இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
நூலகங்கள் என்பவை மனிதனுக்கு மிகவும் முக்கியமான அறிவுத் தீர்வாக காணப்படுகின்றன.
நூலகங்களுக்கான அடிப்படையானது ஆரம்ப காலத்தில் அதாவது கிரேக்க ரோமானிய காலங்களில் இருந்தே இருந்து வந்திருக்கிறது.
தமிழ் கலாசார முறைகளின்படி குகைவாசிகள் கூட நூலகங்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகின்றது. அதாவது தாம் எழுதிய எழுத நினைத்தவிடயங்களை ஒரு ஆமை ஓட்டில் அல்லது சூடாக்கப்பட்ட களிமண் தட்டிலோ எழுதி அவற்றை ஒரு இடத்தில் சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் தகவல்களை காணாமல்போகாமல் ஒன்றாக சேர்த்து வைக்கும் ஒரு நோக்கத்திலேயே இந்த திட்டமானதுஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரித்தானியர்கள் போன்றவர்கள் நாடு விட்டு நாடு பயணம்செய்ய ஆரம்பித்த காலங்களில் இருந்து தங்களுக்கு தேவையான சகல உலக வரைபடங்கள் மற்றும் நாடுகள் பற்றிய கூற்றுகளை ஒன்றாக சேர்த்து தனியே வைத்திருக்கும் ஒரு முறையினைஉருவாக்கியுள்ளார்கள்.
பிற்காலத்தில் அவ்வாறான நூல்கள் ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டுஅறிஞர்கள் மட்டுமே செல்லக்கூடிய ஒரு இடமாக இந்த நூலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
பிற்காலத்தில் இவ்வாறான நூலகங்கள் இராணுவம் பொலிஸ் நிலையங்கள் போன்ற உயர் அதிகாரி நிலையங்கள் அனைத்திலும் உருவாக ஆரம்பித்தன.
காலப்போக்கில் கல்வியிலே பல்கலைக்கழகங்கள் உருவாக ஆரம்பித்தது விஞ்ஞானிகள் உடைய ஆராய்ச்சிக் குறிப்புகளை அந்த பல்கலைக் கழகங்களில் ஒரு நூலகத்தில் சேமித்து வைக்க ஆரம்பித்தார்கள்.
இந்தப் பழக்கம் தொடர்ச்சியாக பின்பற்ற விட்டு வந்ததால் இன்று பாடசாலைகள் வரை அனைத்து இடங்களிலும்மிகவும் முக்கியமான அரிதான தகவல் பொதிந்த நூல்களை நாம் நூலகங்களில் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது.
இன்றைய காலங்களிலே நூலகங்களில் எழுத்து ரீதியான புத்தகங்களைத்தவிர பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பனவும் அவற்றைத் தாண்டி இலத்திரனியல் ரீதியானதகவல் ஊடகங்களும் கூட உருவாகிவிட்டன.
நாம் நம்மை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மட்டுமில்லாமல் அறிவு ரீதியாகவும்வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதனால் அதற்கு ஒரு சிறந்த இடமாக நாம் நூலகத்தை பயன்படுத்தலாம்.
image source:https://cornellsun.com/2019/11/19/olin-and-uris-libraries-to-undergo-renovations-to-adapt-to-modern-standards/