இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
இந்த உலகத்தில் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ விஷயங்கள் எங்களுக்கு தெரிந்து உண்மைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இந்த உலகம் பற்றிய உண்மையை ஆராய்கின்ற விஞ்ஞானம் என்ன சொல்கின்றது என்பதை சற்று பார்ப்போம்.
1. நியூட்டன் உடைய முதலாவது கொள்கைப்படி நாம் பாதையில் வாகனத்தை செலுத்துவதற்கு பாதையில் எந்தவிதமான ஒரு உராய்வும் இல்லை என்றால் அந்த வாகனத்தை செலுத்த ஒரு முறை தள்ளினாலே போதும் வாகனமானது நிற்காமல் போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இது நடைமுறையில் சாத்தியம் அல்ல ஏனென்றால் வளித்தடை காணப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் பாதையிலும் வாகன சில்லிலும் உராய்வானது ஏற்படாவிட்டால் வாகனத்தை நிறுத்த முடியாது.
2. ஒரு கோலின் இரு முனைகளில் நெருப்பை கட்டி விட்டு அதனை சாதாரணமாக பார்த்தால் இரண்டு தீப்பந்தங்கள் தெரியும். அதிவேகமாக சுற்றினால் ஒரு நெருப்பு வட்டமானது அசையாமல் இருப்பது போல் தெரியும். அதேபோலத்தான் இந்த உலகமும்.நாம் அசையாத திடமான பொருட்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த கற்கள், மனித உடல், மேசை கதிரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இவை அனைத்தும் அணு அளவில் போய் பார்க்கும் பொழுது ஒரு கணம் கூட நிற்காமல் அதி உயர் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கின்ற இலத்திரன்களாலேயே இவ்வாறு தோன்றுகின்றது என்பதனை விஞ்ஞானமானது விளக்குகின்றது.
3. நீளம், அகலம், உயரம் என்பன நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய பரிமாணங்கள் இதனை கடந்து நேரம் என்பது இன்றைய விஞ்ஞான உலகில் நான்காவது பரிமாணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆதலால்தான் வெளி அதாவது இடம் இல்லாமல் நேரம் இல்லை நேரம் இல்லாமல் வெளி இல்லை என விஞ்ஞானம் ஆனது வரையறுக்கிறது.
நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுதும் கூட நேரம் என்கின்ற பரிமாணத்தின் ஊடாக நீங்கள் முன்னோக்கி அசைந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்தீர்களாயின் இந்த விஞ்ஞான விளக்கம் ஆனது உங்களுக்கு புரியக் கூடியதாக இருக்கும்.
image source:https://www.asianscientist.com/2016/07/features/grand-challenges-for-science-21st-century-ntu-singapore/