பழக்கம் இல்லாத மனிதர்கள் மற்றும் பழக்கம் இல்லாத ஊரை கனவில் கண்டால் என்ன பலன்? பழக்கம் இல்லாத மனிதர்கள் மற்றும் பழக்கம் இல்லாத ஊரை கனவில் கண்டால் விருப்பம் இல்லாத பணிகளை மேற்கொள்ள போவீர்கள் என்பதைக் குறிக்கின்றது.
இறந்த தந்தை என் வீட்டிற்கு வந்து பசி என்று சொல்லி, சாப்பிட்டு செல்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தந்தையின் ஆன்மா நிம்மதியற்ற சூழலில் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே, அமாவாசை அன்று தந்தைக்கு தர்ப்பணம் செய்து வர சுபிட்சம் உண்டாகும்.
கனவில் யானைகள் கரும்பு சோலையை கூட்டமாக மேய்வதுபோல் தோன்றினால் என்ன பலன்?கனவில் யானைகள் கரும்பு சோலையை கூட்டமாக மேய்வதுபோல் தோன்றினால் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பல்லியை கொல்லுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?பல்லியை கொல்லுவது போல் கனவு கண்டால் கிடைக்கின்ற பொன்னான வாய்ப்புகளை எல்லாம் தவறவிடுவீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
கிணற்றில் தண்ணீர் வற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?கிணற்றில் தண்ணீர் வற்றுவது போல் கனவு காண்பது ஆடம்பர செலவுகளால் நெருக்கடியான சூழலில் மாட்டிக் கொள்ள போவீர்கள் என்பதை உணர்த்துகிறது.
வயதான பெரியவரை கனவில் கண்டால் என்ன பலன்? வயதான பெரியவரை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.
மல்லிகைப் பூவை கனவில் கண்டால் என்ன பலன்?மல்லிகைப் பூவை கனவில் கண்டால் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
எனக்கு பேய் பிடித்தது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?பேய் பிடித்தது போல் கனவு கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
image source:https://www.thailandtatler.com/life/sleep-tech-devices-for-a-good-nights-rest