இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நம் மனித வாழ்க்கையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு எண்ணத்தின் பின்னால் இருக்கின்ற அடிப்படை அதாவது ஒரு மரத்துக்கு விதை போல இருப்பது ஒரு எண்ணம் தான். இந்த எண்ணங்கள் எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையிலே ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நாம் அறிந்து அவற்றை சரியான திசையில் திசை திருப்பும் அதன் மூலம் நாம், நாம் விரும்புகின்ற செயல்களை செய்துகொள்ளலாம்.
ஆனால் உண்மையில் இந்த எண்ணங்கள் என்பதற்கு என்ன அவ்வளவு சக்தி இருக்கின்றது என்பது தொடர்பான சரியான ஆதாரம் வேண்டும். சாதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் இன்று நான் வேலை செய்ய வேண்டும் என்றால் நான் என்னுடைய வேலையை செய்ய வேண்டும் அதை அந்த நேரத்து செய்ய வேண்டும். அதை அந்த நேரத்திற்குள் செய்து கொடுத்தால் தான் என் மீது நன்மதிப்பு ஏற்படும். எனக்கான சம்பளம் மாத இறுதியில் கிடைக்கும் என்று எத்தனை எண்ணங்கள் ஒன்றாக சேரும் பொழுதுதான் ஒருவேளை இதை நாம் முழுதாக நேரத்திலும் செய்வதற்கு முழு முயற்சி எடுக்கிறோம் .
நான் ஒரு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறோம் என்றால் சற்று சிந்தித்துப் பாருங்கள் அதை பற்றிய எண்ணங்களை நாம் நமக்குள் வர அனுமதிப்பது அதையே அந்த செயலில் நாம் ஈடுபடுகிறோம். இன்று சாதாரணமாக நிலத்திலேயே இருக்கின்ற களிமண்ணும் ஆற்றிலே இருக்கின்ற தண்ணியும் மரத்திலே இருக்கின்ற விருதுகளும் கடற்கரையில் கிடக்கின்ற மண்ணும் கடலுக்கு அடியில் இருக்கின்ற முருகை கற்பாறைகள் என்பனவும் தம் பாட்டிலே தனித்தனியாக இருந்திருக்கும். ஆனால் இவை அனைத்தையும் இந்த இந்த வடிவத்தில் எவ்வாறு சேர்த்தால் ஒன்றாக உருவாக்கமுடியும் அதற்கான எண்ணங்கள் அந்த இடத்திலே ஒன்று சேர்ந்து தன் மூலமாக இன்று மனிதன் வசிக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய வீடு அந்த இடத்திலேஉருவாகிறது. இதுதான் எண்ணங்களின் சக்தி நம் எண்ணங்களை எவ்வாறு எல்லாம் பயன்படுத்துகிறோமோ அது அவ்வாறு எல்லாம் நமக்கு விளைவுகளைக்கொடுக்கும். நல்ல எண்ணங்களை விதைப்போம் நல்லதே நடக்கும்.
image source: https://gohighbrow.com/portfolio/learning-how-to-think-clearly/