இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
வஞ்சகம் நிறைந்த உலகில் சத்ய சாய்பாபாபின் பதில்கள் ஆறுதலளிக்கக்கூடியவை
உலகத்தை திருத்த என்னால் முடியுமா ? உலகத்தை திருத்துவதற்கு முயற்சி செய்தல் அறிவீனம் அதனால் உள்நோக்கத்தை மாற்றிக்கொள் உலகம் அதற்குத் தகுந்தவாறு காட்சியளிக்கும். உன் கண்களில் தெய்வீகம் நிரம்பியிருக்கட்டும். அது காண்பதெல்லாம் கடவுளாகவே இருக்கும். சாந்தி, பிரேமை, பக்தி, மரியாதை, ஆகியவற்றின் சொரூபமாக உன்னை மாற்றிக்கொள். அப்போதுதான் நீ எல்லோரையும் சாந்தி, பிரேமை, பக்தி, மரியாதை, ஆகியவற்றின் சொரூபமாக திருவுருவாகக் காண்பாய். அப்படிச் செய்தால் உலகம் தானாக மாறும் திருந்தும் செழிக்கும்!
தர்மத்தின் குணநலன்கள் எவை ? பொறுமை, மன்னிக்கும் மனப்பான்மை, கட்டுப்பாடு, திருடாமை, தூய்மை, புலனடக்கம், திறமை, அறிவு, உண்மை, கோபமின்மை, இந்தப் பத்தும் தர்மத்தின் குணநலன்கள்
பத்தியின் ஆரம்பப் பாடம் என்ன ?பத்தியின் ஆரம்பப்பாடமே பேச்சைக் கட்டுப்படுத்து என்பது தான் பேச்சு மனிதனுக்கு இறைவனளித்த படைக்கலன் மற்ற மிருகங்களுக்கெல்லாம் தன்னைத் காத்துக்கொள்ள விரைந்தோட வசதியான பாதங்களும் கூரான நகங்களும், பற்களும் கொம்புகளும் தந்தங்களும், அலகுகளும் அளித்த கடவுள் மனிதனுக்கு அளித்திருப்பதோ இனிமையான பேச்சு ஒன்றுதான். அதன் மூலம் எதிரியை வலுவிழக்கச் செய்து எதிர்ப்புகளைக் களைத்து வெறுப்பின் பல்வகைத் தாக்குதல்களிலிருந்தும் தப்பி அவற்றை முறியடித்து மனிதனால் செயல்பட முடியும். இனிமையான பேச்சு தான் உங்களை பசுபதியாக தெய்வீகமாக ஆக்குகிறது. கடுமையான பேச்சு உங்களை வெறும் பசு வாக மிருகமாக மட்டுமே காண்பிக்கும்!ஒரு தொகுப்பே சுருக்கமாக வழங்கப்பட்டது.
ஓம் ஸ்ரீ சாய்ராம் இப்படிக்கு உங்கள் அன்பின் இணைய நண்பி -திவ்யா விஸ்வலிங்கம்-
image source:https://www.religionworld.in/service-mankind-service-god-sri-sathya-sai-super-specialty-hospital/