இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!!
பிளிப் புக் (Flip Book ) என்பது ஆரம்ப காலங்களில் அனிமேஷன் செய்வதற்கு முன்பதாக இருந்த காலங்களில் மிக மிக அடிப்படையான கார்ட்டூன் வடிவங்களை உருவாக்க பயன்பட்ட ஒரு முறையாகும்.
ஒரு சிறிய கொப்பியில் ஒவ்வொரு தாளிலும் தனித்தனியாக ஒரே நடவடிக்கையின் அடுத்தடுத்த கட்டங்களை ஒன்றுக்குப் பின் ஒன்று நேராக வைத்து வரைவார்கள்.
அதாவது ஒருவன் பந்தை தூக்கி போடுவது போல வரைய வேண்டும் என்றால், முதலாவது தாளில் அவன் பந்தை கையில் வைத்திருப்பது போல் வரைய வேண்டும்.
அடுத்த தாளில் அவன் சிறிதளவு கையை பின்னுக்கு எடுப்பதுபோல் வரையவேண்டும். வரையும் பொழுது அதே நேரிலே வரைவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் உருவம் அசைந்து விடும். அவர் வரைந்த பின்னர் அடுத்த ஒரு 6 தாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கைகளை பின்னால் எடுப்பது போல் வரைந்து, அதிலிருந்து ஒரு 10 முதல் 15 தாள்களுக்கு அவன் கையை நேராக நீட்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாக வரைய வேண்டும். அதன் பின்னர் அவன் கையிலிருந்து விடுபட்டு பறந்து செல்வது போல ஒரு ஏழு முதல் எட்டு தாள்களுக்கு வரையலாம்.
தற்பொழுது அனைத்து தாள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நேரிலே வைத்துவிட்டு மூத்த தாள்களையும் பெருவிரலுக்கும் மடித்து இருக்கக்கூடிய ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துவிட்டு நாம் காசு தாள்களை என்னும் பொழுது அவற்றை தள்ளி விடுவது போல பெருவிரலால் தள்ளிக் கொண்டே வர வேண்டும்.
இப்பொழுது தாள்கள் வேகமாக அசைவதால் அந்த சிறுவன் பந்தை கையை மடித்து நீட்டி வீசுவது போல இருக்கும். இவ்வாறான தாள்களை எடுக்கும் பொழுது ஒரு பெரிய தாளை எடுத்து செய்தால் புரட்டுவதும் கஷ்டமாக இருக்கும் தாளும் அநியாயமாகும்.
அதனால் ஒரு A4 அளவிலான தாளை ஆறு துண்டுகளாக வெட்டி பயன்படுத்தலாம். இவ்வாறு Flip Book ஒன்றை வீட்டில் இருக்கின்ற சிறுவர்களை செய்ய பழகும் பொழுது ஒரே ஒரு படத்தை திரும்பத் திரும்ப வரைவதன் அவர்களுடைய வரைவு திறன் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பொறுமையும் அதிகரிக்கும். இவ்வாறான ஒரு உருவத்தை வரைந்து விட்டு அதனை வேகமாக நகர்த்தும் போது அசைவதை பார்க்கும் பொழுது உருவாகும் சந்தோஷம் சிறுவர்களுக்கு கற்பனை மற்றும் செயலாக்க ஊக்கத்தை அளிக்கும்.
image source:https://www.nyfa.edu/student-resources/flipbook-animation-techniques-and-examples/