டெஸ்லா மாடல் Y யனுடைய முதலாவது இறக்குமதிகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
வழக்கம் போல நம்மை எப்பொழுதுமே அசத்துகின்ற டெஸ்லா ஆனது இயலாததை நடத்திக் காட்டி இந்தமுறையும் ஒரு செயலைப் புரிந்து இருக்கிறது. அவர்கள் தமது நவீன மாடலான மாடல் Y கம்பக்ட் எஸ்யூவி இன் முதலாவது டெலிவரியினை 2020 ஆம் ஆண்டின் முதல் கால் பாகத்தில் வெளியிடுவதாக அறிவித்து இருந்தார்கள் . அது அவர்கள் திட்டமிட்டு இருந்ததற்கு முழுமையாக 07 மாதங்கள் முன்பு ஆகும்.
Teslaவின் உடைய அதிகாரப்பூர்வ இணையத்தளமானது மாடல் Y இன் அதிக வீச்ச மற்றும் உச்ச திறனுடைய $52,990 பெறுமதியான பதிப்பு 2020 மார்ச் மாதத்தின் துவக்கத்திலேயே வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தது. டெஸ்லா 40 ஆயிரம் டாலர்கள் பெறுமதியான சிறிய பதிப்புக்கு 2021 ஆம் திகதி வெளியீட்டு திகதி அறிவித்திருந்ததில் எதுவித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை. மாடல் Y ஆனது 2018 ஆம் ஆண்டு அது அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வகையாக காணப்படுகிறது. ” இது ஒன்றும் கோமாளி கார்அல்ல. மொடல் Y ஆனது, 2020 வருடத்தில் ஒரு மில்லியன் கார்களை விற்பனை செய்யும் அந்நிறுவனத்தின் குறிக்கோளுக்கான அச்சாணி ஆகும்.” டெஸ்லா நிறுவனமானது, இந்த Y மாடல் கச்சிதமான/சொகுசு ரக SUV வாகனமாக அறிவித்துள்ளது.
மாடல் Y, தலைக்கு அதிக அளவு இடத்தையும், மூன்றாவது வரிசை இருக்கைகள் அதாவது ஏழு பேர் வரை அமரக்கூடிய இடவசதியையும் கொண்டதாயினும், 2021 ஆம் ஆண்டு வரை அது பாவனைக்கு வராது. இதன் உச்சகட்ட சிறப்பாக, அகலப்பரப்பு காட்சி அதாவது பனோரமா வகையிலான மேல் கூரையையும், புரட்சிகரமான சுய செலுத்தல் ஏற்பாடுகளையும் கொண்டது. எலான் மஸ்க் இதுதொடர்பாக ” இந்த வாகனமானது சில மென்பொருள் தரம் உயர்த்தல்களுடன் எந்த ஒரு விடயத்தையும் செய்யக்கூடிய அளவு சக்தி படைத்தது” என்கிறார்.
இவை அனைத்தும் கேட்பதற்கு சிறப்பாக உள்ளன. எவ்வாறாயினும், 75 சதவீதமான உதிரிபாகங்கள் முன்பு வெளியடப்பட்ட 3 சேடன் மொடல் இனுடைய உதிரிபாகங்களே பயன்படுத்தப்பட்டிருப்பதோடு அதே வகையான உட்கட்டமைப்பு மற்றும் டேஷ்போர்டில் பொருத்தப்பட்ட தொடுதிரை என்பன இருக்கின்றன. தொடர்ச்சியாக ஒரு விடயத்தை வெற்றிகரமாக செய்வதே மக்களை ஈர்க்கும் என்பதால் இது தொடர்பாக மக்கள்பெரிதும் அக்கறை படுத்தவில்லை. மாடல் Y இன் ஆரம்ப வெளியிடானது மக்களை தங்களுடைய இருக்கைகளின் எல்லையில் கொண்டு வந்து இருக்கச் செய்யும் அளவு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
எவ்வாறாயினும் சந்தேகத்துக்கு இடமின்றி மாடல் Y என ஊகிக்கப்படும் கார்கள் சில சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக காணப்பட்டிருக்கின்றன. இது, டெஸ்லா ஆனது ஏற்கனவே சிலரகசிய பதிப்புகளை வெளியிட்டு இருக்கலாம் என்கின்ற கருத்தை தூண்டுகிறது. எதற்கும் உங்கள் கண்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் சில டெஸ்லா தொழில்நுட்ப தகவல்களுக்கு
image source:https://amp.guideautoweb.com/en/articles/49832/tesla-model-y-meet-tesla-s-brand-new-electric-suv/