EPIDERMAL மெய்நிகர் உண்மை இன் பயன்பாடு
அமெரிக்காவின் Northwestern University ஆராய்ச்சியாளர்கள் ஒரு முன்மாதிரி சாதனத்தை உருவாக்கியுள்ளனர், தோலுடன் இணைக்கக்கூடிய சிறிய அதிர்வுறும் கூறுகளுடன் பொருத்தப்பட்ட ஒரு நெகிழ்வான பொருளைப் பயன்படுத்தி மெய்நிகர் உண்மை (virtual reality)யின் வரம்பிற்குள் தொடுகை உணர்வை கொண்டு வருவதினை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Epidermal VR என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும், ஒரு குழந்தை தொடு திரையை தொடுவதன் மூலம் வேறு இடத்தில் உள்ள ஒரு குடும்ப உறுப்பினருக்கு அத் தொடுகையை உணர வைக்கவோ அல்லது ஊனமுற்ற ஒருவரின் தொடு உணர்வைப் புதுப்பிக்கவோ பயன்படுத்த படலாம் .மெய்நிகர் விளையாட்டுக்களில் விளையாட்டு பாத்திரத்தினது உடல் பகுதியில் தாக்க படும்போது வலி உணர்வை விளையாடுபவருக்கு கடத்துவதற்கு பயன்படுத்தப்படலாம்.
இதன் வடிவமைப்பு 15cm மெல்லிய சிலிகான் பொலிமரால் 32 அதிர்வுறும் ஆக்சுவேட்டர்களைக்(actuators) கொண்டுள்ளது, இது நாடா அல்லது பட்டைகள் இல்லாமல் தோலில் ஒட்டிக்கொள்கிறது அத்துடன் பெரிய மின்கலங்கள் மற்றும் மின்வடங்கள் இல்லாதது.
இது தரவை இடம் மாற்ற, near-field communication (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் பல திறன்பேசிகளில்(smartphones) கட்டணம் செலுத்துவதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.
“இது ஒரு மெல்லிய, இலகுரக அமைப்பு, காலவரையின்றி அணியலாம் மற்றும் பயன்படுத்தப்படலாம்” என்று செயல் திட்டத்தில் பணிபுரிந்த பேராசிரியர் ஜான் ஏ ரோஜர்ஸ் (Professor John A Rogers) கூறுகிறார்.
இந்த தொழில்நுட்பம் ஆனது செயற்கை உடல்பாகங்கள் பயன்படுத்துவோரின் ஆடைகள் தயாரிக்கபடுவதற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் .
நீங்கள் ZOOM பாவிப்பவரா ? அப்பொழுது இந்த கட்டுரையை படியுங்கள்.
image source:https://beebom.com/vr-artificial-tactile-signals-allow-amputees-to-feel-prosthetics-as-real-body-part/