Adobe நிறுவனம் அடோப் ஃபோட்டோஷாப்(Adobe Photoshop) மற்றும் அடோப் இல்லஸ்ட்ரேட்டர்(Adobe illustrator) ஆகிய இரண்டு உலகப் புகழ்பெற்ற மென்பொருள்களின் இணைய(Web) பதிப்புகளில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த இணைய பதிப்புகள் கீழே குறிப்பிட்டுள்ள மென்பொருளை கணினியில் நிறுவாமல் இணைய உலாவி(Web Browser) மூலம் பயன்படுத்த அனுமதிக்கின்றன.
Cloud PCகளுக்கான மைக்ரோசாப்டின் விண்டோஸ் 365 சேவையைப் பற்றி முன்பே நாம் உங்களுக்கு தெரிவித்தது நினைவிருக்கலாம்.
இந்த இரண்டு அடோப் மென்பொருளின் இணையப் பதிப்பும் மேலே குறிப்பிட்டுள்ள Windows 365 சேவையைப் போலவே உள்ளது.
ஆனால் இது அடிப்படைத் திருத்தம் செய்யும் வசதியை மட்டுமே தருகிறது. சிக்கலான போட்டோ எடிட்டிங் ( Photo Editing)பணிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றாலும், பொதுவான வேலைகளுக்கு எங்கிருந்தும் போட்டோ எடிட்டிங் செய்யும் வசதி இங்கு காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
இந்த இணையப் பதிப்பானது சாதாரண PSD கோப்புகள் மற்றும் AI கோப்புகளுடன் வேலை செய்யும்.
கருத்துகளை மதிப்பாய்வு செய்ய ஃபோட்டோஷாப் டெஸ்க்டாப்(Photoshop Desktop) பயன்பாட்டில் புதிய Feedback Panel சேர்ப்பதாக அடோப் கூறியுள்ளது.
பயனர்கள் இந்த இணைய பதிப்பின் பீட்டா பதிப்பை அணுக முடியும் எனவும், இதற்கு Adobe Creative Cloud இல் உறுப்பினர் ஆக இருத்தல் கட்டாயமாகும். அதுமட்டுமில்லாமல் ஃபோட்டோஷாப்பிற்கான பல புதிய அம்சங்களில் வேலை செய்வதாகவும் அடோப் கூறியது.