கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள்.
அவ்வாறு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ‘சுவாமி சரணம்” என்று அடிக்கடி கூறுவார்கள். அதில் சரணம் என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்வோம்.
சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பை சொல்லி படிப்பவர்களுக்கு சுபம் உண்டாகிறது.
‘ச” என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்ஹாரம் என்று பொருள்.
‘ர” என்ற எழுத்திற்கு ஞானத்தை தர வல்லது என்று பொருள்.
‘ண” என்ற எழுத்திற்கு சாந்தத்தை தரவல்லது என்று பொருள்.
‘ம்” முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களை போக்க வல்லது என்று பொருள். சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.
ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம்
அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்
சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்
வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்.
ஐயப்ப பக்தர்கள்.. கருமை, கருநீலம் நிறங்களில் உடை அணிவது ஏன்?
ஐயப்பனை பற்றிய சிறப்புகள்
கார்த்திகை மாதம் துவங்கியதும், ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள்.
ஐயப்பன் கலியுக வரதன், கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.
ஐயப்பனின் சிறப்புகள்
ஐயப்பன் சபரிமலையை ஒட்டிய காடுகளில் தான் மகிஷாசுரனின் தங்கையாகிய மகிஷியை வதம் செய்தார்.
பதினெட்டு எனும் எண் ஐயப்பனுக்கு விசேஷமானது என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு தெரியுமா? சபரிமலையை சுற்றிலும் 18 காடுகள் இருக்கின்றன.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை கவர்ந்திழுப்பது சபரிமலையும், அதில் வீற்றிருக்கும் ஐயப்பனும் தான்.
ஐயப்ப பக்தர்கள், சனிபகவானின் ஈசனாகிய ஸ்ரீ தர்மசாஸ்தாவின் பக்தர்கள். சனீஸ்வரனை மகிழ்விக்கும் விதமாக கருமை, கருநீலம் ஆகிய நிறங்களிலேயே உடை அணிகின்றனர்.
சபரிமலையில் ஐயனைத் தரிசிக்க ஆண்களுக்கு வயது வரம்பு இல்லை.
ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை துவங்கும் முன் 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும். விரத காலம் முழுவதும் தங்கள் குருசாமியால் அணிவிக்க பெற்ற துளசி மாலையையோ, ருத்ராட்ச மாலையையோ கழுத்தில் தவறாது அணிந்திருக்க வேண்டும்.
ஐயப்பன் கருவறை தரிசனம் செய்யும்போது பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த நெய்யை சமர்ப்பிக்கிறார்கள். இந்த நெய்யை அளித்து மெய்யை பெற வேண்டும், தங்களுக்கு ஆத்மானுபவம் கிட்ட வேண்டும் என்ற வேண்டுதலே இதன் அடிப்படை நோக்கம்.
இருமுடி நிறங்கள்
முதல்முறை விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வருவோர் கன்னிசாமிகள். இவர்கள் செந்நிறத்தில் இருமுடியணிவார்கள்.
கன்னிசாமிகள் தவிர்த்து இதர ஐயப்ப பக்தர்கள் கருப்பு வண்ணத்தினாலான இருமுடியையோ அல்லது நீல வண்ணத்தினாலான இருமுடியையோ பயன்படுத்தி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.
ஐயப்பனின் மூல மந்திரம்
ஓம் க்ரும் நம பராய
கோப்த்ரே நம
கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய கடவுள் ஐயப்பன் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.