எண்ணெய் பசை சருமம் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இவைகள் இவற்றை எவ்வாறு தவிர்ப்பது எதிர்கொள்வது இதோ குறிப்புகள் உங்களுக்காக
எண்ணெய் வடியும் சருமத்தை பெற்றவர்கள் ஒரு நாளில் மும்முறைவெதுவெதுப்பான நீரில் நெற்றி, மூக்கு, முகம் போன்ற இடங்களில் விரல்நுனியால் மசாஜ் செய்து கழுவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
உணவில் கொழுப்பு பொருட்களை தவிர்ப்பது நல்லதுமுகத்தில் எண்ணெய் பசை இருந்தால் ஆப்பிள் அல்லது பப்பாளி அல்லதுவாழைப்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றை மிக்ஸியில் போட்டு அரைத்துஇக்கலவையை உடன் ஒரு ஸ்பூன் மைதா அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில்தேய்த்து காய வைக்கவேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர முகம் மிருதுவாகும்.
எண்ணெய் வழியும் முகத்தை உடையவர்கள் சோப்பைப் பயன்படுத்தக் கூடாதுகடலைமாவு பயத்தமாவு சீயக்காய் தூள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
எண்ணைப்பசை மிகுந்த முகத்தில் முட்டையின் வெள்ளை கருவுடன் சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து தேய்த்து அரை மணி நேரம் ஊரிய பின்குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
முகத்தில் எண்ணெய் வழிவதை போக்க ஐஸ் கட்டியை மெல்லிய துணியில்வைத்துக் கட்டி முகத்தில் காலை-மாலை ஒற்றி வந்தால் எண்ணெய் வழிவதுமாறிவிடும்.
வேப்ப இலை, புதினா இலை, மஞ்சள் மூன்றையும் நன்றாக மைபோல் அரைத்துமுகம் முழுவதும் பத்து போல சீராகப் போட வேண்டும் தினமும்.
இரவில் படுக்கப்போகும் போதும் கிளிசரின் தடவிக் கொண்டால் எண்ணெய்ப் பசை நீங்கிமுகம் மிருதுவாகும்.
எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள சருமம் உள்ளவர்கள் கோதுமைத் தவிடுமுகத்தை தேய்த்து கழுவி வருவது நல்லது எண்ணெய் பசை நீங்கி முகம் நன்றாகஇருக்கும்.
-படித்தேன் பகிர்ந்தேன்-
image source:https://www.bridestoday.in/beauty-and-grooming/story/pre-bridal-skincare-routine-for-oily-skin–brides-today-1593