும்போது அது ஒரு உருண்டையைப் போல அமையுமாறு வடிவமைக்கப் பட வேண்டும். இந்த வகையிலான நுணுக்கமான ஒரு சிலை செய்வதே கடினமென்று நினைக்கும்போது, இதைப் போன்ற பல எண்ணிக்கையானவற்றை வடித்து உலக அதிசயங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சிற்பக் கலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் தமிழர்கள்.
புவியியல் விஞ்ஞானிகள்
உலகின் மிகப்பழைமை வாய்ந்த இடிதாங்கி எது தெரியுமா? உடனே எந்த ஐரோப்பிய நூதனசாலையில் உள்ளது என சிந்திக்க வேண்டாம். அது வேறு எதுவுமல்ல. எமது ஆலய கோபுரங்கள் தான் அவை. நம்பமுடியாமல் இருக்கலாம் ஆனால் உண்மை அதுவே. சற்று சிந்தித்து பாருங்கள் இதுவரை எந்த ஆலயமாவது மின்னல் தாக்கி அழிந்த வரலாறு உண்டா? இதன் காரணம் நம்மில் சிலருக்கு மாத்திரமே தெரிந்திருப்பது சற்று வேதனைக்குரிய விடயமே.
அனைத்து கோயில் கோபுரக்கலசங்களிலும் உள்ள மருந்து பொருட்களுக்கு மின்னலை தாங்கும் சக்தி உள்ளது. ஆனால் அந்த சக்தி 12 வருடங்களுக்கு மட்டுமே காணப்படும். எனவே தான் ஆலயங்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்திலுள்ள மருந்து பொருட்கள் மாற்றப்படுகின்றன.
300 மீற்றருக்கு இரும்பிலே கோபுரம் கட்டுவது உலக அதிசயம் என்றால், 216 அடி உயர கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தஞ்சைக் கோபுர உச்சியில் 80 தொன் திணிவுடைய கல்லை எந்தவித நவீன கருவிகளுமின்றி 1006 வருடங்களுக்கு முன் சோழன் வைத்தது எம்மை பொறுத்தமட்டில் உலக அதிசயம் தான்.
ஓசோன் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் எது உலக அதிசயம் ?
இன்று தாஜ்மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகிவிட்டன. ஒரு வல்லரசு நாடு நினைத்தால் 1000 தாஜ்மஹால்களை உருவாக்க முடியும். மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை அழகிய கலை வேலைப்பாடுகளுடன் உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் உருவாக்க முடியாது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழங்கால நாகரீகங்களுக்கு முன்பே ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம்பிடித்ததில் இருந்து தொலைநோக்கி இல்லாமல் உலகம் உருண்டை என உணர்த்தியது முதல் ஓசோன் படை பற்றி உலகிற்கு முதலில் எடுத்துக் கூறியது நமது முன்னோர்கள்.
தமிழர் பெருமை அறிவோம். அதனை காப்போம். இதே போன்ற சுவாரசியமான ஆக்கங்களுக்கு இங்கே செல்லவும்.
Image Link : https://www.talkativeman.com/img/Pillars_Pilasters_Niches_Dravidian_Temple_Architecture.jpg