இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!
Punch 01 நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் ( படம் பாபா ) இது அவரின் அரசியல் பிரவேசத்தை பற்றியே அன்று விபரிக்கப்பட்டது ஆனால் இன்றே அனைவராலும் அலசப்படுகிறது.
Punch 02 அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி அசராம அடிக்கிறது இந்த பாபாவோட பாலிஸி ( படம் பாபா ) அரசியல் பிரவேசத்தின்பின் தான் எவ்வாறெல்லாம் கொள்கைகளை பரப்பப் போகிறார் என்று அன்றே பட்டும் படாமலும் சொல்லிவிட்டார் ரஜினி!
Punch 03 – நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி( படம் பாட்ஷா ) இது அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்ற Punch இதனை அரசியல் பிரசாரங்களிலும் பயன்படுத்தி மக்கள் மனதை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Punch 04 – என் வழி! தனி வழி! ( படம் படையப்பா ) ஆகமொத்தத்தில் அவர் வழி என்ன ? என்பதை யாருக்கும் கண்டுபிடிக்கமுடியாமலேயே இருக்கிறது அரசியல் தலைவர்களுக்குதலை வலி தான்!
Punch 05 – நான் தட்டிக் கேட்பேன் ஆனா கொட்டிக் கொடுப்பேன்!( படம் தர்மத்தின் தலைவன் ) இது மக்கள் மனதை கவர்வதற்காக அன்று சொல்லப்பட்ட பிரபல்யமான Punch ஆனால் அவர் தட்டியோ / கொட்டியோ இல்லாமல் கெட்டியான இடத்தில் இருந்தால் போதும்!
Punch 06 – ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் ( படம் அருணாச்சலம் ) இது பா.ஜ.க சொல்றான் நான் செய்றன்! என்பது போலவே உள்ளது. அவர் பாரதிய ஜனதா கட்சியின் ( பா.ஜ.க ) பக்கம் சார்பாக உள்ளார் என விமர்சிக்கப்படுகிறது.
இது நடிகர் ரஜினிகாந்தின் சில பஞ்சுக்களே punch அதன் அர்த்தம் நம்மவர்களுக்கு இப்போது நன்கு புரிந்திருக்கும்!இப்படிக்கு உங்கள் அன்பின் இணைய நண்பி -திவ்யா விஸ்வலிங்கம்-
image source:https://twitter.com/rajinists/status/611904007574044672