Starlink க்குஆக SpaceXன் Falcon 9 மீண்டும் விண்ணை நோக்கிப் பறந்தது.
22 ஏப்ரல் 2020 அன்று, நியம இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணியளவில் Cape Canaveralல் அமைந்துள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து Falcon 9 விண்கலமானது ஏவப்பட்டது. அது 60 Starlink செயற்கைகோள்களை விண்ணுக்கு எடுத்துச் சென்றது. இந்த ஏவல் உலகளாவிய ப்ரோட்பாண்ட் வலையமைப்பை உருவாக்கும் SpaceXன்திட்டத்தினை ஒரு அடி முன்னோக்கி அழைத்துச்சென்றுள்ளது. SpaceXன் நிறுவனரான எலான் மஸ்க், வெற்றிகளுக்கு அடுத்து வெற்றியாக சுவைப்பதோடு, வட அமெரிக்காவின் மற்றும் கூடிய விரைவில் உலகின் முதலாவது அதியுயர் பரந்தஅலைவரி வலையமைப்பினை (High-Bandwidth Network) உருவாக்கும் தனது இலட்சியத்தினை சர்வதேச முடங்கல் காலமானது பாதிக்காத விதத்திலும் செயற்பட்டு வருகிறார்.
Starlink பற்றி அறிந்ததில்லையா ?
கவலை வேண்டாம். Starlink என்பது, விண்வெளி தயாரிப்பு மற்றும் போக்குவரத்து நிறுவனமான SpaceXனால்,முன்னெடுக்கப்படும் செயற்கைக்கோள் வலையமைப்புத் திட்டமாகும். இது இணைய வசதிகளை அளிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்க இராணுவத்துக்கும் உதவி செய்யக்கூடியது. 22ம் திகதி இடம்பெற்ற ஏவலானது, முதலாவது அல்ல; அதற்கு முன் இடம்பெற்ற 3 ஏவல்களின் தொடர்ச்சியே இது. இரண்டு வார இடைவெளி கொண்ட Falcon 9 இனுடைய பயணங்களில் அடுத்தது இந்த மே மாதத்துக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தமாக 12,000 செயற்கைகோள்கள் ஏவப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அது 42,000 ஆக அதிகரிக்கப்படலாம் எனவும் நம்பப்படுகிறது. 22 ஏப்ரல் வரை 420 நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
SpaceX Starlinkகளை நிலைநிறுத்த ஏன் இவ்வளவுதூரம் கஷ்டப்படுகிறது ?
இதற்கு முன் கிடைக்காத / அடையமுடியாத இடங்களுக்கும் அதிதுரித ப்ரோட்பாண்ட் இணையத்தை நியாயமான விலையில் வழங்குவதே மஸ்க்’ன் நோக்கம். இது, மிகப்பெரும் நகரங்கள் மற்றும் நகர்ப்புற பிரதேசங்களிலும் காணப்படும் போட்டித்தன்மை வாய்ந்த இணைய விலையிடலிலும் முற்றிலும் மாறுபட்டதாகும்.
அதனுடைய செயற்பாடுகளிலிருந்து பார்க்கும்போது,இந்த ஆண்டு இறுதியில் சேவைகளை வழங்கும் SpaceX இனுடைய நோக்கமானது, வெகு தொலைவில் இல்லை எனத் தோன்றுகிறது. அவர்களுடைய மூன்றாவது ஏவுகை ஒரு இராசாயனக்கோளாரால் சற்று பிசகலானதாக அமைந்தாலும், அதனுடைய நான்காவது ஏவல் கவரக்கூடியதாக் அமைந்தது.
சில சுமூகமான ஓட்டங்களும் தெளிவற்ற தன்மையும்
இரவு வானைக்கொண்டு அவதானிக்கும் புவியியல் ஆய்வாளர்கள், starlink குறைந்த உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதால் தங்கள் அவதானிப்புக்கு பிரச்சனை எழுவதாக் அபாய ஒலி எழுப்பியுள்ளனர். அவற்றுக்கு மஸ்க், TechCrunch இற்கு அளித்த நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
அடுத்த பிரச்சனை, விண்வெளி குப்பைகள். அதற்கும் முன்னைய பிரச்சனைக்கும் பதிலளிக்கக் கூடிய வகையில், தங்கள் வலை அமைப்பை மேலும் கீழ்நோக்கி நகர்த்தி சற்று தாழ்ந்த சுற்றுவட்டப்பாதையில் கொண்டு வருவதற்கு, தொடர்பாடல் கூட்டாட்சி சபையின் அனுமதியைக் கோரியுள்ளது. இதன் மூலம், முன்னைய நிலையை விட குறைந்தளவு நேரடி சூரிய ஒளி படும் வகையிலான ஒரு கோணத்துக்கு சாய்க்க முடியும் என்பதால் முன்னைய பிரச்சனையும் தீரும்.
நாம் தொடர்பை பெற எவ்வளவு நாளாகும் ?
தற்போதுள்ள 420 செயற்கை கோள்களைக்கொண்டு மிகக்குறைந்தளவிலான பாவனையை இவாண்டு இறுதிக்குள் வழங்க முடியும் என மஸ்க் விளங்கப்படுத்தியுள்ளார்.அதுவரை Falcon விண்ணில் பாயும் காட்சிகளை இந்த காணொளியில் கண்டுகளிக்கலாம்.
அல்லது வேறு சுவாரசியமான மனிதகுல சாதனைகள அறிய இப்பக்கத்தை பார்வையிடவும்
image source:https://wallpaperaccess.com/full/2025987.jpg