வெயிலில் செல்லும் பொழுது எங்களுடைய சுற்றாடலில் இருக்கின்றது சிக்கல்கள் மற்றும் தூசுகள் அனைத்தும் நம்முடைய முகத்திலே சேர்வதன் காரணமாக நம்முடைய முகம் பொலிவிழந்து காணப்படும்.
இதைத்தவிர புள்ளிகள் தோன்றுதல் அல்லது கிருமிகள் உட்கொள்வதன் மூலமாக முகத்தில் பருக்கள் தோன்றுதல் முதலியவையும் உருவாகும். இவ்வாறானபிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக உங்கள் அறிவு வழக்கமான முகத்தை விட சிறிதளவு பொலிவிழந்த முகத்தை நீங்கள் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து வெளிவர நாம் வழக்கமாக அழகு சாதன உற்பத்திகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை தயாரிக்கப்படும் முறைகள் மற்றும் அவற்றின் இருக்கின்ற எல்லா விடயங்களும் அனைவருக்கும் ஒத்து வரக் கூடியவை அல்ல. ஆகவே சிறிய இயற்கையான முறைகளைப் பார்ப்போம்.
பயறு, நன்கு காயவைத்த ஆரஞ்சு தோல், நன்கு காயவைத்த செவ்வரத்தை இலைகள், இவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு மிக்ஸியில் அரைக்க வேண்டும். ஆரஞ்சு தோல் மற்றும் செவ்வரத்தை இலை என்பன கையால் பிடித்தால் பேபர் போல இருக்குமாறு அளவுக்கு நன்கு வெயிலில் காய்ந்து முறுகல் அடைந்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் பவுடராக அரைக்கலாம்.
பிறகு இந்த எல்லா பொடிகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து கலக்க வேண்டும்.இந்த கலந்து வைத்த பவுடரை தண்ணீர் படாத இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
தினமும் வேலைகள் எல்லாம் செய்து முடித்த பின்பு அல்லது வெளியில் சென்று வந்த பிறகு இந்த பவுடரை சிறிதளவு நீரில் இட்டுக் கரைத்து பூசக் கூடிய மாதிரியான தன்மைக்கு பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு முகத்தில் ஒரு டிஸ்யூக்களால் இருக்கின்ற மேலான தூசுகளை அனைத்தையும் சிறிதளவு நீரோடு துடைத்து எடுக்க வேண்டும்.அதற்குப் பிறகு கரைத்து எடுத்த இந்தபவுடரை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு இளம் சூடான நீரால் கழுவ வேண்டும்.முழுமையாக கழுவிய பிறகு அந்த நீர் காய முன்பே கற்றாழை கிடைக்கும் ஆக இருந்தால் தக்காளியை இரண்டாக வெட்டி அதில் முதலில் வழியும் சளி போன்ற பதார்த்தத்தை எடுத்து முகத்தில் பூசவேண்டும். பூசி இரண்டு விரல்களால் ஒவ்வொரு புள்ளியையும் நெற்றி முதல் கணம் வரை அனைத்தையும் தேய்த்து அழுக்குப் போக மாறு செய்ய வேண்டும்.
மீண்டும் மெல்லிய சுடு தண்ணீரால் கழுவி விட்டு சற்று குளிர் நீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமாக
முகம் நன்கு பொலிவாகும்